February 1st, 2016 latha Posted in TELOnews, இணையத்தள கட்டுரை No Comments »
November 2nd, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் இலங்கை தமிழர்கள் பலர் யதார்த்தங்களையும் உண்மைகளையும் அறியாதவர்களாக வாழ்கின்றார்கள் என்பதற்கு இலங்கையில் நடந்த இறுதிப்போரும் அதில் மரணமடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் மீண்டும் வருவார் என நம்பியிருப்பதும் ஒர் ஆதாரமாகும். ஓவ்வொரு நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரும் போதும் விடுதலைப்புலிகளின் தலைவர் மாவீரர் தின உரைநிகழ்த்துவார் என மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் நம்புகின்றனர். இவ்வாறு மக்களை மாயை ஒன்றிற்குள் வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றுபவை மேற்குலக நாடுகளில் இருந்து இயக்கப்படும் இணையத்தளங்கள் எனலாம். Read the rest of this entry »
October 29th, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
அரசியலில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு தனது குடும்பத்தாரோடும், சொந்த நலன்களை கவனித்துக் கொண்டும் சந்தோசமாக பொழுதை கழித்து வரும் புத்தளம் முன்னாள் நகர பிரதாவும், முன்னாள் கால்நடை வளத்துறை பிரதி அமைச்சருமான கே. ஏ. பாயிஸ் வழங்கிய செவ்வியை இங்கு தொகுத்து வழங்குகிறோம். புத்தளம் நகரம் 1989 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விகிதாசாரத் தேர்தல் முறைமையின் காரணத்தால் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டது. புத்தளம் நகருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை அபிவிருத்திகளும் தடைப்பட்டன. புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்தியில் வறுமை நிலை தோன்றியது. Read the rest of this entry »
September 22nd, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அத்துடன், இதன்போது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
August 29th, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்கவுள்ள அம்பாறை மாவட்டத்தின் அரசியல் அதிகாரத்தைக் கொண்டு சகல ஊருக்குமான அபிவிருத்திகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படும். இனிவரும் காலம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஒரு பொற்காலமாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றிக்கு வாக்களித்த வரிப்பத்தான்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச மக்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று முன்தினம் (27) விஜயம் செய்தார். அங்கு ஹரீஸ¤க்கு அப்பிரதேச மக்களால் வரவேற் பளிக்கப்பட்டது. Read the rest of this entry »
August 28th, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
இலங்கையில் போர்க்கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நடக்கக்கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் கூறுகின்றார். கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார். Read the rest of this entry »
July 25th, 2015 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
துருக்கி நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் குர்து இன போராளிகளை தேடும் வேட்டையை போலீஸ் அதிரடியாக நடத்தியது. அந்த நாட்டின் 13 மாகாணங்களில் நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில் மொத்தம் 251 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து துருக்கி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “தீவிரவாத குழுக்களை எந்தவித பாகுபாடுமின்றி ஒடுக்குவதற்கு துருக்கி உறுதியாக உள்ளது” என கூறப்பட்டுள்ளது. Read the rest of this entry »
November 16th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவை கண்டுபிடித்தது அவர் அல்ல. அவருக்கு முன்னதாக முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை துருக்கி அதிபர் ரீசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லத்தீன் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் மாநாடு நடந்தது. Read the rest of this entry »
September 9th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் அங்குள்ள செனாப், ஜீலம் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சியால் கோட், குஜ்ரன்வாலா மாவட்டங்களில் மட்டும் 556 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. மேலும் இந்த 2 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். Read the rest of this entry »
September 4th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையானது ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையை மீறியது என்பதாலேயே அதற்கு அனுமதி வழங்கவில் லையென அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தொடர்பாக அமெரிக்காவின் நியூயோர்க் பத்திரிகை வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தலையங்கத்துக்கு பதிலளித்து அனுப்பியுள்ள கடிதத்திலேயே இலங்கைத் தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »
August 1st, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயத்தில் அரசு மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில் அரசு இவ்வாறு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எனவே சகலவற்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் எமக்குள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். செயலமர்வுக்காக கொழும்பு நோக்கி வந்த யாழ். ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். Read the rest of this entry »
July 14th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை No Comments »
சர்வதேச விமானங்களுக்கு ஒரு அடையாள குறியீடு வழங்கப்படும். அந்த விமானம் ஒரு நாட்டு எல்லையில் இருந்து அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழையும்போது சந்தேகம் வந்து கேட்டால் அந்த விமானத்தின் அடையாள குறியீட்டை கூற வேண்டும். நேற்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஒரு பயணிகள் விமானம் மீது சந்தேகப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து அதன் அடையாள குறியீட்டை கேட்டனர். பின்னர் அதனை உறுதி செய்து கொண்டு அனுமதித்தனர். Read the rest of this entry »
June 20th, 2014 Thulasi Posted in இணையத்தள கட்டுரை, இணையத்தள செய்தி No Comments »
நாட்டில் அமைதியின்மையைத் தோற்றுவிக்க சில அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ள முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென முஸ்லிம் மக்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அமைதியின் மையை தோற்றுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட சில அமைப்புகள் தயாராகிக் கொண்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி சில அடிப்படைவாத குழுக்கள் மீண்டும் ஒரு மோதலை உருவாக்க முயன்று வருவதாக தெரியவருகிறது. Read the rest of this entry »
June 4th, 2013 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »
இந்தியாவின் பாம்பன் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற நாட்டு படகு மீனவர்கள் 7 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அவர்கள் பயணித்த படகு இலங்கை கடலில் கரை ஒதுங்கியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து கடந்த 2ம் திகதி காலை, மீனவர் தேவசகாயத்துக்கு சொந்தமான படகில் மீனவர்கள் அகஸ்டின் (45), முருகன் (35), Read the rest of this entry »
March 27th, 2013 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »
பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச் செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது. இத்தகவலை பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீட்டர் ஹோரக்ஸ் வெளியிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடையில் தடுக்கப்படுவது மற்றும் வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது போன்றவை தொடர்ந்து Read the rest of this entry »