தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வு கிட்டுமா?- 13ஆவது நாளாக போராட்டம் நீடிப்பு

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது விடுதலையை வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) 13ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்டகாலமாக சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள், கடந்த 14ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோரின் உடல் நிலைமை பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த 8 பேரின் போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்து நேற்று மேலும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இணைந்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளுக்கு உரிய தீர்வை வழங்க உரிய தரப்பினர் இதுவரை முன்வராதுள்ள நிலையில், இவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply