ஈரான் தனது எரிபொருளை விற்பனை செய்யுமானால் எரிபொருள் விலை குறையும் : மக்ரோன்

உலக சந்தையின் எரிபொருளின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்திருந்த கண்டனத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் பதிலளித்துள்ளார்.ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படாத பட்சத்தில் எரிபொருட்களின் விலைகள் மிக உயர்வடையாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் தனது தர்க்கத்திலிருந்து ஒரு முடிவுக்கு வருவாராயின், ஈரான் தனது மசகு எண்ணெய்யை விற்பனை செய்யும். அதனூடாக எரிபொருட்களின் விலைகள் தொடர்பாக ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அவர் காண்பார்” என்று டொனால்ட் ட்ர்ம்ப் தொடர்பாக மெக்ரன் தெரிவித்துள்ளார்.

“அது அமைதிக்கும், சர்வதேச எரிபொருள் விலையேற்றத்திற்கும் நன்மை பயக்கும். எனக்கு பதில் ஒன்று கிடைக்காத பட்சத்தில் நியாயமாக மேற்கொண்டு செல்லமுடியாத நிலை உள்ளது.

அது ஒரு பொருளாதார யதார்த்தம் … விநியோகம் மற்றும் அதிகாரபூர்வமான வேண்டுகோள்” என்று ஐக்கிய நாடுகளின் பொது அமர்வில் மெக்ரன் தனது பதிலை விபரித்தார்.

ஆனால், அமெரிக்காவும் பிரான்ஸும் உடன்பாடு காணக்கூடிய பகுதிகள் – குறிப்பாக சிரியா தொடர்பில் ஏற்படுத்திக் கொண்டுள்ள உறுதிப்பாடுகள் தொடர்பாக மெக்ரன் விளக்கமளித்தார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உலகத் தலைவர்களுக்கு முன்னால் ஜனாதிபதி மெக்ரன் இந்த கருத்துக்களை வௌியிட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply