புகழ் பெற்ற `பிள்ளை பிடிகாரர்` பாப்பா சுட்டுக் கொலை

April 26th, 2009 admin Posted in TELOnews No Comments »

புலிகள் கிளிநொச்சியில் கோலோச்சிய காலத்தில் விளையாட்டுத் துறை பொறுப்பாளராக இருந்தவரும், வன்னியில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை காலமெல்லாம் கண்ணீர் விட்டு அழவைத்த புலிகளின் `ஆள் சேர்ப்பு` பிரிவுக்கு பொறுப்பாளராகவும் இருந்தவரும், பதினென்மங்களைத் தாண்டாத தமது பிஞ்சுகளை பிடுங்கி எடுத்துச் சென்ற போதெல்லாம் வன்னியில் வாழ்ந்த மக்கள் வயிரெரிந்து மண்ணள்ளி எறிந்து திட்டிய முதன்மை `பிள்ளை பிடிகாரர்` வேலழகன் என்றழைப்பட்ட பாப்பா தனது குடும்ப உறுப்பினர்களுடன் புதுமாத்தளன் பகுதியில் இருந்து சில தினங்களுக்கு முன் கடல் வழியாக படகு மூலம் தப்பிச் செல்ல முற்பட்ட போது சக புலிகளின் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈரோஸ் அமைப்பின் தலைவர் ராஜநாதன் பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்

April 25th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  இன்று சனிக்கிழமை 25.04.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஈரோஸ் அமைப்பின் தலைவர் ராஜநாதன் பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, http://www.trttamilalai.com/ என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

பிரபாகரன் கடல் நீருக்குள் ஓடக்கூடிய ஸ்கூட்டர் வகையான சிறியரக ‘சப்மறின்’ மூலம் தப்பி ஓடலாம் : கட்டளைத் தளபதி சவேந்திர டி சில்வா

April 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவுக்கு இன்று (ஏப். 24) விஜயம் செய்த உள்நாட்டு மற்றும் சர்வதேச பத்திரிகையாளர்கள் சிலருக்கு கருத்துத் தெரிவித்த 58வது படையணியின் கட்டளைத் தளபதி பிரிக்கேடியர் சவேந்திர டி சில்வா, பிரபாகரன் சிறியரக ‘சப்மறின்’ மூலம் யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடக் கூடும் என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வலயத்தில் தனது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் பொறுப்பாளர் சூசை ஆகியோருடன் தற்போது இருக்கும் பிரபாகரன் கடைசிக் கந்தாயத்தில் ‘சப்மறின்’ மூலம் தப்பிச் செல்லக் கூடும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யேர்மனியில் சீனத் தூதரகம் புலி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது

April 24th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கையில் உடனடி `யுத்த நிறுத்தம்` கோரி யேர்மனியில் ஆர்ப்பாட்டம் செய்த புலி ஆதரவாளர்கள் சிலர் பேர்லினில் உள்ள சீனத் தூதரகம் மீது இன்று (ஏப். 24) மதியம் தாக்குதல் நடத்தி உள்ளனர். சீன அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு சீன தூதரகத்தை முற்றுகையிட்ட சுமார் நூற்றுக்கணக்கான ஜேர்மன் வாழ் புலி ஆதரவாளர்கள் தூதரக கட்டிடத்தை நோக்கி சரமாரியான முட்டைகளை எறிந்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யுத்த சூனிய பிரதேச மக்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களை புலிகள் பறித்து அவற்றை மக்களுக்கு அதிகவிலைக்கு விற்றுள்ளனர்.

April 23rd, 2009 admin Posted in TELOnews No Comments »

படையினரின் மனிதாபிமான மீட்டுப் பணி தீர்மானகரமான ஒரு கட்டத்தை நெருங்கிய போது மக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் கடந்த ஜனவரி ஆரம்பத்தில் ‘யுத்த சூனிய பிரதேசம்’ என சில பகுதிகளை அறிவித்தது. அப்பகுதிக்குள் வந்த பொது மக்களின் வாழ்வாதாரத்துக்கான நிவாரணப் பொருட்களையும் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது. அவ்வாறு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை முழுமையாகப் புலிகள் பறித்து எடுத்து அவற்றை மக்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும் அவைகள் தங்களால் வாங்கக்கூடிய விலைக்கு அப்பாற் பட்டதாகவும் இருந்ததாக அங்கிருந்து தப்பி வந்த மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தனுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை; பிரான்ஸ் புலிகளின் முக்கியஸ்தர் குமரன் கைது.

April 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

பிரித்தானிய புலிகளின் பொறுப்பாளர் சாந்தன் என்றழைக்கப்படும் அருணாச்சலம் கிருஸ்சாந்தகுமார், 52, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியென கிங்ஸ்ரன் கிரவுன் கோர்ட் இன்று (ஏப். 17) தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவில் 2000ஆம் ஆண்டில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகள் அமைப்புக்கு உதவியதாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகளை ஸ்கொட்லண்ட் யாட் பொலிசார் சுமத்தியிருந்தனர். இரண்டு குற்றங்களுக்காக இவரை குற்றவாளியாக கண்ட நீதிமன்றம் மூன்றாவது குற்றச்சாட்டு தொடர்பாக அடுத்த வாரம் தீர்மானிக்குமென தெரிகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மக்கள் பாதுகாப்புப் பிரதேசத்தில் புலிகள் ஏராளமான மிதிவெடிகள் விதைப்பு

April 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவின் கடற்கரையோரமாக அரசு அறிவித்த மக்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் புலிகள் ஏராளமான மிதிவெடிகள் விதைத்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்த சூனிய பிரதேசத்திலுள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்குத் திட்டமிட்டுள்ள இராணுவத்தின் 53, 58, 58 ஆவது படைப்பிரிவுகளும் 8 ஆவது சிறப்புப் படைப்பிரிவும் அப்பகுதியில் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள ஏராளமான மிதிவெடிகளை அகற்றிக் கொண்டே முன்னேற வேண்டியுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வாசகர் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

April 14th, 2009 admin Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

அரசியல் உரிமைச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் புதிய நம்பிக்கையோடு அனைவரும் உழைப்போம் : செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா

April 14th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

பிறக்கின்ற சித்திரைப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒளிமயமான எதிர்காலத்தின் வருகைக்கான பாதையைத் திறக்கின்ற வாசல்களாக இருக்க வேண்டும் என்பதே அனைவரினதும் மனவிருப்பமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கையில் கடந்து போன ஆண்டுகளில் பிறந்து வந்த புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளுக்கு மாறாக துயரங்களையும் அவலங்களையுமே எமது மக்களின் வாழ்வின் மீது அதிக சுமைகளாக்கிச் சென்றுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

April 11th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

பிரான்ஸில் இருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை 11.04.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை http://www.trttamilalai.com/என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய வெடி குண்டோசைகள்

April 8th, 2009 admin Posted in TELOnews Comments Off on பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய வெடி குண்டோசைகள்

பாதுகாப்புப் பிரதேசத்தை நான்கு முனைகளில் சுற்றிவளைத்தும் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்கணை போன்ற பகுதிகளை மிக நெருக்கியுமுள்ள படையினர் புலிகளை சரணடையுமாறும் மக்களை சுதந்திரமாக வெலியேற அனுமதிக்குமாறும் ஒலிபெருக்கிகள் மூலம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இன்று (ஏப். 08) பிற்பகல் இறுதியாக விடப்பட்ட அவ்வாறான அறிவிப்புக்கு பின் பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய குண்டு வெடியோசைகள் கேட்டதாக பாதுகாப்பு தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பாராளுமன்ற முற்றுகை சட்டவிரோதமானது : லண்டன் மாநகரக் காவல்துறை

April 7th, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னியில் உடனடி யுத்த நிறுத்தமொன்றை வலியுறுத்தி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன் நேற்று (ஏப். 6) மதியம் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கியவர்கள், சற்று பிற்பகலாக நாடாளுமன்ற சதுக்கத்தை அண்டியுள்ள வெஸ்ட்மின்ஸ்ரர் பாலத்தில் போக்குவரத்தை இடைமறித்து குழுமியதால் அந்தப்பகுதி முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை ஸ்கொட்லண்ட் யார்ட் பொலிஸின் விசேட கலகம் அடக்கும் பிரிவு களத்தில் இறங்கியது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

உடனடி யுத்த நிறுத்தமொன்றை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்ற முற்றுகை

April 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னியில் உடனடி யுத்த நிறுத்தமொன்று ஏற்படும் வரை தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்ரர் பாராளுமன்ற கட்டிடத்தின் முன்பாக காலவரையற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுமாறு பிரித்தானியாவில் உள்ள புலிகள் ஆதரவு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வருகின்றன. முன்னறிவித்தல் இன்றி திடீரென இன்று (ஏப். 6) காலை காலவரையற்ற பாராளுமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தமை புலிகள் தமது இராணுவ தோல்வியை சற்றுப் பின்போட முனையும் கடைசி முயற்சியும் பயனற்று போகப்போவதையே முன்மொழிந்து நிற்பதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

5 மணித்தியாலத்தில் 2000க்கும் அதிகமான மக்கள் வெளியேறினர்

April 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் புதுமாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான 12 கி.மீ நீளமான பாதுகாப்புப் பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ள இராணுத்தின் 55, 58, 53, 59ம் படையணிகள் மற்றும் செயலணி 8ம் அடுத்து வரும் நாட்களில் பெருமளவிலான மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருவார்களென எதிர்பார்ப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

BREAKING NEWS

April 5th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button