மன்னார் விடத்தல்தீவு பகுதியில் நேற்று மீள் குடியேற்றம் ஆரம்பம்

December 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னாரின் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நேற்று (02.12.2009) முதல் ஆரம்பிக்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் முதல் வடமாகாணத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

17 தடுப்பு முகாம்களில் உள்ள 11,000 முன்னாள் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஏற்பாடு

December 2nd, 2009 admin Posted in TELOnews No Comments »

கடந்த மே மாதம் 18ம் திகதி முடிவுக்கு வந்த யுத்தம் 11,000 புலி உறுப்பினர்களை தடுப்பு முகாம்களுக்குள் கொண்டுவந்தது. அவர்களில் 2,000க்கு அதிகமானவர்கள் பெண்கள் ஆகும். இவர்கள் அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி 26ல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வழி செய்யவுள்ளதாக தேர்தல் திணைக்கள ஆணையகம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மீள் குடியேறிய மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்

November 30th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னார் மாந்தை மேற்கில் மீள் குடியேறிய மக்களின் உள்ளக போக்கு வரத்துகளுக்காக படைத்தரப்பினர் துவிச்சக்கர வண்டிகளை இன்று (30.11.2009) வழங்கியிருக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் மாந்தை மேற்கில் மக்களுக்குத தேவையான அடிப்படைத் தேவைகளை வழங்கும் பொருட்டு அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சம்பந்தனை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த கூட்டமைப்பு ஆலோசனை

November 30th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதிக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவும் எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளராக விக்கிரமபாகு கருணாரட்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாக கொழும்பில் உள்ள கூட்டமைப்பின் உள்வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் ”நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

November 30th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னார் தமிழ் நேசன் அடிகளாரால் எழுதப்பட்ட “நெருடல்கள்” கவிதை நூல் தொகுதியினை மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை நேற்று முன்தினம் (28.11.2009) வெளியிட்டு வைத்துள்ளார். மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற “நெருடல்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழாவின் முதற்பிரதியை மன்னார் ஆயர் வெளியீட்டு வைக்க அதனை கலாபூசணம் செபமாலை (குழந்தை) பெற்றுக்கொண்டார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு சிறீ-ரெலோ முழு ஆதரவு

November 28th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கையின் 6வது ஜனாதிபதியை தேர்வு செய்யும் 5வது ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ அவர்களை தமது கட்சி முழுமையாக ஆதரிப்பதாக சிறீ-ரெலோ செயலாளர்  உதயராசா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. சிறீ-ரெலோ கட்சியின் இத் தீர்மானத்தை செவ்வாய் கிழமை (26, செப். 2009) ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை நேரில் சந்தித்த சிறீ-ரெலோ செயலாளர் உதயராசா தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி தேர்தலில் தொடர்பான தமது தீர்மானத்தை தெரிவித்தனர்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதிக்கு மகஜர்

November 27th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னாரிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு நியமணங்கள் வழங்கக்கோரி மாவட்ட செயலகத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச துறைகளில் நியமணங்களை வழங்குமாறு தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையிலேயே மன்னாரிலும் மற்றுமொரு கவனயீர்ப்பு நடவடிக்கை நேற்றய தினம் (26.11.2009) முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

21 புலிகளுக்கு சிறை! தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு தடை! பிரான்சில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு: புனர்வாழ்வுக் கழகமும் தடை செய்யப்படலாம்!!

November 24th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

பிரான்ஸில் வாழுகின்ற தமிழர் சமூகத்திடம் மிரட்டிப் பணம் பறித்த குற்றச் சாட்டின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 21 பேருக்கு பிரஞ்சு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற பெயரில் இயங்கிய புலிகளின் அமைப்பை கலைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போருக்காக பல லட்சக்கணக்கான யூரோக்களை இந்தக் குழுவினர் பிரான்ஸில் வாழும் தமிழ் மக்களிடம் மிரட்டிச் சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ-ரெலோவினர் அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை சந்தித்தனர்.

November 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை கடந்த வாரம் சிறீ-ரெலோவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். துணுக்காய், மல்லாவி, மாங்குளம் போன்ற இடங்களில் மீள்குடியேறியோர்களின் குற்றம், குறைகளை கேட்டறிந்தனர். ’இவ்வளவு விரைவில் தமது சொந்த இடத்தில் குடியேறுவோமென கனவிலும்  நாம் நினைத்து இருக்க வில்லை’’ என சிலர் தமது மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிவித்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ். குடாநாட்டில் போக்குவரத்திற்கு இடையூறான வீதித் தடைகள் நீக்கம்

November 19th, 2009 admin Posted in TELOnews No Comments »

யாழ். குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்ட வீதித் தடைகள் யாவும் படையினரால் அகற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் யாழ். நகரப்பகுதி வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் காவலரண்கள் சிமெந்தினால் கட்டப்பட்டு புனரமைக்கப்பட்டு வருகின்றன. முன்னர் போக்குவரத்திற்கு இடையூறாகக் காணப்பட்ட இந்தக் காவலரண்கள் யாவும் இப்போது பின் நகர்த்தப்பட்டுச் சிமெந்தினால் அமைக்கப்பட்டு வருகின்றன.  ஏ-9 ஊடாக தனியார் வாகனங்கள் விரைவில் அனுமதிக்கப்படலாமென்பதால், வரும் மாதங்களில் யாழ். நகரப்பகுதியில் வாகன நெரிசல் அதிகமாகலாமென்பதை கருத்தில் கொண்டே மேற்படி வீதித் தடைகள் நீக்கப்படுவதாக படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

AddThis Social Bookmark Button

`வசந் – பரா` முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிறீ ரெலோவினரால் திருமலையில் மாபெரும் மென்பந்து கிரிக்கெற் போட்டி

November 18th, 2009 admin Posted in TELOnews No Comments »

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் (Sri – TELO ) `வசந் – பரா` இருவரதும் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருமலை மாவட்டத்தில் இளைஞர்களை வலுவூட்டும் முகமாக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிகெற் போட்டி கடந்த 14ம், 15ம் திகதிகளில் பெரிய முத்தவெளி மைதானத்தில் நடாத்தப்பட்டது. ‘வசந் – பரா` வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெற் போட்டியில் மொத்தம் 32 அணிகள் பங்கு பற்றி விழாவை சிறப்பித்தன.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கே எமது ஆதரவு: சித்தார்த்தன்

November 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான த. சித்தார்த்தன் தனது கட்சி அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியால் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிர் வரும் தேர்தலில் ஆதரவு அளிக்காதென ஏரிக்கரை ஆங்கில ஊடகமான டெய்லி நீயூஸ்க்கு தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணக்கூடிய ஆற்றலுள்ளவரெனவும் தெரிவித்துள்ளார். (http://www.dailynews.lk/epaper/art.asp?id=2009/11/13/pg01_4&pt=p&h=)

AddThis Social Bookmark Button

ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்

November 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

ஜெனரல் சரத் பொன்சேகா முப்படைகளின் பிரதான அதிகாரி பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவி விலகல் தொடர்பான தன்னிலை விளக்கத்தை இன்று ஊடகங்களுக்கு அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

வடக்கின் வசந்தம் தொடர்பான வேலைத்திட்டங்கள் ஊடகங்களுக்கே தெரிவிக்காமல் இருட்டடிப்பு!

November 10th, 2009 admin Posted in TELOnews No Comments »

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வடக்கின் வசந்தம் தொடர்பான வேலைத்திட்டங்களை அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கே தெரிவிக்காமல் இருட்டடிப்புச் செய்வதாக ஞாயிறு (08.11.2009) காலை 10.30 மணியளவில் மன்னார் அரச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மன்னார் பிரதேச ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மாந்தை பகுதிக்கு சிறீ-ரெலோவினர் விஜயம்

November 10th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னாரின் மாந்தை மேற்கில் மீள்குடியேறியிருப்பவர்களை சிறீ ரெலோ அமைப்பினர் இன்று நேற்று (09.11.2009) நேரில் சென்று பார்வையிட்டிருக்கின்றார். கடந்த மாதம் முதல் மன்னாரின் மாந்தை மேற்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அப்பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது. மன்னாரில் மழைக்காலம் ஆரம்பித்திருப்பதினால் மீள் குடியேற்றப்பட்ட மாந்தை மேற்குப்பகுதிகளில் மக்கள் சிரம்மங்களை எதிர் நோக்கியிருப்பதாகவும் தெரியவருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button