இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க
சில தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய தமக்கு விடுதலை கிடைக்குமென நம்பி முன்பு இரு தடவைகள் தங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் தமது உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் உத்தேசத்தை வெளியிட்டுள்ளனர். இக்கடிதம் எழுதப்படும் இவ்வேளையில் அவர்களுடைய உண்ணாவிரதம் ஆரம்பமாயிருக்கும். இம்முறை தங்களில் பதினைந்து பேர் மட்டுமே; உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தாம் மட்டுமே அடிக்கடி நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், தம்மை விடுதலை செய்கின்ற தீர்மானத்தை எடுக்கின்ற அதிகாரம் தனக்கு இல்லையென்று நீதவான் கூறுவதாகவும் குறிப்பிடுகின்றனர். அதனாலேயே இம் முறை தாங்கள் மட்டுமே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் முன்பு தம்முடன் உண்ணாவிரதம் இருந்தவர்களில் 39 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். எஞ்சியோர் எதுவித விசாரணையுமின்றி தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தமது உடல்களை யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மருத்துவ பீடங்களில் கையளிக்குமாறும் தமது அங்க அவயங்களில் பொருந்தக் கூடியவர்களுக்கு பொருத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read the rest of this entry »