ஹஜ் யாத்திரை, சமத்துவத்தின் செய்தியை உலகிற்கு சொல்கிறது : ஜனாதிபதி
சவால்களும் தடைகளும் நிறைந்த இன்றைய உலகில் பரஸ்பரம் மனிதர்களுக்கிடையில் இருக்க வேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவதற்கு, தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் சிறந்ததோர் முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் இறுதிக் கடமையாகிய ஹஜ் யாத்திரையானது, உடல், உள மற்றும் பொருளாதார ரீதியில் மனதிருப்தியை அடையும் நிலையை எட்டிய ஆண், பெண் இருபாலாரும் மேற்கொள்ள வேண்டிய ஒரு மதக் கடப்பாடாகவே கருதப்படுகின்றது.
நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஈகை மற்றும் ஹஜ் யாத்திரை ஆகிய ஐம்பெரும் தூண்களின் மீது எழுந்து நிற்கும் இஸ்லாமிய மார்க்கமானது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையிலான உன்னத பிணைப்பையே எடுத்துக்காட்டுகின்றது.
புனித ஹஜ் யாத்திரை மூலம் சமத்துவம் பற்றிய செய்தியை சுமந்தவர்களாக ஹஜ் யாத்திரையில் பங்கேற்றோர் உட்பட நமது நாட்டிலும் உலகெங்கிலும் பெருநாள் கொண்டாடும் சகல சகோதர இஸ்லாமியர்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply