காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல்
காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்தப்படி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு அருகே சன்ஜவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுமார் 400 பேர், ஊடுருவல் செய்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்தியா முழுவதும் நாசவேலை செய்வதற்கு அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத் துறை இந்தியாவை உஷார் படுத்தியுள்ளது.
இதையடுத்து காஷ்மீர் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் மீண்டும் அவந்திபோரா சி.ஆர்.பி.எப். முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவ தரப்பும் பதிலடி கொடுத்துப்பட்டது. தற்போது அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தீவிரவாதிகள் குடியிருப்பு பகுதியில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று அதிகாலை காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பலாகோட் செக்டாரில் ஊடுருவல் முயற்சிகளில் ஈடுபட்ட தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 6 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply