ஈஸ்டர் தாக்குதல் புனித போரா?தமிழினத்தோடு சீண்டும் அதவுல்லாவிற்கு கடும் எச்சரிக்கை : சிறீரெலோ

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகம் ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள் இங்கு வடக்கு தமிழன், கிழக்கு தமிழன், மலையக தமிழன், கொழும்பு தமிழன், வன்னி தமிழன் என்று பிரிவினைகளை உருவாக்கி தமது சுய அரசியல் இலாபங்களை அடைய முயற்சிக்கும் கீழ்த்தர அரசியல்வாதிகளே உங்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கிறோம்.

உங்கள் வக்கிரக அரசியலுக்காக ஒற்றுமையாக வாழும் தமிழ் சமூகத்தை பிளவு படுத்த நினைக்காதீர்கள் உலக வரலாற்றில் தமிழரின் வீரமும் தமிழ் இனத்தின் வரலாற்றையும் கற்றுக்கொள்ளுங்கள் ஈழ விடுதலைக்காக தம் உயிரை துச்சமென நினைத்து ஆயுதம் ஏந்தி போராடி தம் உயிர்களை நீத்த பல போராளிகள் நாம் தமிழினம் என்ற ஒன்றை மாத்திரமே மனதில் கொண்டு உயிரை நீத்தார்களே தவிர யாரும் வேற்றுமை பார்த்து போராட்டத்திற்கு வரவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். பொறுப்புவாய்ந்த ஒரு முன்னால் அமைச்சர் பொதுநிலையில் இவ்வாறான கருத்தை முன்வைத்திருப்பது என்பது அவரது முட்டாள் தனத்தையும் அவரது உள்ளத்தில் தமிழர்கள் பற்றிய மனநிலையையும் தெட்டத்தெளிவாக காட்டுகிறது எனவே தமிழ் மக்களை இவ்வாறு கீழ்த்தரமாக நினைத்திருக்கும் அதாவுல்லா மற்றும் அவர் போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் இத்துடன் உங்கள் மனதில் இருந்து வக்கிரக எண்ணங்களை மறந்து விடுங்கள் என கேட்டுக்கொள்கிறோம்.

இதேவேளை குறித்த நிகழ்ச்சியில் பயங்கரவாதிகளை அழித்தோம் என்றும் அதாவுல்லா அவர்கள் கருத்து தெரிவித்திருந்தார் அதாவுல்லா அவர்களுக்கு ஒன்றை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம் இலங்கையில் இடம்பெற்றது உரிமைக்கான விடுதலைப்போராட்டமே தவிர பயங்கரவாதமோ தீவிரவாதமோ இல்லை அது பயங்கரவாதம் என்றால் ஈஸ்ரர் தினத்தன்று மத ஸ்தலங்களில் குண்டு வெடித்து பல உயிர்களை பலியெடுத்தது என்பது புனித போரா? என்ற கேள்வியையும் எழுப்புகிறோம். எனவே தொடர்ந்தும் எம் இனத்தை சீண்டி பார்க்க நினைத்தால் அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என சிறி தமிழீழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ) எச்சரிக்கை விடுக்கிறது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply