வன்னியில் அவதிப்படும் மக்களைக் காப்பாற்ற வலியுறுத்தி கொழும்பில் உண்ணாவிரதம்

February 7th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

வன்னியில் யுத்தப் பேரழிவுகளில் சிக்குண்டு உணவு,உறைவிடமின்றி உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அப்பாவி பொது மக்களை காப்பாற்ற அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டுமென்று கோரி தலைநகர் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப்போராட்டமொன்று நடைப்பெற்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் பொதுமக்களும் சிறீ-ரெலோ அமைப்பினரும் இணைந்து புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்

February 3rd, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

மன்னாரில் பொதுமக்களும் சிறீ-ரெலோ அமைப்பினரும் இணைந்து புலிகளுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டத்தில் 2000-2500 க்கு மேற்பட்ட மக்கள் பங்குகொண்டு வன்னியில் புலிகள் மனிதகேடயங்களாக தடுத்து வைத்துள்ள மக்களை விடுவிக்க வேண்டும் என கோசம் எழுப்பினர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் வைத்தியசாலையில் சிறீ-ரெலோ அமைப்பினர் இரத்ததானம்

February 3rd, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

வன்னியில் இடம்பெறும் யுத்தத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலதிக சிகிச்சைக்கு இரத்தத்தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் சிறீரெலோ அமைப்பினர் நேற்று மன்னார் வைத்தியசாலையில் அம்மக்களுக்காக இரத்த தானம் செய்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

Mannar People Take to Streets Burning Prabhakaran’s Effigy

February 3rd, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

MANNAR: AN estimated crowd of about 2000-2500 peace loving people in MANNAR took to the streets during Tuesday (3) mid-noon and protested against LTTE’s continuing harassment against their kith and kin trapped in the WANNI. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(SRI-TELO) செயலாளர் நாயகம் பரராஜசிங்கம் உதயராசா (உதயன்) கலந்துகொள்கின்றார்.

January 17th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில் எதிர்வரும் சனிக்கிழமை 17.01.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (SRI-TELO) செயலாளர் நாயகம் பரராஜசிங்கம் உதயராசா (உதயன்) அவர்கள் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்: 00 33 1 48 35 32 00. டான் தமிழ் ஒலி வானொலியை ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் TRT தமிழ் அலை வானொலியூடாக கேட்கலாம். HOTBIRD சட்டலைற்றில் ஒலிபரப்பாகும் இந்த வானொலியை  www.trttamilalai.com என்ற இணையத்தளம் ஊடாகவும் கேட்கலாம்.

AddThis Social Bookmark Button

ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

January 14th, 2009 Thulasi Posted in TELOnews No Comments »

 

 

 

 

 

 

 

 

 

ரெலோ நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

AddThis Social Bookmark Button

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வறுமைப்பட்ட மாணவர்களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் வழங்கியது

January 3rd, 2009 admin Posted in TELOnews No Comments »

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் 2ம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சபைகளின் ஒத்துழைப்புடன் திருகோணமலைப் பிரதேசங்களிலிருந்து வறுமையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டஆகக்குறைந்தது ஐந்து குடும்பங்களை சேர்ந்த எல்லா மாணவர்களுக்கும் பாடசாலை அப்பியாசக்கொப்பிகள் இலவசமாக வழங்கும் வைபவம் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்டக் காரியாலய சிறீ ரெலொ உறுப்பினர்களால் ஓழுங்கு செய்யப்பட்டது.

Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

January 1st, 2009 admin Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

செயலணி-1 பரந்தன் நகரை அடைந்தனர்.

December 31st, 2008 admin Posted in TELOnews No Comments »


இராணுவத்தின் தாக்குதல் படையணியான செயலணி-1 இன்று மாலை (டிச.31) பரந்தன் நகரை அடைந்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பரந்தனுக்கு வடக்காக 2 கி.மீ. தொலைவிலுள்ள தட்டுவான்கோட்டை மற்றும் கோமாரிக்குடா பகுதியில் நிலை கொண்டிருந்த புலிகளிகளை தாக்கி அழித்துள்ளதாக களவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதல்களில் புலிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தியதுடன் பல படைப்பொருட்களைக் கைபற்றியுள்ளனர். படையினர் யுத்த தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான பரந்தன் பிரதேசத்தை விடுவித்துள்ளமை புலிகள் மீதான கடந்த இரண்டாண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கையின் முக்கிய மைல் கல்லாகும்.

இதேவேளை 57வது படையணி கிளிநொச்சி நகரை கைபற்றும் நோக்குடன் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். தாக்குதல் படையணியினரின் போர் ஆயுதங்கள் கிளிநொச்சி நகரை அண்டியபகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

AddThis Social Bookmark Button

புளியங்குளம் முதல் நெடுங்கேணி வரையிலான வீதியை படையினர் முழுமையாக விடுவித்துள்ளனர்.

