யாழ். வலம்புரி கூட்டமைப்புக்கு எச்சரிக்கை

January 22nd, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலை அடுத்து வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலேயே கண்ணாயிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினசரி நாளிதழ் `வலம்புரி` விசனம் தெரிவித்துள்ளது.

’’…தமிழரசுக் கட்சியை புதுப்பித்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பதவி பெறும் நோக்கமும் அதற்கான ஒன்றுகூடல்களும் நடக்குமாக இருந்தால், யாழ்ப்பாண மண்ணில் சுதந்திரமான-சேவை நோக்கமுள்ள மனிதர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவர். அவ்வாறு களமிறங்கினால் அது வலம்புரிச் சங்கு எடுத்து களமாடிய கண்ண பரமாத்மாவின் குருஷேத்திர வெற்றியாகவே இருக்கும்’’ என யாழ். வலம்புரி தனது இன்றைய நாளிதழ் ஆசிரியர் தலையங்கத்தில் கூட்டமைப்பினருக்கு ஒரு அரசியல் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மஹிந்த 60 விழுக்காடு வாக்குகளால் வெல்வார்

January 21st, 2010 admin Posted in TELOnews No Comments »

60 விழுக்காடுகளுக்கு அதிகமான வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

களனி பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ரோஹக லக்மன் பிரியதாச தலைமையில் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கொரியா வழங்கும் 500 கிலோவட் சூரியக்கதிர் மின் நிலையம்

January 21st, 2010 admin Posted in TELOnews No Comments »

இலங்கைக்கு கொரியா அரசு 500 கிலோ வட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கதிர் மின் நிலையத்தை வழங்க முன்வந்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இந்த சூரியக்கதிர் மின் நிலையத்தை அமைக்க Sri Lanka Sustainable Energy Authority திட்டமிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியாவில் அரச குடியிருப்பை சிவசக்தி ஆனந்தன் ஆக்கிரமிப்பு

January 19th, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் அரச குடியிருப்பொன்றை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடந்த எட்டு ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஆகிரமித்துள்ளதை வவுனியா கச்சேரில் பணி புரியும் மேல்நிலை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

`நாமல் ராஜபக்‌ஷவின் லண்டன் புகைப்படம்` : அம்பலமாகும் `உண்மை`

January 16th, 2010 admin Posted in TELOnews No Comments »

நாமல் ராஜபக்ஷ அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியா போல் அமெரிக்காவும் ஜனாதிபதி தேர்தலில் நடுநிலைமை

January 16th, 2010 admin Posted in TELOnews No Comments »

` பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை` எனும் இந்தியாவின் வெளிவிவகார கொள்கைக்கு அமைய, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா நடுநிலைமையாக இருக்குமென்பதை டில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு சிரேஷ்ட எம்.பி.க்கள் குழுவினரை சந்தித்த இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் தெளிவுபடுத்தி உள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

11,000 முன்னாள் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை; ஏனையோரும் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவர்

January 14th, 2010 admin Posted in TELOnews No Comments »

சிறப்பு புனர்வாழ்வு முகாமிலுள்ள 11,000 மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.  ஏனையோரும் கட்டம் கட்டமாக தொடர்ந்து விடுதலை செய்யப்படுவார்களென இவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் `ரெலோ நியூஸ்`க்கு தெரிவித்தார்.

2009 மே 18க்கு பின் இராணுவத்தால் இனங் காணப்பட்ட முன்னால் புலி உறுப்பினர்கள் மற்றும் யுத்த காலத்தில் சரணடைந்த புலிகள் உட்பட சுமார் 11,000 பேருக்கு மேல் அரசின் சிறப்பு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

`ஆட்சி` மாற்றமா `ஆள்` மாற்றமா : சம்பந்தரிடம் பதில்கோரும் ஸ்ரீகாந்தா

January 13th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு எடுத்த அரசியல் சார்பு நிலையை கேள்விக்கு உள்ளாக்கி அந்த முடிவை அடைய முழு மூச்சாக உழைத்த சம்பந்தரிடம் பதில் கோரும் `ஆட்சி` மாற்றமா? ‘ஆள்` மாற்றமா? எனும் தலைப்பில் துண்டுப் பிரசுரமொன்றை யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ளார்.

