தபால் வாக்களிப்பில் மட்டு. மாவட்டத்தில் சரத்தும் திருமலை மாவட்டத்தில் மஹிந்தவும் முன்னணி

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

திருகோணமலை மாவட்டத்தின் தபால் மூல வாக்கெடுப்புகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 6,882 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 3,798 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ 1.491 வாக்குகளையும் சரத் பொன்சேகா 3,637 வாக்குகளையும் பெற்றுள்ளனர்

AddThis Social Bookmark Button

யாழ் மாவட்டத்தின் தபால் வாக்களிப்பில் சரத் முதலிடம்

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

சரத் பொன்சேகா 3,173 71.95%
மகிந்த ராஜபக்‌ஷ 892 20.23%
சிவாஜிலிங்கம் 263 5.96%
AddThis Social Bookmark Button

ஐந்து மாவட்டங்களின் தபால் வாக்குகளில் வெற்றிலை முன்னணி

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

இது வரை வெளிவந்த ஐந்து மாவட்டங்களின் தபால் மூல வாக்கெடுப்புகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 47,939 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 21,986 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

AddThis Social Bookmark Button

மூன்று மாவட்டங்களின் தபால் வாக்குகளில் மஹிந்த முன்னணி

January 27th, 2010 admin Posted in TELOnews No Comments »

மொனராகலை, இரட்னபுர மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தபால் மூல வாக்கெடுப்புகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 23,317 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 10,402 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முதலில் வெளியான மூன்று மாவட்டங்களின் தபால்மூல வாக்கெடுப்புகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்கள் தேர்தல் முடிவுகளுக்கான எமது விசேட இணையப்பக்கத்தில் காணலாம்

AddThis Social Bookmark Button

இன்றைய ஜனாதிபதி தேர்தலில் 70 வீத வாக்குகள் பதிவு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்காளர் தொகையில் 70 விழுக்காடு வாக்காளர்கள் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால வடக்கு கிழக்கில் 20 வீதமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முழுமையான விபரங்களை தேர்தல் ஆணையகத்திடம் இருந்தே எதிர்பார்க்க வேண்டியுள்ளது

AddThis Social Bookmark Button

ஜே.வி.பி. விஜித ஹெரத் உட்பட 40 பேர் வவுனியாவில் விடுவிப்பு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

கிளிநொச்சி செல்வதற்காக வவுனியா ஊடாக சென்றபோதே ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் உட்பட அவருடன் வாகனத்தில் பயணித்த மேலும் 40 பேர் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து வவுனியா பொலிசாரிடம் ‘ரெலோநியூஸ்’ தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரிவித்துள்ளனர்.

AddThis Social Bookmark Button

பாரிய வன்முறைச்சம்பவங்கள் எதுவும் இல்லாமல் வாக்களிப்பு நிறைவு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

இன்றைய ஜனாதிபதி தேர்தலில் குறிப்பிடத்தக்க பாரிய வன்முறைச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் வாக்களிப்பு பிற்பகல் 4 மணிக்கு சுமூகமாக முடிவுக்கு வந்தது.

வாக்குக் கணக்கெடுப்பு மாலை 6 மணிக்கு தொடங்கு மெனவும் முதலில் தபால் வாக்குகள் எண்ணப் படுமென தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருமலையில் வாக்களிப்பு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவரும் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான இராயவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் இன்று வாக்களித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றுக்காக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக்களை கேட்டுக் கொண்ட முதுபெரும் தமிழ்த் தலைவர் சம்பந்தர் தனது வாக்குச் சீட்டை யாருக்கு அளித்திருப்பாரென தெரிய வில்லை.

AddThis Social Bookmark Button

ஸ்ரீ. சு. கட்சியின் யாழ் அமைப்பாளர் இல்லத்துக்கு பெற்றோல் குண்டு வீச்சு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் சுப்ரமணியம் சர்மா இல்லத்துக்கு பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவை சுப்ரமணியம் சர்மாவின் வீட்டு முற்றத்தில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

AddThis Social Bookmark Button

மஹிந்த குடும்பத்துடன் வாக்களிப்பு; சரத் இன்னும் வாக்களிக்கவில்லை.

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 7:30 மணிக்கு தென் மாகாண மெதமுலன ஏ. ராஜபக்ஷ மத்திய மகா வித்தியாலயத்தில் தனது பாரியாருடன் சென்று வாக்களித்தார். ஜனாதிபதியின் புதல்வர்களும் தமது பெற்றோருடன் ஒன்றாகச் சென்று வாக்களித்தனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்னும் வாக்களிக்க வில்லையென தெரிய வருகிறது. ஜெனரல் சரத் பொன்சேகா 2005ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களிக்க வில்லையென அவருக்கு நெருக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

AddThis Social Bookmark Button

வவுனியாவில் இரு இடங்களில் கிரனெட் வெடித்துள்ளதாக அறிவிப்பு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

வவுனியாவில் இரு இடங்களில் கிரனெட் வீசப்பட்டதாக டெய்லிமிரர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்தக் கிரினெட்டுகள் வீசப்பட்டதாகவும் இந்தச் சம்பவங்களால் எவரும் காயமடையவோ குறிப்பிடத்தக்க பாதிப்போ ஏற்படவில்லையென வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர்.

AddThis Social Bookmark Button

நாடு தழுவி இன்று காலை முதல் மக்கள் உற்சாகமாக வாக்குப் பதிவு; வன்முறைச்சம்பவங்கள் சில யாழில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிப்பு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

இலங்கையின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு முதல் மக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தத் தேர்தலையும் விட மக்கள் காலை முதல் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமை போன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேறியவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளடக்கிய விதத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந் திருப்பதாக தெரியவருகின்றது.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார் பகுதியில் இன்று இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள், வாக்குச்சாவடிகள், போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு, தேர்தல் கண்காணிப்புக்கள், மற்றும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் உள்ளடக்கியதான பல்வேறு முன்னேற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதற்கு ஏற்பாடு

January 25th, 2010 admin Posted in TELOnews No Comments »

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியமை அடுத்து தேர்தல் ஆணையகத்தில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் ஊடங்களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தேர்தல்களைக் கண்காணிக்கவென அரசின் அனுமதிபெற்ற கபே மற்றும் பவ்ரல் ஆகிய அமைப்புகளின் பிரதிநிகள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம்

January 24th, 2010 admin Posted in TELOnews No Comments »

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைப்பதற்கான கொழும்பின் பதிலை டெல்கி எதிர்பார்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த ஈழப்போர்-IVயை அடுத்து இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை அமைப்பது குறித்து தனது ஆர்வத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்திருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button