யுத்தத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை புலிகள் விடுவிக்கக்கோரும் சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க நீங்கள் இங்கு செலவிடும் ஒரு நிமிடம் உதவக்கூடும் !

April 5th, 2009 admin Posted in TELOnews No Comments »

வன்னியில் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் ஒரு மிகக்குறிய நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான பொது மக்களை மனித கேடயமாக்கி புலிகள் தொடர்ந்து செய்து வரும் `அழிவு யுத்தத்தில்` சிக்கியுள்ள அப்பாவி மக்களை புலிகள் விடுவிக்கக்கோரும் சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க நீங்கள் இங்கு செலவிடும் ஒரு நிமிடம் உதவக்கூடும் !

தயவுசெய்து கீழுள்ள இணைப்புக்கு சென்று, இந்த `கருணை மனு`விற்கு உங்கள் ஆதரவை தெரியப்படுத்துவதன் மூலம், சர்வதேச நெருக்கடிகளை புலிகள் மீது அதிகரித்து, வன்னியில் யுத்தத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களை புலிகள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்குமாறு கோரும் விண்ணப்பத்திற்கு உங்கள் மானசீகமான ஆதரவை தெரிவிக்க முடியும்.

A PLEA TO SAVE OUR FAMILIES, RELATIONS AND FRIENDS IN VANNI  இங்கே அழுத்தவும்

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் நரேந்திரன் அவர்கள் கலந்துகொள்கிறார்.

April 4th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

                        பிரான்ஸில் இருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை 04.04.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் நரேந்திரன் அவர்கள் கலந்துகொள்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை http://www.trttamilalai.com/என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈபிஆர்எல்எவ் (நாபா) யாழ். பொறுப்பாளர் மோகன்

March 20th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 21.03.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா) யாழ்.மாவட்ட பொறுப்பாளர் தோழர் மோகன் அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கலந்துகொள்கிறார். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, http://www.trttamilalai.com/என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

58வது படையணி இரணைப்பாலை சந்தியை அடைந்தது

March 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

58வது படையணி சேர்ந்த 20வது கஜபா படைப் பிரிவினரும் 7வது சிங்கப் படைப் பிரிவினரும் 11வது இலகு காலாற்படையினரும் இணைந்து புதுகுடியிருப்பு பிரதேசத்தில் உள்ள இரணைப்பாலை சந்தியை அடைந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதன் மூலம் புலிகளை மேலும் மிகச்சிறிய ஒரு நிலப்பகுதிக்குள் முடக்கியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சிறீ-ரெலோ தேசிய அமைப்பாளர் அபுயூசூப் அவர்கள் கலந்துகொள்கிறார்

March 7th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் இன்று (07.03.2009) ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ- ரெலோ) தேசிய அமைப்பாளர் அபுயூசூப் அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

யாழ். நடைமுறையை வவுனியாவிலும் செயல்படுத்துமாறு சிறீ-ரெலோ கோருகிறது.

March 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

 யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத வரி மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அவ்வாறு கப்பம் கோரும் நபர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் பாதுகாப்புப் படை அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதன்பிரகாரம் யாழ். படை அதிகாரிகள் முறைப்பாட்டு தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியா வங்கி முகாமையாளரை கடத்தியோர் கைது.

March 6th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியாவில் கடந்த 3ம் திகதி கடத்தப்பட்ட வங்கி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் கடத்தி கப்பம் கோரிய நபர்களும் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ-ரெலோ கப்பம் வாங்குவதாக பொய்யான செய்தி வெளியிடப்பட்டது ஏன்?

March 4th, 2009 admin Posted in TELOnews No Comments »

வவுனியா குருமண்காட்டு பகுதியில் உள்ள சிறீ-ரெலோ காரியாலயத்தில் இருந்த வின்சன், கொன்சன் மற்றும் குணா என்பவர்களை வவுனியா பொலிசார் இன்று (மார்ச். 04) காலை  விசாரணை செய்துள்ளனர். வவுனியா தோணிக்கல் பகுதியை சேர்ந்த கந்தசாமி கதிரேசன் என்பவரின் மகளுக்கு சொந்தமான வான் ஒன்றை இருசாராரும் கையெழுத்திட்ட ஒப்பந்த மூலம் வாடகைக்கு பெற்று சிறீ-ரெலோ பாவித்து வந்துள்ளனர். அதற்குரிய மாத வாடகையை கடந்த இரு மாதங்களாக உரிய நேரத்தில் செலுத்தியும் உள்ளனர். இந்த வாகன ஒப்பந்தம் குறித்த விசாரணைக்காக அவர்களை வவுனியா பொலிசார் அழைத்துச் சென்றனரே அன்றி, நெருப்பு இணையம் வெளியிட்ட செய்தியான  ‘35 இலட்சம் ரூபா கப்பம் வாங்க முற்பட்டபோது பொலிஸாரால் கைது’ என்பது அப்பட்டமான பொய்யாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிளவுபடும் புலிகளின் தலைமைகள்

March 4th, 2009 admin Posted in TELOnews No Comments »

புதுகுடியிருப்பு வீழ்ச்சிக்குப் பின் புலிகளின் மேல்மட்ட இராணுவத் தலைமைகள் தமக்குள் தீவிரமாக முரண்படுவதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கிறன. புதுகுடியிருப்பில் நிலைகொண்டிருந்த சொர்ணம், பானு, ஆதித்தியன், சித்திராங்கன் தலைமையிலான குழுக்கள் அண்மையில் இராணுவத்திடம் ஏற்பட்ட தோல்வியால் ஏற்பட்ட பிரதேச இழப்புக்கு ஆளையாள் மாறி குற்றஞ்சாட்டி வருவதாக அவர்களில் தொடர்பாடல்களை ஒட்டுக்கேட்ட இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஓய்ந்து போன புலிகளின் குரல் !

March 2nd, 2009 admin Posted in TELOnews No Comments »

கடந்த ஐந்து நாட்களாக புலிகளின் குரல் வானொலி தனது வழமையான பண்பலை(FM)  ஒலிபரப்புகளை செய்ய முடியாது போய்யுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் இருந்து பண்பலையூடாக ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலியின் செய்திகளை வழமையாக அதன் இணையத்தளத்தில் அன்றன்றே தரவேற்றி பதிவு செய்து வருவார்கள். கடந்து மாதம் பெப்ரவரி 25ம் திகதிக்கு பின் புலிகளின் குரல் இணையத்தளத்தில் செய்திகள் எதுவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதனை புலிகளின் குரல் இணையத்தளத்தில் அவதானிக்கக் கூடியாதாக உள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈரோஸ் அமைப்பின் தலைவர் ஆர்.பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்

February 27th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 28.02.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஈரோஸ் அமைப்பின் தலைவர் ஆர்.பிரபாகரன்  அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0033 1 48 35 32 00. டான் தமிழ்ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியூடாக கேட்கலாம். ஹொட்பேர்ட் சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை, www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

தமிழ்நெற் வெளியிட்டது பொய்யான தகவல் : விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார

February 27th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கை விமானப் படையினரின் எந்த விமானங்களும் இன்று  புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நெற்றில் வெளியான செய்தியையடுத்து, விமானப்படைப் பேச்சாளரை வீரகேசரி தொடர்பு கொண்டு கேட்ட போது, `அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை. அத்துடன் விமானப்படையினர் இன்று (பெப். 27) வான் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. இது பொய்யான தகவல்` என அவர் தெரிவித்துள்ளதாக வீரகேசரி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அமெரிக்க செனட் சபையில் இலங்கை நிலவரம்

February 25th, 2009 admin Posted in TELOnews No Comments »

அமெரிக்காவின் அதிகாரம் வாய்ந்த செனட் சபையின் வெளிவிவகார குழு முன்னிலையில் நேற்று இலங்கை நிலவரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, இலங்கையில் முன்னர் அமெரிக்க தூதுவராகக் கடமையாற்றிய ஜெவ்றி லன்ஸ்ரெட், மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த அன்னா நைஸ்ராட், சி.பி.ஜே எனும் பத்திரைகையாளரைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய பிரிவுத் தலைவர் பொப் டீற்ஸ் ஆகிய மூவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. கீழுள்ள இணைப்பின் அதை பார்க்கலாம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறுவர்களை கரும்புலிகளாக்கும் புலிகளின் இறுதி யுத்தம்

February 21st, 2009 admin Posted in TELOnews No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த அரச படையினர் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்ற ’குழந்தைப் போராளி’ கரும்புலியாக அனுப்பப்பட்டுள்ளார். அவரது உறுவினர்கள் தெரிவித்த தகவலின்படி நெடுஞ்செழியன் இன்னும் பதினெட்டு வயதை பூர்த்தி செய்யாதவர் என்பது தெரிய வந்துள்ளது.

AddThis Social Bookmark Button

பிரான்ஸில் நடைபெற்ற இந்திய தூதரகத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது தமிழர் சிலர் கைது.

February 17th, 2009 admin Posted in TELOnews No Comments »

இன்று (பெப். 17) பிரான்ஸில் இந்திய தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்கள் சிலர் பிரான்ஸ் காவற்துறையால் கைது செய்யப்பட்டதாக
தெரிய வருகிறது. இந்திய தூதரகத்தின் முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இந்திய தூதரகத்தின் இரண்டு மோட்டார் வண்டிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழர் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட புலி ஆதரவு முகவர் அமைப்பைச் சேர்ந்த பதினைந்துக்கு மேற்பட்டவர்கள் இதுவரை பிணை மறுக்கப்பட்டு தொடர்ந்து தடுப்புக்காவல் சிறையில் வைக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button