மலையகத் தமிழர்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் வாக்குகளை தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் மனமுவந்து ஏற்றுக்கொள்வார் : சி.வி.விக்கினேஸ்வரன்

September 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவராவார். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக மக்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் மக்களும் அவருக்கு ஆதரவாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜே.வி.பி. திசைகாட்டியின் பின் மறைந்தாலும் மணியையும் சிவப்பு நிறத்தையும் கைவிடவில்லை : திலும் அமுனுகம

September 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் பாஸ்போர்ட் போட்டோவை மாற்றி வேறு பெயரில் விசா பெற்று செல்வதுபோன்று இன்று இதே திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி (ஜே .வி.பி ) திசைகாட்டி என தனது முன்னைய முகத்தை மறைத்து, அவ்வாறான வேலைத்திட்டத்தை பின்பற்றி மக்களிடம் வலம் வருவதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐக்கிய மக்கள் சக்திக்குள் வலுக்கும் விரிசல் ரணில் பக்கம் தாவ தயாராகும் முக்கியஸ்தர்கள்.?

September 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படாததால் சில தொகுதி அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலட்சக்கணக்கில் அழிக்கப்பட்ட தேர்தல் சுவரொட்டிகள் பொலிஸார் அதிரடி நடவடிக்கை

September 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இதுவரையான காலப்பகுதியில் 436,000 சட்டவிரோத தேர்தல் சுவரொட்டிகளை அழித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், 2,400க்கும் மேற்பட்ட சட்டவிரோத பதாகைகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புக்கள் : நாமலின் புதிய திட்டம்

September 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அடுத்த 10 வருடங்களுக்குள் 20 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

AI தொழிற்நுட்பத்துடன் வெளிவந்தது ஐபோன் 16

September 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

செயற்கை நுண்ணறிவை (AI) மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் 16ஐ அதிகாரபூர்வமாக இன்று திங்கட்கிழமை வெளியிட்டது. ஐபோன் 16இல் செயற்கை நுண்ணறிவை (AI) மனதில் வைத்து உருவாக்கப்பட்ட முதல் ஆப்பிள் தயாரிப்பாகும். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவை (AI) இணைக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று கூடும் தமிழரசுக் கட்சியின் சிறப்புக் குழு

September 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. ஐவர் கொண்ட சிறப்புக் குழு இன்று ஆறு பேர் கொண்ட குழுவாக வவுனியாவில் கூடுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனித உரிமை பேரவை தீர்மானங்கள்: இலங்கை முற்றாக நிராகரிப்பு

September 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற  ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஸ்ரேலிய தாக்குதல்களால் சிரியாவில் 16 பேர் உயிரிழப்பு

September 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்திய சிரியாவில் உள்ள பல இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 16 கொல்லப்பட்டதாக சிரிய அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமா மாகாணத்தில் மஸ்யாப் நகரைச் சூழ கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் மேலும் 43 பேர் காயமடைந்ததாக சானாவை தளமாகக் கொண்ட மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனைத்து வாகனங்களிலும் தேர்தல் ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவு

September 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி சடலமாக மீட்பு : யாழில் சம்பவம்

September 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய கனகசபாபதி றமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜேர்மனியில் காணாமல்போன இலங்கை மாணவர்: சந்தேகம் வெளியிட்டுள்ள சகோதரி

September 10th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜேர்மனியின் மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பிரிவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம்: இராதாகிருஷ்ணன்

September 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

போதைப்பொருளுடன் சிறைச்சாலைக்கு சென்ற இருவர் கைது

September 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலை என்பவற்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

15 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

September 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button