December 28th, 2008 admin Posted in TELOnews No Comments »

செயலணி – 2ம், செயலணி – 4ம் புளியங்குளம் முதல் நெடுங்கேணி வரையிலான வீதியை முழுமையாக விடுவித்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. புளியங்குளத்தில் இருந்து நைனமடு ஊடாக நெடுங்கேணியை நோக்கி முன்னேறிய செயலணி-2ம், நெடுங்கேணியை அண்மையில் விடுவித்த செயலணி-4ம் இணைந்துள்ள நிகழ்வு இன்று நடந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது.  இனி இப்படையணிகள் தண்டுவான் ஊடாக ஒட்டுசுட்டானை குறிவைத்து முன்னேறலாமெனப் படைத்துறை அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

AddThis Social Bookmark Button

இனிய நத்தார் தின வாழ்த்துகள்

December 25th, 2008 admin Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

இறுதி மறிப்புச் சமரில் இருப்பதாக புலிகள் அறிவிப்பு.

December 12th, 2008 admin Posted in TELOnews No Comments »

புலிகளின் இம்ரான் பாண்டியன் சிறப்புப்படையணியின் சிறப்புத் தளபதி வேலவன், ‘நாம் இறுதி மறிப்புச் சமரில் நிற்கின்றோம்’ எனத் கண்டாவளையில் நிகழ்ந்த கூட்டமொன்றில் பேசியதாக புலிகளின் குரல் வானொலிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வன்னியில் நிகழும் யுத்தம் ஒரு தீர்மானகரமான நிலைக்குள் வந்து விட்டது என்பதை துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது. கிளிநொச்சி – பரந்தன் வரையிலான ஏ-9 பாதை படையினரால் கைப்பற்றப்பட்டால் புலிகளின் இறுதித் தோல்வியை யாராலும் காப்பற்ற முடியாது போகும். ஆகவே, கிளிநொச்சி – பரந்தன் புறநகர் பிரதேசத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுத்தம் அனைத்து யுத்தங்களின் தாய் யுத்தமாக கருதக்கூடியது. இந்த யுத்ததில்தான் புலிகளின் வாழ்வும் சாவும் தங்கியுள்ளது என படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தனது புளொக் பதிவில் கருத்தெழுதியுள்ளார்.

AddThis Social Bookmark Button

சிவாஜிலிங்கத்தை இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு மத்திய அரசு பணிப்பு.

December 11th, 2008 admin Posted in TELOnews No Comments »

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கத்தை 72 மணித்தியாளங்களுக்குள் இந்திய மண்ணைவிட்டு வெளியேறுமாறு மத்திய அரசு பணிப்பாணை பிறப்பித்துள்ளதாக பிந்திய செய்தியொன்று தெரிவிக்கிறது.

AddThis Social Bookmark Button

புலிகளின் ஊடகங்கள் திரிபுபடுத்திய ஜெர்மன் பிராங்பேர்ட் நகரச்சம்பவம்

December 10th, 2008 Thulasi Posted in TELOnews No Comments »

சிறீலங்காத் தூதரகத்தின் கண்காட்சிக்குச் சென்ற தமிழர் மீது கத்திக் குத்து மற்றும் கொலை வெறித் தாக்குதல் என்னும் தலைப்பில் புலிகளின் ஊடகங்கள் நேற்று முன்தினம் கத்தி குத்துச்சம்பவம் ஒன்றை பரபரப்பாக செய்திகளாக வெளியிட்டிருந்தன. புலிகளின் ஆங்கில செய்தி இணையமான தமிழ்நெற்றும் தலைப்புச்செய்தியாக வெளியிட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

செயலணி-2 புளியங்குளத்தை கைப்பற்றியது.

December 4th, 2008 admin Posted in TELOnews No Comments »

இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுகளில் ஒன்றான செயலணி-2 (Task Force 2) இன்று மாலை புளியங்குளத்தை கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது. இதன் மூலம்  ஏ-9 பாதையில் உள்ள ஓமந்தையில் இருந்து புளியங்குளம் வரையிலான 8.5 கி.மீ நீளமான வீதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன், ஓமந்தையில் இதுவரை காலமும் இயங்கி வந்த புலிகளில் சோதனைச் சாவடியை அவர்கள் அங்கிருந்து அகற்றி ஒட்டுசுட்டானுக்கு மாற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார்.

ஓமந்தை உள்ள தமது சோதனைச்சாவடியை இராணுவத்தினர் தொடர்ந்தும் வைத்திருப்பார்களா அல்லது அதனை புளியங்குளத்துக்கு மாற்றுவார்களா என்பது குறித்து எம்மால் செய்திகள் எதனையும் தற்போது அறியமுடியவில்லை.

AddThis Social Bookmark Button