அநாமதேய அரசில் கொலைகளின் வரலாறு எமது தேசத்தையும் தாண்டி பாரிஸிலும் தனது கோரமாக பதித்துள்ளது. பாரிஸில் சபாலிங்கத்தின் படுகொலையால் மானிடம் மீண்டும் ஒரு முறை தலைகுனிந்தது. மே மாதம் முதலாம் திகதி (1/5/1994) பிற்பகல் 1 மணியளவில் துப்பாக்கி சகிதம் அவரது வீட்டுக்குள் நுழைந்த இரண்டு இனம் தெரியாத தமிழ் இளைஞர்கள் அவரது மனைவி, குழந்தை முன்னால் சபாலிங்கம் மீது துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்த பின் தொலைபேசி மற்றும் சகல தொடர்புகளையும் நாசஞ் செய்து குடும்பத்தினரையும் எச்சரித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவரது மனைவியும் மகனும் இக்கோரக் கொலையை நேரில் கண்டு பேரதிர்ச்சிக்குள்ளானார்கள். Read the rest of this entry »