தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும்:சிவஞானம் சிறீதரன்

Monday, April 29th, 2024 at 10:49 (SLT)

18 இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

மேலும் வாசிக்க >>>

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி:இராமலிங்கம் சந்திரசேகரன்

Monday, April 29th, 2024 at 10:43 (SLT)

வடக்கில் தகுதியற்றவர்களுக்கும் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய பாதாள உலக உறுப்பினர் ஒருவர் கைது

Monday, April 29th, 2024 at 10:38 (SLT)

பிரதான பாதாள உலக உறுப்பினர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த நிலையிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

களுத்துறையில் தனித்துவமான அறுவை சிகிச்சை

Monday, April 29th, 2024 at 10:35 (SLT)

நாட்டிலேயே முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான அறுவை சிகிச்சை களுத்துறை போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தாயே குழந்தையை கொலை செய்த கொடூரம்

Monday, April 29th, 2024 at 10:32 (SLT)

மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலந்துருவ வீதி, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 9 மாத பெண் குழந்தையொன்று கொலை செய்யப்பட்டுள்ளது. நேற்று (28) காலை குழந்தையை யாரோ எடுத்துச் சென்றதாக குழந்தையின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ரஃபா நகர் மீதான தாக்குதலை நிறுத்துமாறு பாலஸ்தீன் அமெரிக்காவிடம் வேண்டுகோள்

Monday, April 29th, 2024 at 7:13 (SLT)

ஒரு மில்லியனுக்கும் அதிகளவான மக்கள் தஞ்சம் புகுந்துள்ள தெற்கு காசா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்துமாறு பாலஸ்தீன் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

புலம்பெயர் இலங்கையரின் தற்போதைய தெரிவு தேசிய மக்கள் சக்தி: சுவீடனில் உரையாற்றிய அனுர

Monday, April 29th, 2024 at 7:08 (SLT)

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் தெரிவாக தேசிய மக்கள் சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எனக்கு எதிரிகள் இல்லை 220 இலட்சம் பேரும் எனது நண்பர்களே : சஜித் பிரேமதாச

Monday, April 29th, 2024 at 7:03 (SLT)

பாடசாலை நிகழ்வொன்றில் தான் நண்பர்களே என விழித்தேன். இந்த மாணவர்கள் கூட எதிரிகள் அல்ல, நண்பர்கள். நட்பின் கரமே நீட்டப்பட்டது, பிள்ளைகளுக்கான நிலைபேறான வளமான கல்விக்கு உதவிக்கரம் நீட்டவே பாடசாலைகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நண்பர்களே என விழித்து பேசுவதையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். இனம், மதம், வர்க்கம், கட்சி, சாதி வேறுபாடின்றி 220 இலட்சம் மக்களும் எனது நண்பர்களே, இவ்வாறே நான் பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சஹ்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கவில்லை :டிரான் அலஸ்

Monday, April 29th, 2024 at 6:56 (SLT)

பயங்கரவாதி சஹ்ரானுடன் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாக எப்.பி.ஐ.உட்பட சர்வதேச விசாரணைகளிலும், குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்த விசாரணைகளிலும், ஆணைக்குழு விசாரணைகளிலும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே பொய்யான கருத்துக்களை குறிப்பிடுவதை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வாகன இறக்குமதி தடை நீக்கப்படும் விசேட கலந்துரையாடல் ஆரம்பம் அமைச்சர்

Sunday, April 28th, 2024 at 12:45 (SLT)

நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பசில் கூறுவதற்கு ஏற்ப ஆட நான் பொம்மை கிடையாது: விஜயதாச

Sunday, April 28th, 2024 at 12:41 (SLT)

பசில் ராஜபக்‌ச கூறுவதற்கேற்ப ஆட நான் ஒன்றும் பொம்மை கிடையாது என்று நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : சிறப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா

Sunday, April 28th, 2024 at 10:54 (SLT)

ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் இருந்து ஐரோப்பாவிற்கு கடத்தப்பட்ட குழந்தைகள்: விரிவான விசாரணைகள் ஆரம்பம்

Sunday, April 28th, 2024 at 10:49 (SLT)

இலங்கையின் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இருந்து பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

நாட்டை விட்டு வெளியேறுகின்றாரா மைத்திரி?: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

Sunday, April 28th, 2024 at 10:44 (SLT)

தான் தென்கொரியாவில் வசிக்கப் போவதாக தெரிவித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈராக்கில் பிரபல Tik Tok பெண் சுட்டுக் கொலை

Sunday, April 28th, 2024 at 6:38 (SLT)

ஈராக்கில் பிரபல Tik Tok பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உந்துருளிக்கு வருகை தந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண்ணை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>