வேலை நிறுத்தத்தின் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 70 மில்லியன் ரூபா நாட்டம்
இலங்கையில் தற்பொழுது அனைத்து தொடருந்துச் சேவைகளும் வழமை போன்று நடைபெற்று வருவதாக ஸ்ரீ லங்கா ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்கள் பொலன்னறுவையில் அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, பணிப்பகிஸ்கரிப்பை இடைநிறுத்தியுள்ளனர்.
வேலை நிறுத்தத்தின் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 70 மில்லியன் ரூபா நாட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
பணிப்பகிஸ்கரிப்பு இடம்பெற்ற காலத்தில் பயணிகளுக்கான பருவகால சீட்டு விநியோகிக்கப்படாமை, பொருட்கள் மற்றும் பொதிகள் ஏற்றிச்செல்லப்படாமை, தபால் ரயில் சேவையில் ஈடுபடாமை, ஆசன ஒதுக்கீடுக்காக பணம் செலுத்தப்பட்டமை, குளிரூட்டி பொருத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை போன்றவையினாலேயே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply