இலங்கையில் வெடிகுண்டுகளை கண்டறிய ராணுவத்துக்கு நாய்களை பரிசாக வழங்கிய பேராசிரியை
இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னரும், இலங்கையில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நீடிக்கிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து, வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியையான ஷிரு விஜெமானே என்பவர், தான் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த 5 நாய்களை, வெடிகுண்டுகளை கண்டறியும் பணிக்கு பயன்படுத்தி கொள்ள ராணுவத்துக்கு பரிசாக வழங்கி உள்ளார். ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தை சேர்ந்த இந்த 5 நாய்களும், ஒரே குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். இதில் தாய் நாய்க்கு 2 வயதும், மற்ற நாய்களின் வயது 6 மாதங்களும் ஆகின்றன.
இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி பிரிகேடியர் ஏ.என்.அமரசேகராவை கொழும்புவின் நாரஹெம்பிடா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்து அவரிடம் தனது 5 நாய்களையும் ஷிரு விஜெமானே ஒப்படைத்தார். ராணுவத்தின் வெடிகுண்டுகள் கண்டறிந்து அகற்றும் துறையில் இந்த நாய்கள் சேர்க்கப்பட்டு இலங்கை ராணுவப் படைப்பிரிவு பொறியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply