எமது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை:அநுரகுமார திஸாநாயக்க

September 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சஜித் வெற்றி பெற்றால் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: என்.ஸ்ரீகாந்தா

September 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அவர் நிச்சயம் அமைச்சுப்பதவியை வழங்குவார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூடு : நால்வர் பலி

September 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திடீர் சுகயீனம் 500 ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

September 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலன்னறுவை – பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐரோப்பாவை அச்சுறுத்தும் புதிய கோவிட் திரிபு: இதுவரை 27 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்

September 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எக்ஸ்.ஈ.சீ ( XEC) எனப்படும் புதிய கோவிட் வைரஸ் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கோவிட் நோயின் மாறுபாடு எனவும், விரைவில் பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் கோர விபத்து : இருவர் பலி

September 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று(18) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய மக்கள் சக்தியால் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது : மஹிந்த

September 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தியால் இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செம்மறி ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரபாகரனின் அச்சுறுத்தலால் மூடப்பட்ட கட்சி அலுவலகத்தை மீண்டும் திறப்போம் : டக்ளஸ்

September 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று காரைதீவு கலாச்சார நிலையம் மக்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன் போது அவர் அங்கு உரையாற்றுகையில்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாவையும் , மகனும் வடிவேல் போல் செயற்படுகின்றார்கள்:மு தம்பிராஜா

September 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா அவருடைய மகன் கலைஅமுதன் தென்னிந்திய நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணில் செயல்படுவதாக அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு தம்பிராஜா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திருகோணமலையில் தேர்தல் பாதுகாப்புக்காக 10000 பொலிசார் கடமையில் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி

September 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் பணிக்காக 10000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று(18) மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பபாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிசார், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட ஏனையதரப்புக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 315,925 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மூதூர் தொகுதியில் இருந்து 123,363 வாக்காளர்களும், திருகோணமலை தேர்தல் தொகுதியில் இருந்து 105,005 வாக்காளர்களும், சேருவில தொகுதியில் இருந்து 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, வாக்கெண்ணும் பணிகளுக்காக 1632 உத்தியோகத்தர்களும், வாக்களிப்பு நிலையங்களுக்கு 1908 உத்தியோகத்தர்களும் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

AddThis Social Bookmark Button

நாட்டை முன்னேற்ற அனுரவும் முன்வரவில்லை, சஜித்தும் முன்வரவில்லை:அவர்களை தும்புத்தடியால் விரட்டுங்கள் ரணில் கோரிக்கை

September 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த நாடு நெருக்கடியில் இருந்தபோது சஜித்தோ அநுரவோ அதனை முன்னேற்ற முன்வரவில்லை. அவர்கள் பின்வாங்கியுள்ளனர். நான் இந்த நாட்டை பொறுப்பேற்ற பிறகு பொருளாதாரம் முன்னேற ஆரம்பித்துள்ளது. மக்கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். விவ சாயம் செய்கின்றனர். கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கஷ்டப்ப டும் போது வராமல் இப்பொழுது தேர்த லுக்காக உங்களிடம் வந்திருக்கும் இவர்களைத் தும்புத் தடியால் அடித்துத் துரத்தவேண்டும். என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

September 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மாங்குளம்‌ பொலிஸ்‌ பிரிவிற்குட்பட்ட பனிச்சங்குளம்‌ பகுதியில்‌ உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மொத்தமாக வெடித்து சிதறிய ஹிஸ்புல்லாக்களின் பேஜர் கருவிகள்: லெபனான் முழுவதும் பரபரப்பு

September 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளதோடு அதில் 200 பேரின் நிலைமை கவலைக்கிடம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் குரங்கு அம்மை: இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

September 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்தன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அவசர சிகிச்சைப் பிரிவில் இலங்கையின் பொருளாதாரம்: தகுதியற்ற வைத்தியரை நிராகரிக்குமாறு ரணில் கோரிக்கை

September 18th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் பொருளாதார நோயாளர் சத்திரசிகிச்சையின் பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button