வடக்கு கிழக்கில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்?

May 17th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

போரில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கொழும்பு புறநகர் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் மர்ம மரணம்

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 15 வயதான மாணவி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவி தனது வீட்டில் உள்ள அறையொன்றில் அண்மையில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் கிருலப்பனை காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது

AddThis Social Bookmark Button

அவுஸ்ரேலிய பாதுகாப்பு உயரதிகாரிகள் இலங்கையில் முக்கிய பேச்சு

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

அவுஸ்ரேலியாவின் கூட்டு முகவர் அதிரடிப்படையின் தளபதியான எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இன்று நடந்த இந்தச் சந்திப்பில், சிறிலங்கா குழுவில் பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ், கடற்படை நடவடிக்கை பணிப்பாளர், றியர் அட்மிரல் பியல் டி சில்வா, கடலோரக் காவல்படையின் தளபதி றியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பதிகாரி, பிரிகேடியர் ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவுஸ்ரேலிய குழுவில் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலங்கையில் முதல் சைபர் தாக்குதல்

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

காலி மாவட்டச் செயலகத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு, முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானி சைபர் நிபுணர் குழு என்ற அமைப்பே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.

காலி மாவட்டச் செயலகத்தின் இணையத்தளத்தினுள் நுழைந்த இணைய ஊடுருவிகள், அதில் பாகிஸ்தான் ஜந்தாபாத், இஸ்லாம் ஜிந்தாபாத், முஸ்லிம்கள் ஜிந்தாபாத், பாகிஸ்தானிய இராணுவம் ஜிந்தாபாத், பாகிஸ்டதான் ஐஎஸ்ஐ ஜிந்தாபாத், காஷ்மீர் விடுதலை, சிரிய விடுதலை, பலஸ்தீன விடுதலை என்று செய்தி ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

உலகெங்கும் 99 நாடுகளின் இணையத்தளங்கள் மீது கடந்தவாரத்தில் ரன்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சிறிலங்காவிலும் இத்தகைய தாக்குதல் இடம்பெறாலாம் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிள்ளைகளின் பசி தீர்க்க மரம் ஏறிய தந்தை பரிதாபமாக பலி

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

நாவலப்பிட்டியில் பிள்ளைகளின் பசியை தீர்ப்பதற்காக பலா மரத்தில் ஏறிய தந்தையொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிள்ளைகள் பசியினால் வாடுவதால் அவர்களுக்கு இரவு உணவாக பலா சுளைகளை அவித்து கொடுக்கும் நோக்கில் பலா மரத்தில் ஏறிய நபர் அதிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி, கெட்டபுலா தோட்டத்தைச் சேர்ந்த 37 வயதான எஸ்.பெரியப்பன் என்ற நபரே சம்பவம் காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த குறித்த நபர் கடுமையான வறுமையில் வாடியவர் எனவும், பலாக்காய் ஒன்றை பறித்து Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

May 16th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு – கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் 35 – 40 வயது மதிக்க தக்க ஆணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

கல்லடி திருச்செந்தூர் பகுதியில் உள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

AddThis Social Bookmark Button

நடுக்கடலில் நசுக்கப்பட்ட தமிழர்களின் உயிர்கள்! குமுதினி படகு படுகொலை இடம்பெற்று இன்றுடன் 32 ஆண்டுகள்

May 15th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

இலங்கையில் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிலடங்காத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த சம்பவங்கள் அனைத்தும், இன்று வரையிலும் தமிழ் மக்களின் ஆழ் மனதில் பதிந்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.

நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களுக்கு இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் நடுகடலில் வைத்து கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரமுகர்கள் சென்ற புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ள தயாராக இருந்தவர்கள் கைது

May 15th, 2017 editor Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »

கண்டி – கடுகண்ணாவைக்கு இடையில் புகையிரதம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருந்த நான்கு பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டிலான வெசாக் கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்வுகளில் கலந்து கொண்டு கண்டியில் Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழில் இரயிலுடன் மோதியது இராணுவை ட்ரக் வண்டி

May 11th, 2017 admin Posted in TELOnews No Comments »

யாழ்லிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட கடுகதி புகையிரதமானது சாவகச்சேரி சங்கத்தானை பகுதியை கடந்து.செல்லும்போது புகையிரத கடவையை  கடக்க முற்பட்ட இராணுவத்தினரின் ட்ரக் வண்டி இரயிலுடன் மோதி

விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தெய்வாதீனம்மாக உயிர்சேதம்  ஏதும் ஏற்படவில்லை ட்ரக் வண்டியில் பயணித்த இராணுவ வீரர்கல் சிறுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

31 வது ஆண்டு நினைவேந்தல் தலைவர் சிறீ சபாரட்ணம்

May 6th, 2017 admin Posted in TELOnews No Comments »

AddThis Social Bookmark Button

சபாரத்தினம் அவர்களின் 31வது ஆண்டு நினைவு கூறல்

May 5th, 2017 admin Posted in TELOnews No Comments »

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 31வது ஆண்டு நினைவு கூறல் 05.05.2017 இன்று மாலை 5.30மணிக்கு நிகழ்வு அன் னார் சுட்டு கொல்லப்பட்ட கோண்டவில் கிழக்கு கோகுலவீதி அன்னங்கை தோட்டவெளியில் சிறீ ரெலோ இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ். செந்தூரன் தலைமையில் நினைவு கூறப்பட்டது

AddThis Social Bookmark Button

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு

May 5th, 2017 admin Posted in TELOnews No Comments »

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.வவுனியா, மன்னார் வீதி குருமன்காட்டில் அமைந்துள்ள சிறீரெலோ கட்சியின் காரியாலயத்தில் இன்று (05) மாலை 5.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந்த நிகழ்வானது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (telo) மூத்த உறுப்பினரும் படுகொலை செய்யப்பட்ட சபாரத்தினத்தின் மெய்ப்பாதுகாவலருமான அஜித் தலமையில் நடைபெற்றுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்?

April 20th, 2017 editor Posted in TELOnews No Comments »

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வரும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் நோக்கில் அடுத்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நரேந்திரமோடி இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புதுவருடத்திலாவது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாருக்கு தீர்வு கிடைக்குமா? : ப.உதயராசா

April 14th, 2017 Thulasi Posted in TELOnews No Comments »

புதுவருடம் பிறக்கின்ற நேரத்தில் கூட உறவுகளை மீட்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மாருக்கு இவ்வாண்டிலாவது தீர்வு கிடைக்க வேண்டும் என சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எமது வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரெலோ நீயூஸ்

April 14th, 2017 Thulasi Posted in TELOnews No Comments »

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான மனநிறைவான ஆண்டாக அமைய ரெலோ நீயூஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

www.telonews.com

AddThis Social Bookmark Button