சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று தாக்கல்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (15) இடம்பெறவுள்ளது. ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சர்வதேச சுகாதார அவசரகால நிலை அறிவிப்பு

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மூன்று அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ்

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடிய ஜனாதிபதி

August 15th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மொஹமட் யூனுஸை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரால் முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கட்டுப்பணம் செலுத்தல் இன்றுடன் நிறைவு: நாளை வேட்புமனுத் தாக்கல்

August 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி தேர்தலுக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 34 வேட்பாளர்கள் நேற்று மதியம் வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் சார்பாக 17 பேரும், சுயேட்சை வேட்பாளர்கள் 15 பேருமே இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகள் சஜித்துடன் சந்திப்பு

August 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (13) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் இரு குழுக்கள் இடையே மோதல்

August 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பசில் ராஜபக்சவை இலங்கை அரசியலில் இருந்து நீக்க நடவடிக்கை?: சர்வஜன பலய தீர்மானம்

August 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கை அரசியலில் இருந்து நீக்க சர்வஜன பலய கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான “மவ்பிம“ பத்திரகை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலின் பரந்தப்பட்ட கூட்டணி: 16ஆம் திகதி அங்குரார்ப்பணம் இணைய போவது யார்?

August 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். மூதாட்டி சடலமாக மீட்பு : அயல் வீட்டு இளைஞன் கைது

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக்கூறி சிலர், வர்த்தகர்களிடம் சென்று பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கி சூடு

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் தீவிர வாக்குவாதம் தொடர்பான தகவல்களுக்கு பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிஜிட்டல் முறைமையிலான சுயநிர்ணயத்தை தமிழர்களுக்கு வழங்கலாம் : பாட்டலி சம்பிக்க ரணவக்க

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி போட்டியில் இருந்து ஜனாதிபதி விலகிக்கொள்ள வேண்டும் : ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதியின் ஆலாேசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விராேதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button