ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில் ‘பிக் டிக்கெட்’ லாட்டரி குலுக்கல் நடந்தது. அதில் இந்தியாவை சேர்ந்த ஜார்ஜ் மாத்யூ என்பவருக்கு முதல் பரிசுத்தொகையான 12 மில்லியன் திர்காம் கிடைத்தது.இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜார்க்மாத்யூ வாங்கிய 175342 என்ற எண் கொண்ட லாட்டரிக்கு இந்த பரிசுதொகை கிடைத்துள்ளது.
இந்த லாட்டரியில் மேலும் 6 இந்தியர்களுக்கும் பரிசுதொகை விழுந்துள்ளது. அண்மை காலமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் பல இந்தியர்களுக்கு லாட்டரியில் பரிசுகள் கிடைத்து உள்ளன.
கேரளாவை சேர்ந்த தாடுஜா மாத்யூவுக்கு கடந்த ஜுலையில் முதல் பரிசு தொகையான ரூ.13 கோடியே 65 லட்சம் கிடைத்தது. அதற்கு முன்பு ஏப்ரலில் துபாயில் வசிக்கும் இந்திய டிரைவருக்கு ரூ.23 கோடி முதல் பரிசு விழுந்தது.
கடந்த ஜனவரியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் கேரளாவை சேர்ந்த மற்றொருவருக்கு அபுதாபி லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு தொகை கிடைத்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply