புலிகள் தொடங்கிய நான்காவது ஈழப்போர், 850 பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரை காவு கொண்டுள்ளது. பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் நிர்க்கதியற்ற நிலையில் அந்த குழந்தைகள் நலன்புரி முகாம்களில் வாழ்வதாக அண்மையில் வன்னியில் இடம்பெயர்ந்தோர் வாழும் முகாம்களுக்கு விஜயம் செய்த குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அமைச்சர் சுமேதா ஜெயசேன தெரிவித்துள்ளார். அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் அவசியத்தை புலன்பெயர் தமிழ் சமூகம் இன்னும் உணராமல் மண்ணிலே கயிறு திரிக்கும் `அரசியல்` பேசுவதும் செயல்படுவதும் வெட்கம் கெட்ட வேலையாகும்.