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.கே. சிவாஜிலிங்கத்தை ஆதரித்து வெளியிடப்பட்ட அந்த தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டை ஆதரிக்கும் யாழ் `உதயன்` போன்ற ஊடகங்களை `பச்சை` பொய்களை வெளியிடும் தமிழ் பத்திரிகை துறையின் பிரகிருதிகள் என காட்டமாக சாடியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் வருகைக்காக தயாராகும் மன்னார்

January 7th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக எதிர்வரும் 9ஆம் திகதி மன்னார் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வரவையொட்டி மன்னாரில் பிரமாண்டமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் சந்திப்பிற்கான விரிவான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தனது சொந்த மாவட்டமான திருகோணமலையில் சுதந்திரக் கட்சியை பழிதீர்க்க கூட்டமைப்பை பலிக்கடா ஆக்கிவிட்டார் சம்பந்தர்

January 6th, 2010 admin Posted in TELOnews No Comments »

அவரது சொந்த தேர்தல் மாவட்டமான திருகோணமலையில் சுதந்திரக் கட்சியை பழிதீர்க்க இந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பை பலிக்கடா ஆக்கிவிட்டார் சம்பந்தர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘ரெலோ நியூஸ்’க்கு தனது மனக் குமுறலைக் கொட்டித்தீர்த்தார்.

திருகோணமலை மாநகர சபை தலைவர் முகுந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கியமைக்கு ஒரு எதிர்வினையாகவே சம்பந்தர் இந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு சரத்தை ஆதரிக்க வைக்கும் முடிவை எடுக்க ஆரம்பம் முதல் ஒற்றை காலில் நின்றார் என்றார் தனது பெயரை வெளியிட விரும்பாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சரத் பொன்சேகாவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு

January 4th, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக பொன்சேகாவின் அரசியல் பணிமனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான `டெய்லி மிரர்` இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இராயவரோதயம் சம்பந்தனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பின் பின் கூட்டமைப்பு சார்ப்பில் இரா. சம்பந்தன் மேற்படி முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

மன்னாரில் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நடுகை

December 25th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னார் மாட்டத்திற்கென புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் மேல் நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல்லினை பிரதம நீதியரசர் உத்தியோக பூர்வமாக நட்டுவைத்திருக்கின்றார்.

நீதி மறுசீரமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாடிக் கட்டிடத்தினை திறந்து வைத்த பிரதம நீதியரசர் ஜெ.ஏ.என்.டி. சில்வா அவர்கள் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கான அடிக்கல்லினையும் குறித்த தினத்தில் நட்டுவைத்திருக்கின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மூன்று இலட்சம் மக்களையும் அவமானப்படுத்துகிறார் தமிழ்வாணி குமார்

December 21st, 2009 admin Posted in TELOnews No Comments »

இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களையும் தமிழ்வாணி குமார் அவமானப்படுத்தி விட்டாரென இன்னும் அந்த முகாமில் மூன்று வளர்ந்த பெண் பிள்ளைகளுடன் வாழும் கண்டாவளையை சேர்ந்த அன்னபாக்கியம் `ரெலோ நீயூஸ்`க்கு தெரிவித்தார்.

லண்டனில் உள்ள அன்னபாக்கியத்தின் கணவர் மூலம் நாம் அவரை தொடர்பு கொண்டு, வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து வெளியேறி தற்போது பிரிட்டன் எஸெக்ஸில் வசிக்கும் மருத்துவ உதவியாளரான தமிழ்வாணி குமார், தமிழ்ப் பெண்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனரென பிரித்தானிய பத்திரிகைக்கு தெரிவித்தமை குறித்து கேட்டபோது `முகாம்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களையும் அவர் அவமானப்படுத்தி விட்டார்` எனத் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம்

December 21st, 2009 admin Posted in TELOnews No Comments »

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினருக்கும் இடையில் நேற்று இரவு கொழும்பில் ஒரு விசேட சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாமென கொழும்பில் பலமான ஒரு செய்தி உலாவுவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிங்கள பத்திரிகையொன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் `ரெலோ நீயூஸ்`க்கு கருத்து தெரித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இவர் துவாரகா அல்ல! இசைப்பிரியா!!!

December 20th, 2009 admin Posted in TELOnews No Comments »

அண்மையில் இணையத் தளங்களில் வெளியான மரணமடைந்த நிலையில் கிடந்த பெண்ணின் புகைப்படம் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகாவினுடயைதல்ல என தமிழ் இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளன. துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை என இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரவும் தெரிவித்திருந்தார்.

புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளிக் கலைஞரும், செய்தி வாசிப்பாளரும் ஆகிய இசைப்பிரியா என்பவர்தான் மேற்படி புகைப்படத்தில் உள்ளவர். இவர் புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் மனைவியும் ஆவார்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button