சிறீ ரெலோ செயலாளர் நாயகம் ப. உதயராசா மன்னாரில் நிகழும் மீள்குடியேற்றத்தை பார்வையிட விடத்தல் தீவு விஜயம்

November 9th, 2009 admin Posted in TELOnews No Comments »

சிறீ ரெலோ செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மன்னார் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகள், மாட்டத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகள் மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (நவ. 08) காலை 10.30 மணிக்கு மன்னார் அரச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

செனல் 4 வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை

September 16th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய செனல் 4 தொலை காட்சியில் ஒளிப்பரப்பான வீடியோ காட்சியின் உண்மைத் தன்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் உண்மையான காட்சி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

AddThis Social Bookmark Button

யாழ். மாநகர சபையை விட வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்கு வீதம் குறைவானது

August 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

யாழ். மாநகர சபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட 22, 280 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 8008 என்பது 35.9% ஆகும். ஆனால் வவுனியா நகர சபைத் தேர்தலில் அளிக்கப்பட்ட 12, 850 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 4280 என்பது 33.3% ஆகும். யாழ். மாநகர சபையை விட வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்கு வீதம் குறைவானது என்பதையே மேற்படி புள்ளி விபரம் எடுத்துக் காட்டுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வெற்றிலைச் சின்னத்தில் வவுனியாவில் போட்டியிட்ட சிறீ- ரெலோக்கு அதிக வாக்குகள்

August 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியா நகர சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் கட்சிகளில் சிறீ – ரெலோக்கு 1501 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்ப்பில் அதி கூடிய விருப்பு வாக்குகள் பெற்று வவுனியா நகர சபைக்கு எம். எஸ். எம். பாரி என்பவர் தெரிவாகியுள்ளார். இவர் பெற்ற விருப்பு வாக்குகள் 2270 ஆகும். இரண்டாவதாக லலித் என்பவர் 964 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளார். மூன்றாவது இடத்தில் சிறீ- ரெலோ செயலதிபர் ப. உதயராசா 955 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். நான்காவதாக சிறீ- ரெலோ சார்பில் போட்டியிட்ட சோ. சிவகுமார் 546 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இப்போது வாவிமகள்.கொம் சீர்செய்யப்பட்டு விட்டது

August 9th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கனம் இணையத்தள ஆசிரியர் அவர்களுக்கு வாவிமகள் இணையத்தள ஆசிரியரும் உரிமையாளருமாகிய கதிர் அறியத்தருவது என்னவென்றால் கடந்த சில நாட்களுக்கு முன் வாவிமகள்.கொம் இணையத்தளம் தொழிநுட்ப கோளாறு காரணமாக செய்திகளை மக்களுக்கு வழங்குவதில் தடங்கல் ஏற்ப்பட்டிருந்தது. தற்போது வாவிமகள்.பொமில் ஏற்பபட்ட தொழிநுட்ப பிரச்சனை சீர் செய்யப்படட்டு மக்களுக்கு செய்திகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ். மாநகரசபைக்கான சிறீ ரெலோ உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்புமனுவை அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தாக்கல் செய்தார்

June 24th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

எதிர்வரும் யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்றையதினம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது. சிறீ ரெலோ உள்ளடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேற்படி வேட்புமனுவை யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதனிடம் நேரடியாக கையளித்தார். இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ். செயலகத்தில் வேட்புமனு கையளிப்பு இடம்பெற்றபோது சிறீ ரெலோ தலைவர் உதயன் அவர்களும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button

புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீடித்தது அமெரிக்கா

June 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகளின் சர்வதேசப் பிரிவின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் `நாடு கடந்த தமிழீழ அரசு` அமைக்கப்படுமென அறிவித்துள்ள நிலையில், புலிகள் மீதான தடையை மேலும் 5 வருடங்கள் நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டிலில் புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வெற்றிலைச் சின்னத்தில் வெற்றிக் கூட்டமைப்பு

June 23rd, 2009 admin Posted in TELOnews No Comments »

யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri-TELO), ஈழப் புரட்சிகர அமைப்பு (EROS) ஆகியன இணைத்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சன்டேலீடர் சார்பில் சட்டத்தரணிகள் மன்னிப்புக் கோரினாலும் மக்கள் மத்தியில் நான் குற்றவாளி அல்ல என்பதை நிருபித்தல் அவசியம்

June 23rd, 2009 admin Posted in TELOnews No Comments »

`மிக் 27 தாக்குதல் விமான கொள்வனவு` குறித்து அவதூறான செய்தி வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சன்டேலீடர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது  தவறுக்காக மன்னிப்புக் கோரினாலும் மக்கள் மத்தியில் நான் குற்றவாளி அல்ல என்பதை நிருபிக்கவேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 30வது வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான வழக்கில் ஆஜராவது அவருக்கு செய்யும் மற்றுமொரு அவதூறு என சன்டேலீடர் சார்பில் ஆஜரான சட்டத்திரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன் செத்துப் போனதை ஒப்புக்கொண்டார் அறிவுழகன்

June 18th, 2009 admin Posted in TELOnews No Comments »

பிரபாகரன் செத்துப்போன பின்பு அவரின் சாவு தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை, பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரரென, மே, 22ம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது என புலிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப் பிரிவு பொறுப்பாளர்ரென தன்னைக்கூறிக் கொள்ளும் கதிர்காமத்தம்பி அறிவழகன் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பசுமைப் புரட்சியின் தந்தையின் பாததூளி பட்ட இலங்கை

June 16th, 2009 admin Posted in TELOnews No Comments »

சர்வதேசம் முழுவதும் மரியாதையும் மதிப்புமுள்ள இந்திய பசுமைப்புரட்சியின் தந்தையான பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதனின் துணையை வடமகாணத்தின் விவசாய அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ்ச துணைநாடியது மிகமிகப் பொறுப்பு வாய்ந்த செயலாகும். பேராசிரியர் சுவாமிநாதன் 50 வருடங்களுக்கு மேலான விவசாய விஞ்ஞானத்ததின் தத்துவார்த்தத் தேட்டங்களைத் தலையிற் திரட்டியவர் மாத்திரமல்ல அவர் ஒரு நடைமுறை விஞ்ஞானி. தத்துவத்தையும் நடைமுறையையும் ஐக்கியப்படுத்தத் தெரிந்தவர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வன்னி நலன்புரி முகாம்களில் உள்ள கிழக்கு மாகாண மக்களை முதல் கட்டமாக மீள் குடியேற்ற திட்டம்

June 15th, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னி இடைத்தங்கள் முகாம்களில் வசிக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களை முதற் கட்டமாக மீள் குடியேற்றம் செய்ய அரசு ஆலோசித்து வருவதாக  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வன்னிப் பிராந்திய வட்டாரங்கள் ரெலோ நியூஸ்க்கு கருத்து தெரிவித்துள்ளன. யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்த கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள்பலர் தற்போது வவுனியாவை அண்டியுள்ள பல்வேறு நலன்புரி முகாம்களில் உள்ளனர். அவர்களை முதற்கட்டமாக  மீள் குடியேற்ற அரச உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு சிறைத்தண்டனை

June 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் ஏ.சி. சாந்தன் என்ற ழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், வயது 52, என்பவருக்கு ஆயுத தளபாடங்கள் பற்றிய ஆவணங்களை புலிகளுக்கு விநியோகம் செய்த குற்றத்துக்காக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் லண்டன் ஓல்ட் பெய்லி நீதிமன்றம் இரண்டாண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. பிரித்தானியாவில் 2000ம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகள் அமைப்புக்கு உதவியதாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகளை ஸ்கொட்லண்ட் யாட் பொலிசார் சுமத்தியிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

June 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகளால் `சினைப்பர்` தாக்குதல் மூலம் 2005 ஆகஸ்ட் மாதம் கொழும்பில் வைத்து கொல்லப்பட்ட இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் குறித்த வழக்கை கொழும்பு உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ் வழக்கில் முதலாம் பிரதிவாதியான புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் உள்ளது. இதையடுத்து பிரபாகரனின் மரணச் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கூட்டமைப்பு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை; இந்தியாவில் இலங்கைக்குப் பெரிய சந்தை வாய்ப்பு திறந்துள்ளது: சிவ்சங்கர் மேனன்

June 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி வந்துள்ளார்கள். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன் என இலங்கையிலிருந்து வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் சிலரை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் மேனன் சந்தித்து பேசிய போது குறிப்பிட்டார். அவர்கள் மத்தியில் மேனன் கருத்து தெரிவிக்கையில்;  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button