மன்னாரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்த பாடில்லை

December 19th, 2009 admin Posted in TELOnews No Comments »

மதவாச்சி சோதனைச்சாவடி பொது போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளபோதிலும் மன்னாரில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தவொரு பொருட்களுக்குமான விலைகள் இதுவரையிலும் குறையடையவில்லை என மன்னார் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யுத்தம் உக்கிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் வடபகுதிக்கான அனைத்து போக்குவரத்துக்களும் மதவாச்சி சோதனைச்சாவடியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலுப்பக்கடவை பகுதியில் மீள் குடியேற்றம் ஆரம்பம்

December 19th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னாரின் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த 17 ம் திகதி இலுப்பக்கடவை பகுதியில் 129 குடும்பங்களைச்சேர்ந்த 515 நபர்கள் தனியார் பேருந்து நான்கில் அழைத்துச் செல்லப்பட்டு மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர். நலன் புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் வடமாகாணத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஏ-9 வீதியூடான பிரயாணத்தை மேலும் இலகுவாக்க வேண்டும்

December 19th, 2009 admin Posted in TELOnews, ஊடக அறிக்கை No Comments »

யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே வவுனியாவில் இருந்து கண்டி-யாழ் ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு பஸ்களில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நடைமுறை கடந்த மாதம் நடுப்பகுதியில் தளர்த்தப்பட்டு, நாட்டின் எப்பகுதியிலிருந்தும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் தமது அடையாள அட்டையின் போட்டோ பிரதி ஒன்றைக் கொடுத்து, அதில் இராணுவ அதிகாரியின் கையெழுத்து முத்திரையைப் பதித்துக் கொண்டு பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஏற்பாடு யாழ்-கண்டி வீதியூடான பிரயாணங்களில் உள்ள கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தியுள்ளதை நாம் முழுமையாக வரவேற்பதோடு ஏ-9 ஊடாக பொதுமக்களின் பிரயாணத்தை மேலும் இலகுவாக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ-ரெலோ) சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வினயமாக கோருவதுடன் பொதுமக்கள் சார்பில் சில ஆலோசனைகளையும் முன்மொழிகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எஸ்.எம்.எஸ் திருமூர்த்திகள் ரி.என்.ஏ.யில் ஏகபோகம்: எம்.பி. தங்கேஸ்வரி

December 18th, 2009 admin Posted in TELOnews No Comments »

எஸ்.எம்.எஸ் [Sampanthar Mavai-senathirajah, Suresh-premachandran] திருமூர்த்திகள் ரி.என்.ஏ.யில் (Tamil National Alliance) ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றச்சாட்டியுள்ளார். யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நான் விரும்பவில்லை. எதிர்காலத்தில் முகம் கொடுக்க வேண்டிய ஆபத்துகளில் தமிழ் மக்களின் பாதுகாப்பரனாக இருக்க கூடியது ஒரே அரசியல் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புதான். ஆகவே, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தங்கேஸ்வரி தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தாய்லாந்தில் தடுக்கப்பட்ட ஆயுத விமானம் இலங்கைக்கு வரவில்லை

December 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

வடகொரியாவில் இருந்து ரஸ்யா தயாரிப்பான ஐ.எல்.76 இராணுவ சரக்கு விமானம் டொன் மியன்ங் விமானா நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரை இறங்கிய போது, தாய்லாந்து அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், தாய்லாந்து ஊடகங்கள் அவ்விமானம் இலங்கை நோக்கி பயணித்ததாக வெளியிட்ட செய்திகளை தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுக்கல மறுத்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் `லங்கா ராணி` அருளர்

December 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தினம் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில், ஈரோஸ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான `லங்கா ராணி` அருளர் என்கிறழைக்கப்படும் ஏ. ஆர். அருட்பிரகாசம் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் நுழைவாயில் சோதனைகள் இதுவரை நிறுத்தப்படவில்லை

December 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னார் நுழைவாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் மேற்கொள்ளப்படுகின்ற சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் இம்மாதம் 10ம் திகதி முதல் நிறுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ அறிவித்திருந்த போதும் அது இதுவரையிலும் அமுலுக்கு வரவில்லை.

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பெயரில் இம்மாதம் 5 ம் திகதி (05.12.2009) மன்னாருக்குக் விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ மன்னார் நகர மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உருத்திரகுமாரனை கைது செய்ய அமெரிக்கா கோரும் `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வுத் தகவல்களை இலங்கை அரசு பரிமாறத் தயார்

December 10th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலம்பெயர் புலிகளின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனை கைது செய்ய அமெரிக்கா கோரும் `சாட்சியங்கள்` மற்றும் புலனாய்வு தகவல்களை இலங்கை அரசு பரிமாறத் தயாராக இருப்பதாக அமைச்சரும், பாதுகாப்புப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் விஸ்வநாதன் உருத்திரகுமாரனுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு, அவர் அமெரிக்க மண்ணில் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் உள்ளாகவில்லையென இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்காவின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் றொபேட் ஓ பிளேக் தெரிவித்திருந்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கை – இந்திய இணைப்புப் பாலமாகவும், தமிழ் – சிங்கள உறவுப்பாலமாகவும் விளங்கும் “ஏ-14” நெடுஞ்சாலை: மக்கள் காதர்

