அக்கரைப்பற்றில் இளைஞன் ஒருவர் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து பலி

Sunday, March 23rd, 2025 at 9:07 (SLT)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேசத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என கருதப்படும் 16 வயது இளைஞன் கலப்பையில் சிக்குண்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் முல்லையில் தமிழ் அரசு கட்சியினர் கலந்தாய்வு

Sunday, March 23rd, 2025 at 9:02 (SLT)

உள்ளூராட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதுதொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்தினருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வேட்பாளர்களுக்குமிடையில் சனிக்கிழமை (22) கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

பெண்களுக்கான தடைகளை அடையாளம் கண்டு தீர்வு வழங்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் தெரிவிப்பு

Sunday, March 23rd, 2025 at 7:05 (SLT)

தேசிய ரீதியில் மாத்திரமன்றி பூகோள ரீதியாகவும் பெண்களுக்கு காணப்படும் அழுத்தங்கள், தடைகள் மற்றும் அதற்கென காணப்படும் பாரபட்சங்களை அடையாளம் கண்டு அதற்கு தீர்வு வழங்குவதற்கென துரித தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தமிழரசுக் கட்சிக்கு ஒரு சட்டம் ஏனைய கட்சிக்கு வேறு சட்டம் : மணிவண்ணன் குற்றச்சாட்டு

Sunday, March 23rd, 2025 at 7:01 (SLT)

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி மணிவண்ணன்குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் 350 கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா மீட்பு

Saturday, March 22nd, 2025 at 13:14 (SLT)

யாழ்ப்பாணத்தில் பெருமளவான கேரள கஞ்சா இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது. யாழ்ப்பாணம் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இராணுவ புலனாய்வு பிரிவினரும் பருத்தித்துறை பொலிஸாசாரும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர். 24 பொதிகளில் 350 கிலோ எடையுடைய கேரளா மீட்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி மன்ற தேர்தல்- ஈ.பி.டி.பியினர் விசேட கலந்துரையாடல்

Saturday, March 22nd, 2025 at 13:11 (SLT)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், ஒவ்வொரு சபைகளிலும் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொள்வதே எமது முயற்சிக்கள் இருக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

மேலும் வாசிக்க >>>

குடும்ப தகராறு மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்

Saturday, March 22nd, 2025 at 13:06 (SLT)

குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம பகுதியில் பதிவாகியுள்ளது. இன்று (22) அதிகாலை 5.00 மணியளவில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

கருணா – பிள்ளையான் மீண்டும் இணைவு

Saturday, March 22nd, 2025 at 13:03 (SLT)

மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ புதிய கூட்டமைப்பில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் இணைந்து கொண்டதுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு றிவோரா ஹோட்டலில் கைச்சாத்தானது.

மேலும் வாசிக்க >>>

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய வேண்டும் : கஜேந்திரகுமார்

Saturday, March 22nd, 2025 at 7:06 (SLT)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதென்றால் ஆகக் குறைந்தது அங்கு தேவைகளை கண்டறிய கூடிய முழுமையான ஆய்வுகளை செய்த பின்னரே நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் அதை விடுத்து அரசாங்கமே முடிவுகளை எடுப்பதால் அங்கே உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது சுபோசாவா : சபையில் தர்க்கம்

Saturday, March 22nd, 2025 at 7:02 (SLT)

சதொச விற்பனை நிலையம் ஊடாக வழங்கப்படும் நிவாரண பொதியில் உள்ளடக்கப்படுவது சமபோசாவா, அல்லது சுபோசாவா என்பது தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும், எதிர்க்கட்சியின் உறுப்பினர் டி.வி. சானக்கவுக்கும் இடையில் கடும் தர்க்கம் நிலவியது.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Saturday, March 22nd, 2025 at 6:58 (SLT)

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிவரை நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் 336 உள்ளுராட்சிமன்றங்களுக்காக சுமார் 2900 குழுக்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து விசாரணை செய்யுங்கள் : இளங்குமரன்

Saturday, March 22nd, 2025 at 6:47 (SLT)

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை : முஜிபுர் எம்.பி கேள்வி

Saturday, March 22nd, 2025 at 6:42 (SLT)

எதிர்க்கட்சிகளின் பட்டியலை வெளியிடும் அரசாங்கம் தனது ஆட்சியில் சுங்கத்தின் பரிசோதனைகள் எதுவும் இல்லாமல் வெளியில் அனுப்பிய 323 கொள்கலன்கள் யாருடையது என்ற தகவலை இதுவரை வெளியிடவில்லை. அதனையும் வெளியிட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் சூரிய மின் உற்பத்தித் திட்டங்களை மட்டுப்படுத்தியுள்ளதாக சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

Saturday, March 22nd, 2025 at 6:34 (SLT)

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் 165 ஆவது பக்கத்தின் படி சூரிய சக்தியின் மூலம் 2000 மெகாவொட் மின்சாரத்தை படிப்படியாக தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்ப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின் மேற்கொள்ளும் தீர்மானங்கள் அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகக் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

Saturday, March 22nd, 2025 at 6:30 (SLT)

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>