மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே இடைக்கால அரசாங்கம் : மஹிந்த

ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றுவதற்காகவே, இடைக்கால அரசாங்கமொன்றை ஸ்தாபித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மேலும், ஓர் அரசாங்கத்தில் 16 அமைச்சர்கள் என்ற எண்ணிக்கையானது, மிகவும் சவாலான விடமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருணாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இன்று எம்முன்னாள் மிகப்பெரிய பொறுப்பொன்று காத்துக்கொண்டிருக்கிறது. இது இடைக்கால அரசாங்கமாகும்.

16 அமைச்சர்கள்தான் இதில் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையானது மாகாணசபைகளை 4 ஆக குறைப்பதற்கு சமமானதாகும்.

இதில் நிறைய சிக்கல்களும் சவால்களும் காணப்படுகின்றன. 16 அமைச்சரவைக்கும் உரிய அமைச்சர்களை தெரிவு செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

திறமையானவர்கள் பலர் இருந்தாலும், நாட்டின் நலனைக் கருத்திற்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளோம்.

சிலருக்கு இதுதொடர்பாக மனக்கவலை இருந்தாலும், நாட்டின் நலனுக்காக இவ்வாறான முடிவு எடுத்தமையை இட்டு தாங்கள் பெரிதாக வருந்தவில்லை என்று கூறியுள்ளார்கள்.

நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாகவே தற்போது செயற்பட்டு வருகிறோம்.

7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதனைத்தான் நாம் குறிப்பிட்டிருந்தோம். அதற்கிணங்கவே, நாம் தொடர்ச்சியாக செயற்படுவோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply