மிகைப்படுத்தப்பட்ட வரலாறில் தொலைந்து விட்ட வீரம்

June 20th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

கையேந்தி நிற்கும் தமிழ்ப் பாசிசம்.

மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான, இராணுவ பலம் பொருந்திய நீண்டகால வரலாறுடையதாக எண்ணப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரச இராணுவத்தால் கடந்த மேமாத நடுப்பகுதியில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. விடுதலைப்புலிகள் எக்காலத்திலும் யாராலும் வெல்லப்படமுடியாத, அழிக்கமுடியாத ஒரு இயக்க வடிவமைப்பைக் கொண்டதாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த வரலாறை முறியடித்திருக்கிறது இலங்கை அரசு. கடந்த முப்பது வருட காலத்தில் அவ்வப்போதிருந்த அரசபடைகளால் யுத்தம் நடைபெற்றபோதும் விடுதலைப்புலிகளுடன் பெருஞ்சமர் புரிந்த போதும் பலத்த இழப்புக்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் மாறிமாறி இருசாராரும் பெற்றுக்கொண்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வேட்டை முடிந்து விளையாட்டு…

June 15th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலியின் சித்தார்ந்தம் இலங்கை மக்களுக்குச் செய்த அட்டூழியங்களைக் கூட்டிக்கழித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும், புலி அழிந்தே ஆக வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.

ஆனாலும், புலி செய்ததற்கு சரி சமமாக மக்களை வதைக்கும் இன்னும் எந்த சக்தியையும் அனுமதிக்கக்கூடாது என்பதிலும் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள் என்பதை மறுக்கக் கூடாது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது

June 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் கூடாரம் போடுகின்றது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடக்கவுள்ள தேர்தல்களில் வேட்பாளர்களாக நிற்பதற்கு ஆட்களைத் தேடுகின்றார்கள். ஒருகாலத்தில் வேட்பாளர் ‘ரிக்கற்று’க்காக ஆட்கள் இவர்களைத் தேடி வந்தார்கள். இப்போது இவர்கள் வேட்பாளர்களைத் தேடி அலைகின்றார்கள். தமிழ் அரசியல் அரங்கில் ஒரு மாற்றத்தை இது கோடி காட்டுகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யதார்த்தமான அணுகுமுறையைப் பின்பற்றினால் அரசியல் தீர்வு சாத்தியம்

June 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பயங்கரவாதம் தோற்கடிக்கப் பட்டுவிட்டது. அடுத்தது அரசியல் தீர்வு. ஒன்றிரண்டைத் தவிர மற்றைய கட்சிகள் அரசியல் தீர்வு பற்றி இப்போது பேசுகின்றன. புலிகள் தோற்கடிக்கப்படும் வரை ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை. இப்போது அவர்களும் அரசியல் தீர்வு பற்றிப் பேசுகின்றார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசுடன் நெருங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு

June 10th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஸ்ரீலங்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டப் பின் விடுதலைப் புலிகளினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் துணையை நாடியிருப்பதனை அறியக் கூடியதாக இருக்கின்றது.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு.கிஷோர் சிவநாதன் அண்மைக் காலமாக அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருவது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் களைகட்டியுள்ளன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்வாணியும் தகவல்களும்

June 10th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

“ புலிகளைக் குறைத்து மதிப்பிட முடியாது. இதனை சிங்களவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு புலிகள் இயக்கம் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது. எமது சிரேஷ்டத் தலைவர் சிங்கள இனத்திற்கு அதன் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார் ” – வி.பாலகுமாரன். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சர்வதேச சமூகமோ அல்லது இந்தியாவோ எதையுமே தமிழர்களுக்கு உருப்படியாகச் செய்யுமென்று இனிமேலும் வீணாக நம்பாதிருப்போமாக!

June 5th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கைத் தமிழ் மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களின் வரலாற்றிலே இன்று உள்ளதைப் போன்று முன்னர் என்றுமே நம்பிக்கை இழந்த நிலையில் ஒரு அரசியல் வெற்றிடத்தில் இருந்ததில்லை. இலங்கை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மிதவாதத் தமிழ்த் தலைவர்கள் முன்னெடுத்த மூன்று தசாப்தகால அகிம்சைப் போராட்டங்களும் அவற்றுக்குப் பின்னரான மூன்று தசாப்தங்களில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டங்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வடக்கு தேர்தல்களில் தமிழ் கட்சிகள், பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது பயனுள்ளது!

June 5th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா நகரசபைக்கும் நடைபெறவுள்ள தேர்தலுக்கான, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலை சிறிது காலத்திற்காவது ஒத்திவைக்கும்படி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான மூன்று கட்சிகள் கொண்ட ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணி விடுத்த கோரிக்கையை அரசாங்கம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே தேர்தல் நடப்பது நிச்சயமாகிவிட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் வடக்கில் ஜனநாயகம் காலூன்றும்

June 4th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் தேர்தல் நடத்துவதென அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள சகலரினதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வானவில் போல் வேற்றுமையில் ஒற்றுமை காணல் வேண்டும்

May 31st, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் செயலாளர் நாயகம் தி. சிறீதரனுடன் நேர்காணல்

புலிகளுக்கு பின்னரான அரசியல் சூழல் எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்?

கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் தலைமைகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வந்ததாலும் சமூக உணர்வுள்ள பல மனிதர்கள் இல்லாதொழிக்கப்பட்டதாலும் பாரிய தலைமைத்துவ வெற்றிடமொன்று தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற கற்பிதம் உருவாக்கப்பட்டது. ஜனநாயக இடைவெளி அடியோடு இல்லாதொழிக்கப்பட்டது. மாறுபட்ட சிந்தனைகள் உயிராபத்தை விளைவிக்கும் விடயமாக இருந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் சிந்தனை சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

முன்னொரு காலத்தில் யுத்தம் இருந்தது!

May 30th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

மகிந்த மாத்தய எங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்

அரசு என்பது ஆச்சிரமம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்போ
அல்லது தேர்தல்களை நடத்தி உறுப்பினர்கள் மந்திரிகள் முதன்மந்திரி உள்ளிட்ட பாராளுமன்ற அமைப்புமுறைமூலமாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்போ அல்ல என நாம் பட்டுணர்ந்துள்ளோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

’இறந்த தலைவனை’ நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்

May 28th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இருபது வருடங்களுக்கு முன்பாக தாயகத்தின் முதல் இதழை வெளியிடுவதற்காக அச்சிட்டுத் தயார் செய்து விட்டு மறுநாள் வினியோகிக்கும் உத்தேசத்துடன், இரவு வேலைக்கு சென்று நள்ளிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கனடாவில் இருந்த கூட்டணி பா.உ. ஒருவருக்கு நெருக்கமாக இருந்த ஒருவர் எலிவேட்டரில் கண்ட போது, சக தமிழர் என்பதை உணர்ந்து அமிர்தலிங்கத்தைச் சுட்ட லேட்டஸ்ட் செய்தியைச் சொன்னார். அத்துடன் ‘றோ தான் செய்திருக்கு’ என்ற அரசியல் ஆய்வையும் கூடவே போனஸாக தந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரனின் உடலம் அடையாளம் காணப்பட்டது : இராணுவத் தளபதி

May 19th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது சடலம் மருத்துவ ரீதியாகவும் உறுதிப் படுத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் அறிவித்துள்ளன. பிரபாகரனின் உடலம் தேசிய தொலைக்காட்சியில் காட்டப்பட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

‘ஒரு இனம் இன்னொரு இனத்தை தோற்கடித்த வெற்றியல்ல’: ஜனாதிபதி

May 17th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பயங்கரவாதம் துடைத்தெறியப்பட்டிருக்கிறது. 30 ஆண்டுகளின் பின்னர் நாடு முழுவதும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. புலிகளின் பிடியிலிருந்த சகல பிரதேசங்களும் படையினரால் முற்றாக மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கை முல்லைத்தீவுடன் வெற்றிகரமாக முடிவ டைந்திருக்கிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நினைவஞ்சலி

May 13th, 2009 admin Posted in இணையத்தள கட்டுரை Comments Off on நினைவஞ்சலி

சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தமிழ் பேசும் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் பாரபட்சமின்றி புரிந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் ஈழத்தின் அழிவு அரசியலின் கோரப்பசிக்கு இரையாகி ஒரு வருடம் கழிந்து விட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button