விஜயகாந்த் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்

முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் கடந்த 7 ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் நினைவிடத்தில் தினந்தோறும் அவரது கட்சியை சார்ந்தோரும், தமிழக பொதுமக்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். கருணாநிதி அவர்களுடன் பழகிய திரைப்பிரபலங்களும் கூட அவரது நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான கருணாநிதியின் மறைவின் போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த காரணத்தினால் இன்று அதிகாலை சென்னை திரும்பியவுடன் நேரடியாக கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். கருணாநிதியின் நினைவிடத்தில் விஜயகாந்த் வெடித்து அழுதது உருக்கமான காட்சியாக இருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply