தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று இரவு 7 மணியளவில் கொழும்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் கூட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ரெலோ நீயூஸ்க்கு தெரிவித்தார்.
November 23rd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
November 20th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
பழ. நெடுமாறனுக்கு உதயராசாவின் பதில்
பழம்பெரும் அரசியல்வாதியான நெடுமாறன் அவர்கள் 24 ஒக்டோபர் 2010 இல் இணையங்களுக்கு கொடுத்த செவ்வி, பல பத்திரிகைகளில் குறிப்பாக இலங்கை தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் ( கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர்) அன்று ஏற்பட்ட மோதல்கள், தமிழ் அமைப்புக்களின் மத்தியில் விரிசல்களுக்கு காரணமாக அமைந்து விட்டன என்ற தொனியில், கலைஞரை குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு வலு சேர்க்க, சொற்சுவை பொருட்சுவையாக, டெலோ அமைப்பையும், அதன் பெரும் மதிப்புக்குரிய மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சினிமா பாணியில் வரும் வில்லன்கள் கணக்காக விபரித்திருந்தார். அவருடைய இந்த செயலுக்கு எமது ஆழ்ந்த மன வருத்தத்தினை நாம் தெரிவிக்கிறோம். எதை தவறு என்று செவ்வியில் கூறியிருந்தாரோ, அதே தவறினை இன்று அவர் அதே அரசியல் காரணங்களிற்காகச் செய்திருப்பது வேடிக்கையானது. Read the rest of this entry »
November 5th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
October 3rd, 2010 Thulasi Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள உடனடி தேவைகள் குறித்து இன்றைய தமிழ் கட்சிகளின் அரங்கம் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது என சிறீரெலோ சுரேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டதொடர் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரியின் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »
September 12th, 2010 admin Posted in TELOnews No Comments »
இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு மற்றும் மீள்குடியேற்றத்துக்கான உடனடி நிவாரணம் குறித்து தமிழீழ விடுதலைக் கழகத்தின் (புளொட்) கொழும்பு காரியாலயத்தில் நேற்று மாலை கூடிய தமிழ் கட்சிகள் அரங்கம் கலந்து உரை யாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் ஏ.கைலேஸ்வரராஜா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அ. இராசமாணிக்கம், ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப. உதயராசா மற்றும் சுரேந்திரன், பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் செயலாளர் தி. ஸ்ரீதரன் மற்றும் வரதராஜபெருமாள், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலர் ம.க. சிவாஜிலிங்கம், புளொட் தலைவர் த. சித்தார்த்தன் ஆகியோரும் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். Read the rest of this entry »
September 10th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
August 17th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மாந்தை மேற்கு பிரதேசத்தில் 5கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த 68 பேருக்கு சுய தொழிலுக்கான உபகரணங்கள் இன்று (17.08.2010) வழங்கப்பட்டிருக்கின்றது. அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச மக்களின் சுயதொழிலை மேம்படத்தும் பொருட்டு மன்னார் பிராந்தியத்திற்குப் பொறுப்பான தள்ளாடி படைத்தலமையகத்தின் கட்டளையிடும் அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைவாக 215ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் விக்கும் லியனகேயின் வழிகாட்டலில் 215ஆவது படைப்பிரிவின் சிவில் நிர்வாக அதிகாரி கேணல் நலிந்த மஹாவித்தாரணவின் ஏற்பாட்டில் இவ்வுபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »
August 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மன்னாரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முழு மூச்சாக முன் னெடுக்கப்பட்டு வரும் நிலை இரவு பகலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. பொது மக்களின் பங்களிப்பு இருக்கின்றதோ இல்லையோ படைத்தரப்பினர், பொலிஸார் அரச திணைக்களங்கள் மற்றும் அரசு சாராக அமைப்புக்களினால் மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »
August 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் போக்கு வரத்து வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை போக்கு வரத்து சபையின் மன்னார் சாலை இரு சேவைகளை ஆரம்பித்திருக்கின்றன. மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில்; பெரிய பண்டிவிருச்சான் பகுதியைச்சேர்ந்தவர்கள் கடந்த மாதம் தொடக்கம்; அப்பகுதிகளில்; மீள் குடியேறி வரும் நிலையில் அவர்களின் போக்கு வரத்தினைக்கருத்தில் கொண்டு இச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »
August 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மடுத்திருத்தலத்தின் வருடாந்த ஆவனித்திருவிழா திட்மிட்டப்படி இம்மாதம் 6ம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்திருக்கின்றது. யுத்தம் முழுமையாக முடிவடைந்ததன் பின்னர் இடம்பெற்று வரும் இரண்டாவது வருடாந்த ஆவனித்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்திருப்பதாக மடுத்திருத்தலத்தின் நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. Read the rest of this entry »
August 2nd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கை வங்கியின் மன்னார் கிளையில் நாள்தோறும் பாரிய சன நெரிசல் ஏற்பட்டு வருவதால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிகின்றது.1970 ம் ஆண்டளவில் மன்னாரில் அமைக்கப்பட்ட இரண்டாவது கிளையாக இலங்கைவங்கி விளங்குகின்ற போதும் அது மன்னார் மக்களின் விவசாயம், மீன்பிடி, வர்த்தகம், கல்வி மற்றும் பல்வேறு பொதுத் தேவைகளையும் வெகு சிறப்பாக நிறைவேற்றி வருகின்றது. Read the rest of this entry »
July 29th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்துவரும் முஸ்லீம்கள் எதிர்வரும் றம்ழான் நோன்பு பண்டிகைக்காலத்திற்காக முன்னாய்த்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். மன்னாரிலிருந்து 1990ல் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களில்; சுமார் இரண்டாயிரத்தி ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் இதுவரைகாலங்களிலும் மன்னாரில் மீள்குடியேறியிருக்கின்றனர். Read the rest of this entry »
July 29th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் நேற்றையதினம் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். Read the rest of this entry »
July 25th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »
ஜேர்மன் இசை நிகழ்வு சன நெரிசல் விபத்தில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு ஜேர்மனியில் நேற்று (24.07.2010) நடந்த மாபெரும் இசை நிகழ்வின் போது அங்கு இடம் பெற்ற மாபெரும் சன நெரிசலில் 19 பேர் உயிர் இழந்துள்ளனர் மேலும்349 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று மத்திய ஜேர்மனியில் DUISBURG என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது இங்கு நடந்த காதலர் அணிவகுப்பு நிகழ்விலேயே இச் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன் நிகழ்வில் சுமார் 14 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என்று ஜேர்மனி செய்தியாளர் தெரிவிக்கின்றர்.காதலர்களின் இந்த சந்தோச நிகழ்வு துக்க நிகழ்வாய் மாறியதை இட்டு அணைவரும் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர்.