பொறிக்குள் சிக்கப் போவது யார்?

December 30th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

2011ஆம் ஆண்டு முடிவுக்கு வருவதற்கு ஒருசில நாட்களே உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு குறித்து அரசாங்கம் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்தது நடைமுறைச் சாத்தியமற்றதாகியுள்ளது.

அரசாங்க தரப்புடன் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பேச்சுக்கள் எதுவும் முன்னேற்றம் காணப்படாமலேயே முடிந்து போயுள்ளன. இரண்டு தரப்புமே எந்தவொரு கட்டத்திலேனும் இணக்கப்பாட்டை சந்திக்கக் கூடியளவுக்கு நெருங்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வடக்கும் கிழக்கும் இணைவதால் லாபம் என்ன?

December 28th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்று தமிழ்க் கூட்டமைப்பினர் கூறுகின்றனர். இணைவதால் கிழக்கு மாகாணத்திற்கு என்ன இலாபம் என்று அவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சண்டைகள் அதிகாரத்திற்காகத்தான் பிடிக்கப்படுகின்றன

December 26th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அதிகாரப் போட்டிகளில் ஈடுபடுவோரே அதிகம் வன்முறைகளில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் அதிகாரத்திற்காகத்தான் சண்டை பிடிக்கின்றார்கள். வன்முறையில் ஈடுபடுபவர்கள் அதற்குப்பழக்கப்பட்டு அதில் விருப்புடையவர்களாக காணப்படுகின்றனர் என உளமருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவயோகன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் வன்முறை ஒழிப்புவாரத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட செயலகமும் பால்நிலை வன்முறைக்கெதிரான நிறுவனமும் இணைந்து நடாத்திய ஊடகவியலாளருக்கான கருத்தரங்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதனால் ஏற்படும் உளசமூக பிரச்சனைகளும் என்னும் தொனிப்பொருளில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றும்போது இவ்வாறு தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பேருந்து தரிப்பிடம் இல்லாமல் தவிக்கும் முல்லைத்தீவு மக்கள்

December 24th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

‘அம்மா என்னம்மா இன்னும் பஸ்ஸை காணேல்ல? எப்போ பஸ் வரும்’
‘பொறம்மா! இன்னும் கொஞ்ச நேரத்தில பஸ் வந்திடும்…’

இந்த உரையாடல் முல்லைத்தீவு நகரத்தில் ஒரு தாயும் மகளும் பேசிக்கொண்டது. போக்குவரத்து என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததும் தவிர்க்க முடியாததும் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. உள்நாட்டு வருமானத்தில் போக்குவரத்து பாரிய பங்களிப்பை செலுத்தி வருகின்றது. போக்குவரத்து சீராக இயங்காத நிலையில் பாதிக்கப்படுவதும் பொதுமக்கள்தான். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனநாயகமும் ஜனநாயக துஷ்பிரயோகமும்

December 22nd, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வன்னியில் போர் மிக உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நாட்கள் அவை.

தினமும் சாவு. நூற்றுக்கணக்கானவர்கள் காயம். இரத்தம் பெருக்கெடுத்தோடிய நாட்கள். அவலம் பெரும் நாடகமாடியது. மனிதர்கள் செயற்றுப் போனார்கள். செயலற்றுப் போகும்போது எதுவும் வெறும் சடமே என்ற நிலை உருவாகிறது. அப்படித்தான் மனிதர்கள் அப்போது அங்கே இருந்தார்கள். காற்றில் எற்றுண்டு போகும் சருகுகளாக, ஆற்றில் அள்ளுண்டு போகும் துரும்பாக.

அங்கே அப்பொழுது எவரிடமும் கனவுகளிருக்கவில்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“பெண்கள் வந்திருக்கிறோம்.. அந்தாளை வெளியே வரச் சொல்லுங்கள்!”

December 21st, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ஆயிரக் கணக்கான பெண்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கய்ரோ வீதிகளில் ஒன்று திரண்ட காட்சி, எகிப்திய சரித்திரம் சமீபத்தில் காணாதது!

கடந்த 1919-ம் ஆண்டில் எகிப்தின் பெண்கள் ஹூடா ஷாராவியின் தலைமையில் கய்ரோ வீதிகளில் இறங்கி 92 ஆண்டுகளின்பின் இப்போதுதான் ஆட்சிக்கு எதிராக போராட ஆயிரக் கணக்கான பெண்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“ஒரு கையால விறகு கொத்தியும் விக்கிறன்”

December 21st, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வன்னிப் பெருநிலத்தில் தமக்கென ஒரு சுயதொழிலை உருவாக்கி வாழ்ந்து கொண்டிருந்த பலரது வாழ்வு இன்று சிதைந்து சின்னா பின்னமாய்க் கிடக்கிறது. யுத்தம் இன்று நின்று போயிருந்தாலும் அது விட்டுச் சென்ற பாதிப்புக்கள் ஒட்டுமொத்த மக்களுடைய வாழ்க்கையில் மாறாத வடுக்களை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது.

பலரது அவயவங்கள் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளன. இன்று அவர்கள் அவயவங்களை இழந்து, தொழில் இழந்து கஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஆத்மார்த்த பிரதிநிதிகள், ஏகப்பிரதிநிதிகள் அல்ல?

December 18th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

அரசாங்கமோ அல்லது த.தே. கூட்டமைப்போ பேச்சுவார்த்தையில் சிறப்பாக செயற்பட்டதாக கூற முடியாது. இப்போது பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் அணி ஆளும் கூட்டணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துவதாக அரசாங்கம் கூறியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் பேசும் தாயகத்தைக் காப்பாற்ற தமிழர் முஸ்லிம் ஐக்கியம் தேவை

December 12th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்களை எந்த அவகாசமும் கொடுக்காமல் பிறந்து வாழ்ந்து வளர்ந்த மண்ணிலிருந்து வெளி யேற்றியது கொடுமை. இதைவிடக் கொடு மை 1956 ஆம் ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டுவரை மூன்று தடவைகள் உயிர் பறிக்கப்பட்டவர்கள போக உடைமைகள் அனைத்தையும் இழந்து கப்பல்களில் அநாதைகளாக அகதிகளாக தங்கள் தாயகம் என்ற நிலையில் வடக்கே சென்ற தமிழர்கள் இஸ்லாமியத் தமிழர்களை வெளியேற்றியதாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கைலாசபதியும் தமிழ்த் தேசியமும்

December 7th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழ்த் தேசிய வாதம் தமிழ்ச் சமூகத்தை எத்தகைய முட்டுச் சந்திற் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்பதைப் பற்றி நாம் ஆழச் சிந்திக்க வேண்டிய தருணங்கள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் நாம் அதைச் செய்யத் தவறுகிறோம். தேசியமே அடிப்படையானது, மற்ற முரண்பாடுகள் இரண்டாம் பட்சமானவை என்று சிலர் புதிய தத்துவங்களை முன்வைத்துப் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

December 5th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

இலங்கைத் தீவில் பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லை. நாடு இப்பொழுதும் ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் நிற்கிறது. பிரபாகரன் இல்லை என்பதை ஜீரணித்துக்கொள்ள முடியாத தமிழர்களே அதிகமாகத் தென்படுகிறார்கள். அவரை ஒரு சாகாவரம் பெற்ற மாயாவியாக உருவகித்து வைத்திருந்த அநேகமானவர்களுக்கு அவரில்லாத ஒரு உலகத்தை நினைத்துப் பார்க்கவே முடியாதிருக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய ஆவியோடாவது கதைத்துவிடவேண்டும் என்ற தவிப்போடு அவர்கள் கண்ணாடிக் குவளைகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நடைமுறையில் முழுமைபெறாத அரச கரும மொழி அமுலாக்கம்

December 4th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

நமது நாட்டில் மொழி அமுலாக்கம் முழுமையாக நடை முறையில் இருக்கி றதோ? இல்லையோ? அரசாங்க மட்டத்தில் அரச கரும மொழி அமுலாக் கம் பேசப்பட்டு வரும் சொல்லாகிவிட்டது. அதுமட்டுமல்ல இது அடிக்கடி நமது காதுகளில் ஒலிக்கும் வார்த்தை. இந்த நாட்டில் தமிழும், சிங்களமும் அரச கரும மொழிகள். அரசியல் யாப்பிலும் இது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை அரசுக்கு இந்தியா உதவ முடியாமல் போகும்.

December 3rd, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

தமிழர் பிரச்சினைக்கு இலங்கை எந்தவொரு பொருத்தமான தீர்வையும் முன் வைக் காவிட்டால், அனைத்துலக அரங்கில் பல புதிய சவால்களுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டியேற்படும். இவ்விட யத்தில் மேலும் இந்தியா உதவி புரிய முடியாத நிலை தோன்றும். இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் புரொன்ட்லைன் ஆங்கில சஞ்சிகையில் அதன் கட்டுரையாளர் ஆர்.கே. இராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“தமிழ்த் தேசிய அரசியல் தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்ட அரசியலையே நம்பி இருக்கிறது” : அ. மார்க்ஸ்

December 2nd, 2011 editor Posted in இணையத்தள கட்டுரை No Comments »

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அடுத்த சில நாட்களில், ஒரு காலைப் பொழுதில் சண்டே இந்தியன் இதழுக்காக நண்பர் சங்கர ராம சுப்பிரமணியனும், க. சுப்பிர்மணியனும் வீட்டுக்கு வந்திருந்தனர். ரொம்ப ‘கேஷுவலாக’ நடந்த உரையாடல் இது.

அறுபது வயதைக் கடந்தும் களச்செயல்பாடுகளிலும் எழுத்துப் பணியிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர் அ. மார்க்ஸ், இடதுசாரி கட்சி ஒன்றின் உறுப்பினராகத் தொடங்கி இன்று அவர் சென்றடைந்திருக்கும் இடத்தையும் சிந்தனை மாற்றங்களையும் க. சுப்ரமணியனிடம் பேசுகிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியா தேடிய புலிகளின் அடுத்த ‘தலைவர்’

November 18th, 2011 admin Posted in இணையத்தள கட்டுரை No Comments »

ராஜீவ் காந்தியின் கொலைக்கான பழியை ஒப்புக்கொண்டு, ஆயுதங்களைக் கீழே போடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்கினால் மட்டுமே போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்ற தொனிப்பொருளுடன் ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஊடாகவும், உருத்திரகுமாரனின் நண்பரான ஈ.என்.டி.எல்.எவ் பரந்தன் ராஜன் வாயிலாகவும் நிபந்தனை விதித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா அனுப்பி வைத்த செய்திகளின் தொடர்ச்சியாக, 28.11.2008 அன்று நியூயோர்க்கில் உள்ள இந்திய உப தூதரக வளாகத்தில் மருத்துவர் ஜெயலிங்கம் அவர்களை இந்திய தூதரகத்தின் இராசதந்திரிகளில் ஒருவரான எஸ்.பி.சிங் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button