சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களே, ஏனைய மத குருமார்களே, வெளிநாட்டு தூதுவர்களே, உயர்ஸ்தானிகர்களே, பிரதம நீதியரசரே, அழைப்பு விடுக்கப்பட்ட சிறப்பு அதிதிகளே, எமது நாட்டின் சனநாயகத்தின் மிக முக்கியமான பண்பு மக்களால் தம்மை ஆள்வதற்கான ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதே என்பது எங்களுக்கு தெரியும். எனினும் தோ்தலின்போது வாக்குகளை அளித்தல் மற்றும் ஆட்சியாளரை தெரிவு செய்து கொள்வதால் மாத்திரம் சனநாயகம் முற்றுப்பெற மாட்டாது. அது சனநாயகத்தின் ஓர் அடிப்படை அம்சமாக அமைந்த போதிலும் எமது நாட்டில் சனநாயகத்தை பலப்படுத்துவதற்காக கட்டமைப்புக்களின் பலம் பொருந்திய தன்மை அதைப்போலவே சட்டங்களின் பலம்வாய்ந்த தன்மை அவசியமென்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே நான் முதலில் எமது நாட்டு மக்களுக்கு ஒரு விடயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்நாட்டின் சனநாயகத்திற்காக எனது உச்சளவிலான அர்ப்பணிப்பினை எனது பதவிக்காலத்தில் வெளிக்காட்டுவேன். அதைப்போலவே எமது நாட்டில் தோ்தலொன்றின்போது, அதிகாரப் பரிமாற்றத்தின்போது அது சனநாயக ரீதியாக இடம் பெற்ற வரலாறு நிலவுகிறது.
Read the rest of this entry »