மஹிந்த சிந்தனை என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான சந்தர்ப்பத்தில் புகழ்மிக்க திட்டங்களடங்கிய வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு வரைவாகும். இது ஒரு தேர்தல் உறுதி மாத்திரமன்றி பொதுவாகவே செயல்படுத்த முடியுமான செயலாற்றலுக்குக் கொண்டுவரக் கூடிய ஒரு திட்டமாதலால் இது ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு திருப்பமாகவும் உள்ளது. இத்திட்டத்தினை முற்படுத்தும் போது இலங்கைச் சமூகம், பிரிந்து வேறுபட்டு இருந்ததோடு குரோதமனப்பான்மையும் மிக மும்முரமாகவே இருந்தது.
இந்த கோபதாபம் அகற்றப்பட்டு தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்தி மனித மனங்களில் பலவந்தமாக புகுத்தப்பட்ட தாழ்வு நிலையை அகற்றி சிறந்த சமூக கட்டமைப்பொன்றை உருவாக்குவதே “வடக்கின் வசந்தமாகும்”. இந்த தேசிய வேலைத் திட்டத்தினூடாக ‘பண்பாட்டு விழுமியங்களை மேம்படுத்துதல், சிசு திரிய,’ போன்றவற்றை தேசிய ரீதியில் அமுல்படுத்தி சமூக மேற்பாட்டிற்கான பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடையும் பொருட்டு சமூக அபிவிருத்தி அலுவல்கள் சம்பந்தமான ஆணையாளர் பதவியொன்றையும் நிர்மாணித்துள்ளதோடு கஷ்டப் பிரதேசங்கள் மற்றும் வளம் குன்றிய பகுதிகளும் உள்ளடக்கப்பட்டவாறு செயல்படுவதற்கு அந்த ஆணையாளருக்கு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »