15 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

September 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சலன புத்திக்குப் பலியாகும் ஆபத்தை இளைஞர்கள் உணர வேண்டும் :ரிஷாட்

September 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டை சீரழிக்கும் நிபந்தனைகளை நாணய நிதியம் முன்வைக்கவில்லை சிறந்த தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் : ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச

September 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையை சீரழிப்பதற்கு நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டு மக்களினதும் அரச நிர்வாகத்துக்கும் பயனுடையதாக அமையும் வகையில் தான் நாணய நிதியம் பல நிபந்தனைகளை விதித்தது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிரியாவின் மத்திய பகுதியில் இஸ்ரேல் விமானதாக்குதல் : ஐவர் பலி

September 9th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர் என சிரிய அரச ஊடகமான சனா தெரிவித்துள்ளது.சிரியாவின் மத்திய பகுதியில் பல வெடிப்புச்சத்தங்களும், வான்பாதுகாப்பு பொறிமுறைகள் இயக்கப்படும் சத்தங்களும் கேட்டதாக சனா தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் : யாழில் விஜயகலா

September 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், சங்கிலியன் பூங்காவில் இன்று(07) மாலை நடைபெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காற்சட்டைப் பையில் மூன்று கோடி ரூபா தங்கம்

September 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று அறிவிப்பு

September 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை காலை 8:00 மணி முதல் மாலை 6.00 வரை அந்த பணிகளை மேற்கொள்ள தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் மாவையே சந்தித்த ரணில்

September 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாக்கு பெட்டிகளுக்கு உச்சளவு பாதுகாப்பு! ஆயுதம் தரித்த பொலிஸார் கடமையில்

September 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலின் வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்லும் போது உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் தேர்தல் காரியாலயம் இது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஊழல் அற்ற அரசாங்கம் என்ற விடயத்தில் அனுரகுமாரவுக்கு முழுமையான ஆதரவு : சுமந்திரன்

September 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை, ஊழலற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் எனநாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அரியநேத்திரன் அதிரடி

September 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அதாவது, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெறுகின்ற செல்வாக்கைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளமாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆதரவு வழங்காத அமைச்சர்கள் தொடர்பில் ரணில் எடுத்த அதிரடி முடிவு

September 8th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்காத அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவித்தலை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் அமைச்சர்கள் மற்றும் கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஊடகப் படுகொலைகளுக்கு முழுமையான விசாரணைகள் : அநுரகுமார

September 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உதயன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை என்பன தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுங்கத் திணைக்களம் வருமான வரலாற்றில் 1000 பில்லியன் ரூபா இலாபம் : சரத் நோனிஸ்

September 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எந்தவொரு தரப்பிற்கும் அடிபணியாமல் சுயாதீனமாக செயற்பட இலங்கை சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அதிகார சபைக்கும் அதன் அதிகாரிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கியதன் மூலம் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வருடத்தின் 08 மாதங்களில் 1000 பில்லியன் ரூபாவை சுங்க வருமானமாக ஈட்ட முடிந்துள்ளது. 

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டம் : விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

September 7th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதிதிட்டம் குறித்து கிடைத்துள்ள தகவல் குறி;த்தே விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button