தமிழ் மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து பெற்ற மிகச்சிறிய படிப்பனவு

May 19th, 2009 admin Posted in TELOnews No Comments »

 இன்றோ பிரபாகரன் ஓர் இறந்த கால மனிதன். ஆனால் பிரபாகரன் வாழ்ந்த ஒரு காலம் உண்டு. வரலாறும் உண்டு. எல்லா வகையாலும் ஆளுமை குறைந்த மிகப் பலவீன ஒரு சராசரி மனிதனை விட மிகக்கீழான மனிதனாக இருந்த போதும், இந்தப் பெரிய அரசியற் பொறுப்பை எடுத்து, கால்நூற்றாண்டு தலைமறைவு பங்கர் வாழ்க்கைகள் வாழ்ந்து, ஒவ்வொரு செக்கனும் ஆபத்தின் மத்தியில் வாழ்ந்து, மாபெரும் அதிகாரங்களோடு மோதி, மக்களையும் அழித்து, ஆளுமைமிக்க தமிழர் தலைமை களையும் அழித்து,  தானும் அழிந்து போன மனிதனாகும். இது தமிழ் மக்கள் மிகப்பெரிய விலை கொடுத்து பெற்ற மிகச்சிறிய படிப்பனவாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன்-பொட்டம்மான்-சூசை தப்பிச்செல்ல எடுத்த இறுதி முயற்சி தோல்வி

May 18th, 2009 admin Posted in TELOnews No Comments »

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இருந்து இன்று (மே 18) காலை பிரபாகரன், பொட்டம்மான் மற்றும் சூசை ஆகியோர் அம்புலன்ஸ் வாகனங்களில் மோதல் பகுதியில் இருந்து கரையாமுள்ளி வாய்க்கால் நோக்கி தப்பிச்செல்ல முயன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களின் முயற்சி படையினரால் தோற்கடிப்பட்டதாகவும் அந்த மோதலில் பிரபாகரன் பொட்டம்மான் கொல்லப்பட்டதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்த போர் கசப்பான ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றது : கே.பி.

May 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

எமது மக்கள் இப்போது குண்டுகளாலும் எறிகணைகளாலும் நோய்களாலும் பட்டினியாலும் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். எமது அப்பாவி மக்களுடைய இரத்தம் தொடர்ந்தும் சிந்தப்படுவதை எம்மால் சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எம்மிடம் இப்போது கடைசியாக ஒரே தெரிவுதான் இருக்கின்றது. எமது துப்பாக்கிகளை மெளனிக்கச் செய்வதற்கு நாம் தீர்மானித்திருக்கின்றோம் என புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. ஊடகங்களுக்கு ஈ-மெயில் மூலம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுத்த சூனியமானது சூசையின் புலிக் கடற்படைகள்

May 16th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவு கடலோரமாக வட்டுவாகல் பகுதியில் இருந்து வடக்கு நோக்கி முன்நகர்ந்த பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான 59வது படையணியும், கரையமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தி இருந்து தெற்கு நோக்கி நகர்ந்த பிரிகேடியர் சவிந்திர சில்வா தலைமையிலான  58வது படையணியும் இன்று (மே 16) காலை இணைந்துள்ளதாக பாதுகாப்பு இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.  இதனால் புலிகள் முற்றுமுழுதாக கடல் பிராந்திய தொடர்பு எதுவும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளனர். புலிகளின் தலைவர்கள் கடல் மார்க்கமாக தப்பிச்செல்லக் கூடிய வாய்ப்புகள் மேலும் அருகியுள்ளதாக சொல்லப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரபாகரன் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ளார்: சூசையின் மனைவி

May 16th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (மே 15) காலை கைது செய்யப்பட்ட சூசையின் மனைவி, இரு பிள்ளைகள் உட்பட 11 பேர் புல்மோட்டையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நடந்த விசாரணையில், ’’பிரபாகரன், பொட்டு அம்மான், எனது கணவர் சூசை உட்பட பல புலிகளின் முக்கிய தலைவர்கள் இன்னும் முள்ளிவாய்க்கால் பகுதியில்தான் இருக்கிறார்கள்’’ என சூசையின் மனைவி சத்தியதேவி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி பிள்ளைகள் உட்பட ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கடற்படையினரிடம் பிடிபட்டனர்

