இப்போது எமது இணையத்தளம் வழமைக்கு திரும்பிவிட்டது எனி வருங்காலங்களில் இது போல்
தவறுகள் ஏற்படது என்பதனை எமது அன்பான வாடிக்கையாளருக்கு மிக மன வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.
October 16th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
June 30th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
சர்வதேச போதைப்பொருள் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் நடந்த நிகழ்வொன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க “விடுதலைப்புலிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும்” . “விடுதலைப்புலிகளை விடவும் போதைப்பொருள் ஆபத்தானது” எனவும் .கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.விடுதலைப்புலிகளை நேருக்கு நேர் போர்க்களத்தில் சந்திக்க வலுவில்லாமல் இருந்த முன்னைய ரணில் அரசாங்கம் பேச்சு வார்த்தை என்ற மாய வலையினை விரித்து வழமையான தனது நரித்தந்திரத்தினால் விடுதலைப்புலிகளை பலமிழக்க செய்ய முனைந்ததுடன் தமிழ் மக்களின் நண்பன்போல் தன்னைக்காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளை கேவலப்படுத்தி பேசிவருகின்றமையினை மகள் புரிந்துகொள்ளவேண்டும் . Read the rest of this entry »
May 25th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
யாழ் நீதிமன்ற தாக்குதல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் மாத்திரம் தண்டிக்கப்பட வேண்டுமென கோருவதுடன் . ஏனையவர்கள் மீது வீண் பழிசுமத்தும் வக்கிர அரசியலை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்.யாழ் புங்குடிதீவில் இடம்பெற்ற சி. வித்தியாவின் மீதான காமக் கொடுரர்களின். வன்புணர்வுக் கொலையினை கண்டித்து கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த தமிழினமும் உணர்சிமேலீட்டால் வீதிக்கு இறங்கி போராடிய போது யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் வரம்பு மீறி யாழ் நீதிமன்றக்கட்டிடம் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாக 130 பேர் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் இதில் உண்மையாகவே வன்முறையில் ஈடுபடாத அப்பாவிகளும் உள்ளடங்கியுள்ளமை வேதனைக்குரியது . Read the rest of this entry »
May 18th, 2015 Thulasi Posted in TELOnews, ஊடக அறிக்கை No Comments »
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் எமது தமிழினம் காலத்துக்கு காலம் பல துன்பங்களை சந்தித்து வந்தாலும் தமிழனால் “தமிழன்” என்று ஒரு இனம் இருக்கும் வரையில் மறக்க முடியாத நாட்களாக யூலைக்கலவரமும் முள்ளிவாய்க்கால் படுகொலையையும் அமைந்துள்ளது கருவில்இருந்த குழந்தைமுதல் முதியவர் வரையும் எந்தப்பாகுபாடும் இன்றி கொத்துக்கொத்தாக மண்ணில் மடிந்த அவலத்தினை இன்று நினைத்தாலும் இதயங்கள் கனக்கின்றன. Read the rest of this entry »
April 13th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
மலரப்போகும் இனிய மன்மத வருட சித்திரைப்புத்தாண்டு தமிழர்கள் வாழ்வில் வரலாற்று வாழ்வுரிமைக்கான முத்திரையினை பதிக்க வேண்டி மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read the rest of this entry »
March 27th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
வன்னி மாவட்டம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இந்நிலையில் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு வழங்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். இந்நிலையில் தமிழ் மக்களின் இன ஒற்றுமை பற்றி அமைச்சர் றிசாட் பதியுதீன் பேசுவது நகைப்பிற்குரியதாகும் என்பதுடன் இத்தகைய கருத்தினை வெளியிடுவதற்கு தான் தகுதியானவரா என தனது மனச்சாட்சியிடம் கேட்டுக்கொள்ளவேண்டும் என தமிழர் மேம்பாட்டு பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
March 19th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
சிகிரியா குகையின் பளிங்கு சுவரில் தனது பெயரை பதிவு செய்ததற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சின்னத்தம்பி உதயசிறி எனும் இளம் பெண்ணிற்கு மனிதாபிமான ரீதியில் சனாதிபதி அவர்கள் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறீரெலோ கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு வெளிவருவதற்காகவே வாழ்க்கைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னத்தம்பி உதயசிறி எனும் இளம்பெண்ணிற்கு தற்போது உயர்ந்தபட்ச சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையிட்டு சிறிரெலோ கட்சியினராகிய நாம் எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். Read the rest of this entry »
February 14th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இங்கு அனுப்புவது பற்றி செய்திகள் அடிக்கடி பார்க்க முடிகிறது. 2005 ல் இடம்பெயர்ந்து இடைத் தங்கு முகாமில் உள்ள 5000 திற்கு மேற்பட்ட சம்பூர் மக்களை மீண்டும் அவர்களின் இடங்களுக்கு திருப்பி அனுப்புவது பற்றி ஆக்க பூர்வமான அக்கறையை முதலில் எல்லா தரப்பினரும் காட்டுவது தான் சிறப்பானது. இதில் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் வடக்குக்கு ஒரு நிலை பாடு கிழக்குக்கு ஒரு நிலைபாடு என பாரபட்சம் காட்டக் கூடாது. கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் விரைந்து செயல் ஆற்ற வேண்டும் இவ்விடயத்தில். ஜனாதிபதியின் 100 நாட்கள் திட்டத்தில் இதை விரைவாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். Read the rest of this entry »
January 15th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் உழவர் திருநாளாகப் போற்றிக் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு தினமாகிய தைப்பொங்கல் நன்னாளில் எனது மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் என சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தமிழ் உழை ப்பாளியின் தினம். தமிழ் மக்களின் பிரதான தொழிலான வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் வேளாண்மை சிறப்பதற்கு உதவிய இயற்கைக்கும், உற்பத்தி முறைமையில் பிரதான கருவிகளாக இருந்து வந்த காளை மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள். சாதி, மத பேதங்கள் கடந்து ஒட்டுமொத்தத் தமிழர்களும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழா. Read the rest of this entry »
January 15th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
இன்று பிறந்திருக்கின்ற தைப்பொங்கல் திருநாள்; தமிழர் இல்லங்களில் மனநிறைவுடன் பால் பொங்குவது போன்று அவர்களுடைய வாழ்வியல் பிரச்சனைகளும்; இனிதே வெற்றியடைய வேண்டும் என இத் தைத்திருநாளில் வாழ்த்துவதாக சிறீரெலோ கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
January 11th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய சனாதிபதி என்ற வகையில் எமது இதயம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். என சிறி ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சனாதிபதி தேர்தல் முடிவுற்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்களால் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு சவால் விடுவனவாக அமைவது கவலை அளிக்கிறது என்பதுடன் பழிவாங்கும் எண்ணத்தையும் வெளிக்காட்டி நிற்கிறது. Read the rest of this entry »
January 9th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கையில் நேற்று வியாழக்கிழமை – 8-ம் திகதி நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 சதவீத வாக்குகளை வென்று வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தலில் 62 லட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார்.
இதன்படி, செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார். Read the rest of this entry »
January 8th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
January 5th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
சனாதிபதி தேர்தலில் சொந்த சலுகைகளுக்காக சோரம் போன சம்மந்தன் குழுவினருக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்கு உரிமையை பயன்படுத்தி நல்ல சாட்டை அடியினை கொடுக்க முன்வரவேண்டும் என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்தார். செட்டிகுளத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணி வேட்பாளர்களை ஆதரிக்கும் பரிவாரத்தில் தேரை செலுத்துபவர்கள் அனைவரும் முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்தவர்களும் தவறான வழியில் வாணிபம் செய்தவர்களுமே அதிகம்.ஆகவே தமிழ் மக்களாகிய நீங்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். Read the rest of this entry »
December 30th, 2014 Thulasi Posted in TELOnews No Comments »
சம்மந்தன் குழுவினரின் சதி வலைக்குள் சிக்காது தமிழ் மக்கள் சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவினையே ஆதரிக்க வேண்டும். ப.உதயராசா. நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் சிறிரெலோகட்சி சனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினையே ஆதரிக்கும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வடக்கிலே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு வடக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு இருக்கிறது. இதனை ஏற்கனவே திட்டமிட்டு செயற்படுத்தி வரும் ஒருவரிடமே நாம் நாட்டை ஒப்படைக்க முடியும். எம்மைப்பொறுத்தவரை எவ்விதமான தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக இருந்தாலும் பாராளுமன்ற அங்கீகாரத்துடனே சாத்தியமாகும் என்பதில் அளப்பரிய நம்பிக்கையுண்டு. அந்த தீர்வினை அங்கீகரிக்க வேண்டுமாக இருந்தால் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. Read the rest of this entry »