December 10th, 2009 admin Posted in TELOnews No Comments »

ஆங்கிலேயர் எம்மை ஆண்டபோது முதலில் நாட்டின் பாதைகளைத்தான் சீரமைத்தனர். அந்த திட்டத்தில் உருவானதுதான் தலைமன்னார் – மதவாச்சி `ஏ-14` நெடுஞ்சாலையாகும். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாதை அவர்களால் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலேயர்கள் மன்னார் பட்டினத்தில் தளம் அமைத்து மாவட்டத்தை ஆண்டு வந்த போது முதலில் தரைவழிப் பாதையையும், பின்னர் தொடரூந்துப் பாதைகளையும் உருவாக்கினர். அதன்படி முதன் முதலில் உருவாக்கப்பட்டதுதான் இந்த ஏ-14 தரைவழிப் பாதையாகும். அதற்கு முன்னர் சிலாவத்துறை – புத்தளம் கரையோரப் பாதையே மன்னார் – புத்தளம் மக்களின் போக்குவரத்துப் பாதையாக இருந்து வந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் மூன்று கப்பல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளன

December 9th, 2009 admin Posted in TELOnews No Comments »

கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் கே.பியிற்கு சொந்தமான கப்பல்களில் 3 கப்பல்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஊடக மத்திய நிலையம் கடந்த வாரம் கருத்துத் தெரிவித்திருந்தது. கே.பியின் கட்டுப்பாட்டில் சுமார் 14 கப்பல்கள் இருப்பதாகவும் அவற்றில் 5 கப்பல்கள் அவருடையது என உறுதிபடுத்தப்பட்ட நிலையில் அதில் 3 கப்பல்களை இலங்கை கடற்படையினர் கொழும்பு கொண்டு வந்துள்ளதாக `தி ஐலண்ட்` செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

December 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

அண்மையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பிரயாணம் செய்து ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க இலங்கை திரும்பிய நிலையில், யு.என்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்குக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று ஆரம்பித்திருப்பது ஜனவரி-26 ஜனாதிபதி தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மனோ கணேசனின் கோரிக்கையை நல்லதம்பி ஸ்ரீகாந்தா நிராகரிப்பு

December 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்கள் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் விடுத்த வேண்டுகோளுக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முழு இலங்கைத் தீவிலும் வாழும் தமிழ் மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அமைவது திண்ணமென தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மடுத்திருத்தலத்தில் அமல உற்பவ திருவிழா

December 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

மடுத்திருத்தலத்தில் இடம்பெற இருக்கும் அன்னையின் அமல உற்பவ திருவிழாவிற்கு பக்தர்கள் சென்று திரும்புவதற்கான விசேட போக்குவரத்திற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருத்தலத்தின் பரிபாலகர் தெரிவிக்கின்றார்.

கத்தோலிக்க திருச்சபையானது வருடம் தோறும் மார்கழி மாதம் 8ம் திகதியை அன்னையின் அமல உற்பவ திருவிழாவாக கொண்டாடிவருகின்றது. அன்னையின் திருவிழாவிற்கான விசேட அனுமதியினை பாதுகாப்பு அமைச்சு வழங்கி இருப்பதாக மடுத்திருத்தலத்திற்கு பொறுப்பான அருட்தந்தை டெஸ்மன் குலாஸ் அடிகளார் தெரிவித்திருக்கின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சரத் பொன்சேகா திடீர் இந்தியா விஜயம்

December 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

ஐக்கிய தேசிய கூட்டமைப்பினதும் மக்கள் விடுதலை முன்னணியினதும் பொது வேட்பாளராக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று (டிசெம்பர் , 2)  இரவு இந்தியா சென்றுள்ளார்.  அவரது இந்த திடீர் இந்திய பயணம் தனிப்பட்ட பிரயாணம் எனச்சொல்லப்பட்ட போதும் கொழும்பு ஊடகங்கள் பல்வேறு காரணங்களை ஊகித்தெழுதி உள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் நெருங்கி வரும் நிலையில் புதிய திருப்பங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் இருப்பதாக மூத்த ஊடகவியாளர் ஒருவர் ரெலோ நீயூஸ்க்கு கருத்து தெரிவித்தார்.  ஜெனரல் சரத் பொன்சேகா தனது தனிப்பட்ட பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கொழும்பு திருப்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

மாந்தை மேற்குப் பகுதிகளுக்கு பேரூந்து சேவைகள் அதிகரிப்பு

December 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படடிருக்கும் நிலையில் அப்பகுதிகளுக்கான பேரூந்து சேவைகள் தற்போது அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாந்தை மேற்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் மீள் குடியேற்ற நடவடிக்கையை அடுத்து மன்னாரில் இருந்து அடம்பன் பிரதேசத்திற்கான போக்கு வரத்து சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button