May 15th, 2009 admin Posted in TELOnews No Comments »

பதினொரு பேர் கொண்ட படகு ஒன்றை இன்று (மே.15) காலை கடற்படையினர் கடலில் வைத்து காப்பாற்றியுள்ளனர். அவர்களில் புலிகளின் `கடற்தளபதி` சூசையின் மனைவி சத்தியதேவி, மகன் சுரேஸ் (வயது 16),  மகள் மதி (வயது 17)  என்போர் பிடிபட்டதாக படைதுறை செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களுடன் சூசையின் மனைவியின் சகோதரியும் அவரது மகனும் சேர்த்து மொத்தம் 11 பேர் கடற்படையினரிடம் சரண் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூசையின் குடும்பத்தினரிடம் ஒரு தொகை பணமும் அதனுடன் நகைகளும்  இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. (corrected & updated)

AddThis Social Bookmark Button

புலித் தற்கொலைத்தாரி 7வது மாடியில் இருந்து குதித்து மரணம்

May 15th, 2009 admin Posted in TELOnews No Comments »

வெள்ளவத்தை 37வது லேனில் உள்ள ஒர் அடுக்குமாடி குடியிருப்பை நேற்று ( மே. 14) மாலை படையினர் தேடுதல் நடத்தியபோது 7வது மாடியில் இருந்து புலித் தற்கொலைத்தாரி ஒருவர் கீழே குதித்து தன்னைதானே மாய்த்துக் கொண்டுள்ளார். படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலை அடுத்து வெள்ளவத்தை காவல்துறையுடன் இணைத்து குறிப்பிட்ட குடியிருப்பை சோதனையிடச் சென்றபோது தமோதரபிள்ளை சசிதரன், 23, என்ற இளைஞர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

2000க்கு மேற்பட்ட மக்கள் இராணுவம் விடுவித்த பிரதேசத்துக்குள் வருகை; 6000க்கு மேற்பட்ட மக்கள் தப்பி வெளியேறி களப்புக் கடல் நீரில் அந்தரிப்பு

May 14th, 2009 admin Posted in TELOnews No Comments »

முள்ளிவாய்க்கால் பகுதியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில் புலிகள் பணயமாக வைத்துள்ள பொது மக்களை விடுவிக்கும் மனிதாபிமான மீட்டுப் பணியின் இறுதி அத்தியாயத்தில் படையினர் இறங்கியுள்ளனர். வெள்ளமுள்ளி வாய்க்கால், கரையாமுள்ளி வாய்க்கால் பகுதிகளை நோக்கி இரு திசைகளிலும் இராணுவம் இன்று ( மே 14) முன்னேறி, புதிய பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் யுத்த கேடயமாக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுசனத்தில் 2000க்கு மேற்பட்ட மக்கள், பாதுகாப்பாக வெளியேறக் கூடிய சூழலை ஏற்படுத்தினர். புதிய பாதுகாப்பு வலயத்தை நோக்கிய இராணுவத்தின் வருகையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி 6000க்கு அதிகமான மக்கள் களப்புக் கடல் ஊடாக வெளியேறிவருவதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அதிர்வு, தமிழ்வின் படங்களுடன் வெளியிட்ட செய்தி பொய்யானது.

May 14th, 2009 admin Posted in TELOnews No Comments »

அதிர்வு (athirvu.com) மற்றும் தமிழ்வின் (tamilwin.com) போன்ற தமிழ் செய்திகளை வெளியிடும் இணையங்கள் சில, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளதாகவும் அவர்களின் சடங்களில் இருந்து உடலுறுப்புக்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும் அதை ஒரு பாதிரியார் கண்டு புகைப்படம் எடுத்ததாகவும் படங்களோடு செய்திகளை வெளியிட்டு புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் மிகுந்த பரபரப்பை உருவாக்கியிருந்தன. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் பாரிய தற்கொலைப் படகை படையினர் கைப்பற்றினர்

May 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

இராணுவத்தின் 53வது படையணியினர் கரையாமுள்ளி வாய்க்கால் பகுதியில் தற்கொலைத் தாக்குதலுக்கு புலிகள் தயார்நிலையில் வைத்திருந்த 1500கிலோ சி-4 ரக வெடிபொருள் கொண்ட 55அடி நீளமான படகு ஒன்றை இன்று (மே. 13) காலை கைப்பற்றியுள்ளனர்.

