தமிழீழம் கோரிக்கை நியாயமானது
தமிழ் மக்கள் தமிழீழம் கோருவது நியாயமான ஒன்றாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்ட காலமாக தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள மாற்றங்கள் காரணமாக இவ்வாறான கோரிக்கை வலுப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பெரும்பான்மை இன சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எங்களுக்கு செய்யவில்லை என்றால் எங்களுக்கு தனி நாடு வழங்குங்கள் என தமிழ் மக்கள் தமிழீழம் கோருவது நியாயமான ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சிறிய நாடு. இங்கு பெருமளவு மக்கள் இல்லை. பல தசாப்தங்களாக பிரிந்து வாழும் மக்கள் பகுதியினர் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தி கொள்ளாமையே போர் நிலை ஏற்பட்டது.
நான்கு மதங்களை சேர்ந்த மககள் நாட்டில் வாழ்ந்த போதிலும், ஒருவருக்கு ஒருவர் ஒருபோதும் பேசிக் கொள்வதில்லை. நாட்டில் பாரிய மோதல் ஏற்படுவது அது போதுமானதாகும்.
ஒருவருடைய மொழியை ஒவ்வொருவராலும் பேச முடியாமையே நாட்டில் கொடூர யுத்தம் ஏற்படுவதற்கான பிரதான காரணம்.
சமூகங்கள் சகஜமாக இருந்திருந்தால் பிரபாகரன் என்ற ஒருவரை உருவாக்காமல் இருந்திருக்கலாம்.
தமிழ், முஸ்லிம் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மந்தமான நிலையில் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply