அறுகம்பை சம்பவம் சுற்றுலாத்துறையை சீர்குலைக்கச்செய்யும் சர்வதேச சதியா என்பதை அரசாங்கம் ஆராய வேண்டும் : டலஸ்

October 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் உள்ள சுற்றுலா பகுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பிரசாரத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையை சீர்குலைக்க சதி நடக்கிறதா என்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தேர்தல் ஏலப் பொருளாக மாற்றாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம் : விசேட அறிக்கையில் ரணில்

October 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை அரசியல்மயப்படுத்தவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் ஏஎம்ஜேடிஅல்விஸ் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனிவிரட்ணவையோ சிஜடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபயசேகரவையோ பழிவாங்கும் நோக்கில் தயாரிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா

October 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களை விரிவுபடுத்துவதுடன், அமைதியான மற்றும் பாதுகாப்பான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தைப் பேணுவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்கும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாதுகாப்புப் படை பிரதானிகளுடன் பிரதமர் சந்திப்பு

October 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் பாதுகாப்புப் படை பிரதானிகளை வியாழக்கிழமை (24) பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்து பேச்சுவார்த்த நடத்தியுள்ளார். பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அச்சுறுத்தல்கள் தொடர்பான செய்திகள், நாட்டுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்:சாகல ரத்நாயக்க

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பயங்கரவாத குழுக்களால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீண்டும் நாட்டில் நியமிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிரிழந்தவரின் சடலத்தை வீதியிலேயே, விட்டுவிட்டு தப்பியோடிய நண்பன்

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கண்டி, பிரிம்ரோஸ் கார்டன் பகுதியின் கீழ் பகுதியில் வீதியில் உயிரிழந்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது அல்லவென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆந்திராவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து : காயங்களுடன் தப்பிய 25 பயணிகள்

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மழையால் பிரேக் பிடிக்காமல் சாலையின் இடப்பக்கம் இருந்த சுமார் 30 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஏழாலையில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்ததுடன், இளைஞனிடம் இருந்து 840 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிஐடியில் முன்னிலையானார் நாமல் ராஜபக்ஷ

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று வியாழக்கிழமை (24) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

AddThis Social Bookmark Button

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பினுள் புதன்கிழமை (23) இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க தூதகரத்தின் எச்சரிக்கை: பாதுகாப்பை பலப்படுத்திய இலங்கை

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அறுகம்பேவில் உள்ள சுற்றுலாத் தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கொழும்பு உட்பட நாட்டில் பிரபல்யமான சுற்றுலாத் தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணை ஆணைக்குழு தொடர்பில் ரணில் விசேட உரை

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை ஆராய நியமிக்கப்பட்ட இரு விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு

October 24th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னர் தீர்மானித்தப்படி நடத்துவதால் சுமார் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படுவதோடு பல சிக்கல்கள் ஏற்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்

October 23rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று (23) கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துருக்கி அங்காராவில் பயங்கரவாத தாக்குதல்: பலர் உயிரிழந்திருக்கலாம்

October 23rd, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

துருக்கியில் உள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்காராவிற்கு அருகில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TAI) மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button