AddThis Social Bookmark Button

59வது படையணி வட்டுவாகல் பாலத்தை மீட்டுள்ளது

May 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

  பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையில் 59வது படையணி இன்று (மே. 12) காலை முல்லைத்தீவு நகருக்கு வடக்கே உள்ள வட்டுவாகல் பகுதியையும் வெள்ளமுள்ளி வாய்க்கால் பிரதேசத்தையும் இணைக்கும் வட்டுவாகல் பாலத்தை விடுவித்துள்ளனர். இந்தப் பாலம் மீட்கப்பட்டதை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒர் இராணுவ நடவடிக்கையென படைத்துறை வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். வன்னி மனிதாபிமான நடவடிக்கை அதன் இறுதி நாட்களை நெருங்க உள்ளதை உறுதியுடன் தாம் சொல்லமுடியுமென மேலும் தெரிவித்து உள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுவிஸில் ரெலோ தலைவர் சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகளின் 23வது நினைவஞ்சலி நிகழ்வு

May 11th, 2009 admin Posted in TELOnews No Comments »

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ வின் தலைவர் சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகளின் 23வது நினைவஞ்சலி கடந்த 9.5.2009 அன்று சுவிஸில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். ஆரம்ப கால நினைவுகளுடன் எம்மை விட்டு மறைந்த சிறீ அண்ணா மற்றும் தோழர்களும் நினைவு கூரப்பட்டனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அமரர் சிறீ சபாரட்னம் அவர்களுக்கு திருகோணமலையில் அஞ்சலி நிகழ்வு

May 11th, 2009 admin Posted in TELOnews No Comments »

தமிழ் மக்களின் விடிவுக்காகவும் அரசியல் உரிமைகளுக்காகவும் அயராது உழைத்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்னம் அவர்களின் உயிரை பாசிப் புலிகளின் அதிகார வெறி பலிகொண்ட 23 வது ஆண்டு நினைவு தினத்தில் திருகோணமலை மாவட்ட சிறீ ரெலோ அரசியல் காரியாலய உறுப்பினர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்நிகழ்வுக்கு வருகை தந்து பொதுசார் அமைப்பு பிரதிநிதிகள், கிராம சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து இவ் அஞ்சலி நிகழ்வை சிறப்பித்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

குழந்தைகளையும் பெண்களையும் முன்னிறுத்தி நெடுஞ்சாலையை முடக்குவது அபாயகரமானது; சட்டவிரோதமானது : ரொறொன்ரோ பொலிஸ்

May 11th, 2009 admin Posted in TELOnews No Comments »

குழந்தைகளையும் பெண்களையும் முன்னிறுத்தி நெடுஞ்சாலையை முடக்குவது அபாயகரமானது; சட்டவிரோதமானது என ரொறொன்ரோ பொலிஸ் தலைமையர் பில் பிளையர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான புலிகளின் ஆதரவாளர்கள் ரொறன்ரோவில் உள்ள ஸ்பாடினா அவெனியு கார்டினர் நெடுஞ்சாலையை நேற்று (மே. 10) ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் முடக்கியுள்ளனர். மாலைநேரம் வழமையான நெரிசல் மிக்க கார்டினர் நெடு ஞ்சாலையின் போக்குவரத்தை இந்த ஆர்ப்பாட்டம் முற்றாக முடக்கி விட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியை சிறீ ரெலோ தலைவர் உதயன் அவர்களும் தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்களும் சிறப்பிக்கிறார்கள்

May 8th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

 கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ் ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  09.05.2009  அன்று ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – சிறீ ரெலோவின்  தலைவர் உதயன் அவர்களும் சிறீ ரெலோவின் தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button