சட்ட நடவடிக்கைகள் தீவிரம் – உதவி செய்த முஸ்லிம்களுக்கு நன்றி : பிரதமர்

பயங்கரவாத மற்றும் தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்..

கொழும்பு அதிமேற்றிராணியார் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இன்று இடம் பெற்ற விசேட தேவ ஆராதனையில் கலந்துகொண்ட பின்னர் பிரதமர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள ஜிகாத் வாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். இதுவே அரசாங்கத்தின் முக்கிய கருமமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த வருடம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பயங்கரவாத தடுப்பு நகல் பிரேரணை குறித்து வாதங்கள் நடத்தப்பவிருப்பதா குறிப்பிட்ட பிரதமர் . தீவிரவாதிகளின் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டெடுப்பதற்கும் தீவிரவாதிகளை கைது செய்வதற்கும் முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் பெரிதும் உதவி செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்தார். அதற்காக முஸ்லிம் சமூகத்திற்கு அவர் நன்றிகளையும் தெரிவித்தார். 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply