மன்னாரில் அனாமதேய துண்டுப்பிரசுர விநியோகங்களில்; ஈடுபட்டு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

May 2nd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் தேர்தல் காலங்களில் அனாமதேய துண்டுப்பிரசுர விநியோகங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளின் இறுதி காலப்பகுதியில் மன்னார் நகரம் முழுவதும் அணல் பறத்தும் பிரச்சார நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பெரும் முனைப்புடன் ஈடுபட்டு இருந்தன. இந்நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் தெளிவற்ற தன்மையையும் தோற்றுவிக்கும் பொருட்டு இனவாதம், மதவாதம் சார்ந்த அனாமதேய துண்டுபிரசுர விநியோகங்களை சிலர் மேற்கொண்டிருக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் மேதின நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றது

May 2nd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரின் பல பகுதிகளிலும் மே தினக்கொண்டாட்ட நிகழ்வுகள் சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றது. உலக தொழிலாளர் தினம் வெகு சிறப்பாக அணுஷ்டிகப்படும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும் அது சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றது. தொழிலாளர் தினத்தை ஒட்டி மன்னாரிலும் பல பொழுதுபோக்கு நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றது. உலக தொழிலாளர் தினம் அணுஷ்டிக்கப்படும்; நிலையில் உலகம் வாழ் கத்தோலிக்க மக்கள் தமது தொழிலாளர்களது பாது காவலரான புனித சூசையப்பரின் தினத்தையும் நேற்றய தினம் (01.05.2010) நினைவு கூர்ந்திருக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நாடு கடந்த தமிழ் ஈழம் எங்கே புலம் பெயர்ந்த எமது உறவுகளே எமாறதீர்கள்

May 1st, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களே இந்த நாடு இல்லாத ஒரு அரசாங்கம் அமைப்பது என்பது எமது உறவுகளை எமாற்றும் வேலையாகும்.இது வெறுமனே தமிழ்மக்களை எமாற்றும் புஸ்வானமாகும்.எமது தாயகத்தில் வாழும் எமது மக்களுக்கு இந்த அரசாங்கத்தால் என்ன நன்மை கிடைக்கப்போகிறது எம்மக்களே சிந்தியுங்கள். அண்மையில் நிகழ்ந்த யுத்தத்தினால் பல நெருக்கடிகளையும் இன்னல்களையும் எதிர் நோக்கியவர்கள் இலங்கையில் வாழும் எமது தமிழ் மக்களே. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அடம்பன் வைத்தியசாலையில் இராணுவத்தினர் மாபெரும் சிரமதானம்

May 1st, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னார் அடம்பன் வைத்தியசாலையினை மீள்திறக்கும் பொருட்டு அதனை மாபெரும்  சிரமதான வேலைத்திட்டம் ஒன்றின் மூலம் துப்பரவு செய்திருப்பதாக படைத்தரப்பினர் தெரிவித்திருக்கின்றனர். மாந்தை மேற்கின் அடம்பன் பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வைத்தியசாலை கடந்த மாதம் 28ம் திகதி வடமாகான ஆளுனரினால் திறந்து வைக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படைத்தரப்பினர் மேற்படி சிரமதானத்தினை மேற்கொண்டிருக்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இறுதிக் கிரிகை பற்றிய அறிவித்தல்

April 26th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும்

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஐரோப்பிய இணைப்பாளருமான

சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராஜா (அழகன்) (வயது 50, ஜேர்மனி Dortmund)

வவுனியாவில் 25.04.2010 அன்று மாரடைப்பால் அகால மரணமானார்.

அவரின் பிரிவால் மீளாச்சோகத்தில் ஆழ்ந்த அவரது மனைவி,

பிள்ளைகள், தயார், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன்

எமது ஆறாத் துயரை பகிர்ந்து கொள்கிறோம்.

இறுதிக் கிரிகைகள் நாளை (27.04.2010) அவரது வவுனியா இல்லத்தில் சமய கிரிகைகள் நடைபெற்ற பின்னர் பகல் 1 மணியளவில் தட்சணங்குளம் மயனத்தில் தகனம் செய்யப்படும் என அறியத்தரப்படுகிறது.

தொடர்புகளுக்கு

சசி

0094772200638

செந்தீசன்

0032488477905

AddThis Social Bookmark Button

கண்ணீர் அஞ்சலி

April 26th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

                               கண்ணீர் அஞ்சலி

 

               சுப்பிரமணியம் சிறிஸ்கந்தராஜா (அழகன்)

                                                              

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் மத்திய குழு உறுப்பினரும்

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஐரோப்பிய இணைப்பாளருமான

சுப்பிரமணியம் சிறீஸ்கந்தராஜா (அழகன்) (வயது 50, ஜேர்மனி Dortmund)

வவுனியாவில் 25.04.2010 அன்று மாரடைப்பால் அகால மரணமானார்.

அவரின் பிரிவால் மீளாச் சோகத்தில் ஆழ்ந்த அவரது மனைவி,

பிள்ளைகள், தயார், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடன்

எமது ஆறாத் துயரை பகிர்ந்து கொள்கிறோம்.

 

           இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.

 

தொடர்புகளுக்கு                                                         BELGIUM

சசி                                                                                     செந்தீசன்

0094772200638                                               0032488477905

                                          

 

                                         சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

 

 

AddThis Social Bookmark Button

கனடிய ஜனநாயக தமிழ் கலாசார மன்றம் நடாத்தும் ‘மாபெரும் இசை நிகழ்சி’

April 23rd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலங்களிலேயே தமிழ் – சிங்கள மக்களுக்கிடையே புரிந்துணர்வு, சகவாழ்வை வலியுறுத்தி ஆண்டுதோறும் தமிழ் – சிங்களப் புத்தாண்டை கனடிய ஜனநாயக தமிழ் கலாசார மன்றம் நடாத்திவருகிறது. அந்தவகையில் இவ்வாண்டும் ‘மாபெரும் இசை நிழ்ச்சியாக கொண்டாடுகிறது.  (24.04.10) மாலை 5.00 மணிக்கு, 1133 லெஷ்லி வீதியிலுள்ள (எக்லிங்ரன் ரூ லெஷ்லி) ‘கொறியன்’ கலாசார மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு தமிழ் – சிங்கள நண்பர்களை, நண்பியரை பெருந்திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எமது வாசகர்கள் அனைவருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரெலோ நீயூஸ்

April 14th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

எமது வாசகர்கள் அனைவருக்கும் ரெலோ நீயூஸ் தங்களது தமிழ், சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

AddThis Social Bookmark Button

தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு

April 9th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு

http://www.srilankanelections.com/results/results-main.shtml

AddThis Social Bookmark Button

சண்டியரும் வண்டியரும் தாண்டவக்கோனே! எம்மை வறுத்தெடுக்கிறார்கள் தாண்டவக்கோனே!

April 5th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

“தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்தால் பின் விழைவுகளை சந்திக்க வேண்டிவரும்” என்று சண்டியரின் சண்டித்தனத்தையிட்டு யாரும் கடுமையாக யோசிக்க வேண்டியதில்லை. அவர் குறிப்பிட்டது ‘பிராண வாயு’வை. இதைத்தவிர்ப்பதற்கு யாரும் அவருக்கு பின்பக்கமாக நிற்காமல் விட்டால் சரிதானே! இந்த கோமாளி இப்படியென்றால்: Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்தம் நிறைவடைந்தாலும்; பெண்களுக்கெதிரான வன்முறைகள் இன்னும் ஓய்ந்ததாக இல்லை தேர்தலின் பின்னரான மீள்பார்வை

March 24th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

நிறைவடைந்த  ஜனாதிபதித் தேர்தலானது பலதரப்பினருக்கும் ஓர் வித்தியாசமான பாடத்தைப் புகட்டியுள்ளது. குறிப்பாக சிறுபான்மையினர் அரசாங்கத்தினருக்கு தமது வாக்குகளை வழங்காது எதிர்க்கட்சியினர்களுக்கு வழங்கியமையானது அரசின் மீது மக்களுக்கு இருந்துவந்த அதிருப்தியினை வெளிப்படையாகவே காட்டியிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் சிறைச்சாலை சிறைக்கூடத்திற்கு கஞ்ஞா போதைப் பொருளுடன் சென்றவர் கைது

March 24th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

கஞ்ஞா போதைப் பொருளை சிறைச்சாலை சிறைக்கூடத்திற்குள் எடுத்துச்சென்றார் எனும் குற்றச்சாட்டின் பெயரில்  மன்னாரில் கைது செய்யப்பட்ட இளைஞனை தடுப்புக்காவலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார். மன்னார் சிறைச்சாலை சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபர் ஒருவரை சந்திப்பதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தபட்ட போதே குறித்த இளைஞரிடமிருந்து கஞ்ஞா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் மன்னாரில் விநியோகம்!

March 23rd, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக கூட்டமைப்பின் வேட்பாளர்களைச் சாடி துண்டுப் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் வன்னி மாவட்டம் என்று முகவரியிட்டு இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரசுரத்தில் உள்ள சாராம்சம்:- Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தினர் மாந்தை மேற்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவுகளுக்கான நேரடி விஜயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்

March 6th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் தலைவர் தலமையிலான ஆயர்களின் உயர்மட்டக்குழுவினர் மாந்தை மேற்குப் பிரதேசம் உள்ளிட்ட வன்னிப் பெருநிலப்பரப்பு பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். ஜனாதிபதியின் விசேட செயலனியின் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையிலேயே இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றம் மேற்படி பிரதேசங்களுக்கான மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டு அப்பிரதேசங்களின் இயல்பு நிலை தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

“ஓற்றுமையெனும் கையிற்றைப் பலமாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்”

March 6th, 2010 Thulasi Posted in TELOnews No Comments »

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்த சூடு இன்னும் ஆறவேயில்லை அதற்குள் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வந்துவிட்டது. இலங்கை வரலாற்றிலேயே என்றுமில்லாதவாறு பெரும்மலவிலான அரசியல் கட்சிகளும் சுயேற்சைக்குழுக்களும் களம் இறங்கியுள்ளன. ஏறத்தாழ 196 பாராளுமன்ற அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்காக 7620 பேர் அரசியல் குளத்தில் நீச்சல் அடிக்க குதித்துள்ளனர். இவையெல்லாம் விடுதலைப்புலிகள் இன்மையினால் வந்த தையிரியம் போலும் தெரிகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button