பால்கனியில் யோகா செய்தபோது 80 அடி உயரத்தில் இருந்து விழுந்த கல்லூரி மாணவி
மெக்சிகோவின் நியூவோ லியோன் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் அலெக்ஸா தெரசா (வயது 23). கல்லூரி மாணவியான இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது தளத்தில் உள்ள பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, அவர் தன்னுடன் இருந்த தோழியிடம் தான் கடினமான யோகாவை செய்யப் போவதாகக் கூறி, பால்கனியின் விளிம்பில் உள்ள கண்ணாடியை பிடித்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கினார்.
அப்போது தோழி அவரை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தார். சில வினாடிகள் தலைகீழாகத் தொங்கிய படி இருந்த அலெக்ஸா தெரசா, சற்றும் எதிர்பாராத வகையில் பிடி நழுவி கீழே விழுந்தார்.
சுமார் 80 அடி உயரத்தில் இருந்து, தரையில் விழுந்ததில் தெரசாவின் 2 கால்களும் முறிந்தன. மேலும் அவரது கைகள், முதுகு, இடுப்பு, தலை உள்ளிட்ட இடங்களில் பலமான காயங்கள் ஏற்பட்டன.
ஒட்டுமொத்தமாக அவரது உடலில் 110 எலும்புகள் உடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply