லிபியாவில் சிறையை உடைத்து 400 கைதிகள் தப்பி ஓட்டம்
லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் சர்வாதிகாரி கடாபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டம் நடத்தினர். அதில் கடாபி கொல்லப்பட்டு அவரது சகாப்தம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் தீவிரவாத குழுக்களின் கை ஓங்கியது. தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் தீவிரவாதிகள் குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்திக் கொண்ட அப்பன் ஜாரா என்ற சிறையில் உள்ள கைதிகள் கலவரத்தை ஏற்படுத்தினர். பின்னர் அங்கிருந்து 400 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர்.
தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய சிறைக் காவலர்கள் அங்கு ஏற்பட்ட கலவரத்தை அடக்கவில்லை. தப்பி ஓடிய கைதிகளை தடுத்து நிறுத்தவில்லை.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆதரவாளர்கள் ஆவர்.
கடந்த ஒருவாரமாக லிபியா தலைநகரான திரிபோலியில் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply