சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முக்கிய செய்தி.!

July 15th, 2014 Thulasi Posted in TELOnews No Comments »

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து அமைப்பினரால் புங்குடுதீவில் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வோதய அமைப்பினர் கேட்டதற்கிணங்க, தண்ணீரத்; தாங்கி வாகனம் (பௌசர்) ஒன்று வாங்கிக் கொடுக்கும் நிகழ்வு இம்மாதம் (30.07.2014) நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு எமதூரில் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், ஏனைய சமூகப் பணியாற்றும் அமைப்பினர், பொதுமக்கள் அனைவரையும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு பணிவுடன் அழைக்கின்றோம். Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜெர்மனியில் ரேலோ உறுப்பினர்கள் கலந்து கொண்ட அஞ்சலி நிகழ்வு

July 13th, 2014 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் கறுப்பு யூலை நினைவு தினத்தையொட்டி, தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் தங்கத்தரை, தளபதி குட்டிமணி, ஜெகன், நடேசுதாசன், தேவன், சிறீகுமார், சிவபாதம் உட்பட, இலங்கை அரசின் சிறையில் கொல்லப்பட்ட அனைத்து போராளிகளுக்கும் இனக்கலவரத்தின் போது கொல்லப்பட்ட மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு ஜெர்மனில் 12-07-2014 அன்று நடைபெற்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியா புதிய கற்பகபுர காணிப் பிரச்னை சம்பந்தமாக ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை!!

May 26th, 2014 Thulasi Posted in TELOnews No Comments »

வவுனியா புதிய கற்பகபுரம் காணிப்பிரச்சினை குறித்து ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை வருமாறு. வவுனியாவில் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட காணிகள் அற்றவர்களுக்கு புதிய காணிகளை வழங்குவதற்காக ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் அயராத முயற்சியின் பயனாக பசில் ராஜபக்ஸ அவர்களினூடாக அனுமதியினை பெற்று 2009, 2010 காலப்பகுதியில் “புதிய கற்பகபுரம்” எனும் கிராமத்தை உருவாக்கி நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு புதிய காணிகள் வழங்கப்பட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தாயார் மறைவு

October 21st, 2012 admin Posted in TELOnews No Comments »

அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தாயாரும், இலங்கையில் ஊரங்குணை, கட்டுவன், தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்தவருமான திருமதி. சிவகாமி விசுவலிங்கம் அவர்கள் 19-10-2012 இல் இலண்டனில் காலமானார்.

அன்னார்

-காலம் சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
-சிவலிங்கம் ( பிரித்தானியா) Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தலைவர் சிறி சபாரத்தினம் நினைவு தினம்- சிறி டெலோ ஏற்பாட்டில்

May 5th, 2012 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவர் அமரர் சிறி சபாரத்தினம் மற்றும் அவரோடு உயிர் நீத்த 300 போராளிகளினதும் நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மே மாதம் 5ம் திகதி அனுஷ்டிக்கப் படுகிறது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சரியான வழியிலே முறையாக முன்னெடுத்தவர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம். மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, பாரிய தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்கள் டெலோ அமைப்பினர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறி சபாரத்தினம் நினைவுக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டி

May 5th, 2012 Thulasi Posted in TELOnews No Comments »

மாபெரும் உதை பந்தாட்டப் போட்டி ஒன்று சிறி டெலோ அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகர சபை மைதானத்தில் வன்னிப் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெறுகிறது. கடைசி நாள் போட்டிகள் மறைந்த எமது அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட அனைத்துப் போரளிகளையும் நினைவு கூரும் வண்ணம் மே 6ம் திகதி நடை பெறவுள்ளன.  சிறி டெலோ அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்சிகள் ஒழுங்கு செய்ய்யப் பட்டிருக்கின்றன. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கழகங்கள் இதில் பங்கு பெறுவதும், ஒரு தமிழ் அரசியல் அமைப்பினால் நடாத்தப் படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button

மாபெரும் மே தின ஊர்வலம்- சிறி டெலோ நாடளாவிய சாதனை

May 5th, 2012 Thulasi Posted in TELOnews No Comments »

கடந்த மே தினத்தில், சிறி டெலோ கட்சி தொழிலாளர்களின் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன் பின்னர் திரு. உதயராசா தலைமையில் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் பகல் சுமார் 3.00 மணியளவில் ஆரம்பமாகியது. மக்கள் கூட்டம் கூட்டமாக அணிதிரண்டனர். அலைபோல் மக்கள் வெள்ளம் சாரிசாரியாக வீதி நெடுகிலும், கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது ஊர்வலமாக வந்த வண்ணம் இருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியாவில் சிறி ரெலோவின் மாபெரும் மே தின கூட்டம் (படங்கள் இணைப்பு)

May 1st, 2012 editor Posted in TELOnews No Comments »

சிறி ரெலோவின் மாபெரும் மே தினக் கொண்டாட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்றது. இச்நிகழ்வு வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறி ரெலோ கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறிரொலோவின் தலைவராக கஜேந்திரனும் செயலாளராக உதயனும் தெரிவு; மாவட்ட செயலாளர்களும் தலைமைக்குழுவும் நியமனம்.

February 6th, 2012 admin Posted in TELOnews No Comments »

சிறிரொலோ கட்சியின் தலைவராக காத்தலிங்கம் கஜேந்திரனும் (சேனாதி), செயலாளர் நாயகமாக பரராஜசிங்கம் உதயராசாவும் (உதயன்), பொருளாளராக மகேந்திரனும் (சங்கர்) ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சிறிரெலோ கட்சியின் மத்திய குழு, தலைமைக்குழு உட்பட்ட வருடாந்த கூட்டம் நேற்று வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள கட்சியின் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இந்த கூட்டத்தில் சகல உறுப்பினர்களும் பங்குபற்றியிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்கள் புதுநிமிர்வு கொள்ள புத்தாண்டு மலர வேண்டும்

January 1st, 2012 admin Posted in TELOnews No Comments »

மலரும் புதிய ஆண்டில் எமது மக்களின் வாழ்வானது சுபீட்சமானதாகவும் ஒளிமயமானதாகவும் அமையவேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக சிறிரெலோ தலைவர் ப.உதயராசா தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஒரு சமுதாயத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் விட்டுக்கொடுப்புகள் பேச்சு வார்த்தைகள் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ் தினக்குரல் முன்னாள் முகாமையாளர் ஆ.சி. நடராசா காலமானார்

November 23rd, 2011 admin Posted in TELOnews No Comments »

யாழ் தினக்குரல் பத்திரிகை அலுவலக முன்னாள் பொது முகாமையாளர் ஆ.சி. நடராசா நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை தமது 70 ஆவது வயதில் காலமானார். வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபரான இளைப்பாறியபின் யாழ் தினக்குரலில் இணைந்து பணி புரிந்தவர். நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் உரும்பிராயிலுள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலை காலமானார். இரு பெண் பிள்ளைகளுக்கு தந்தையான இவர் தினக்குரலில் எட்டு ஆண்டுகள் (2002-10) பணிபுரிந்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தந்தை செல்வாவின் சிலை உடைப்புக்கு சிறீ-ரெலோ கடும் கண்டனம்

October 31st, 2011 admin Posted in TELOnews, ஊடக அறிக்கை No Comments »

திருகோணமலை நகரிலுள்ள சிவன் கோயிலுக்கு அருகில் இருந்த தந்தை செல்வாவின் சிலை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. யுத்த முழுமையாக முடிவடைந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்னும் இது போன்ற அரசியல் நாகரிகம் அற்ற செயல்கள் நிகழ்வதை வன்மையாக கண்டிப்பதாக சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – சிறீ-ரெலோ – தலைவர் ப. உதயராசா தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தீபாவளி வாழ்த்துக்கள்

October 26th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

மலரட்டும் தீபங்கள் சிரித்து சிதறும் நன்னாள் கவலைகள் மறந்து மனங்கள் மகிழும் பொன்னாள்.தீபாவளி. உலகத்தில் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

ரெலோ நீயூஸ்

www.telonews.com

AddThis Social Bookmark Button

பயங்கரவாத தலைவர்களை ஒழித்த உலகின் இரு தேசத் தலைவர்கள்

May 6th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

உலகை பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து விடுவித்து பாரெங்கும் பரந்து வாழும் மக்களுக்கு சுதந்திரத்தையும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையையும் மேற்கொள்வதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக சாதனையை படைத்த இரு உலகத் தலைவர்களை நாம் மகிழ்ச்சியுடன் பாராட்டுகின்றோம்.

AddThis Social Bookmark Button

எமது வாசகர்கள் அனைவருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரெலோ நீயூஸ்

April 14th, 2011 Thulasi Posted in TELOnews No Comments »

எமது வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தங்களது தமிழ், சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

AddThis Social Bookmark Button