November 17th, 2008 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »
November 16th, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
November 16th, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
இந்திய மத்திய அரசு உடனடியாக யுத்தத்தை நிறுத்தி விடுதலைப் புலிகளுடன் பேசுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதிர்ச்சி தருவதோடு இலங்கை தமிழ் மக்களுக்குக்கூட ஏற்புடையதல்ல. இத் தீர்மானம் இந்திய அரசுக்கே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். இலங்கை பாராளுமன்றத்தில் இத்தகைய முறையற்ற தலையீட்டை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற அதிக நேரம் எடுக்காது என்பதை இத் தீர்மானத்தை ஆதரித்தவர்கள் உணரத் தவறியது பரிதாபத்துக்குரியதாகும்.
November 10th, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
கால்நூற்றாண்டுக்கு மேல் தமிழ்மக்களுக்காக களப்பணியாற்றிய தோழர் டக்ளஸ் தேவானந்தா இன்று 52வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார். தெற்கின் இனவாதத்திற்கெதிராகவும் வடக்கின் பயங்கரவாதத்திற்கெதிராகவும் தனது வாழ்வை தமிழ் மக்களின் விடிவுக்கான போராட்ட வரலாறாக ஆக்கியவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா. தமிழ் மக்கள் மத்தியில் ஏக தலைமையெனும் அறம் அற்ற அரசியல் தலைதூக்கிய காலத்தில் இருந்து இன்று வரையும் அதற்கெதிராக இடைவிடாது போராடிவரும் மாற்றுக் கருத்தாளர்களில் முன்னேடிகளில் ஒருவரான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ரெலோநீயூஸ் தனது மனம் நிறைந்த பிறந்ததின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
November 8th, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் “டான் தமிழ் அலை” வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சி ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிமுதல் 12 மணிவரை ஒலிபரப்பாகிவருகின்றது. 08.11.2008 சனிக்கிழமை இன்று இடம்பெறவுள்ள உறவுப்பாலம் நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (PLOTE) மத்தியகுழு உறுப்பினரும் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான திரு கே. சிவநேசன் (பவன்) அவர்கள் வவுனியாவிலிருந்து கலந்துகொள்கின்றார். வன்னியின் தற்போதைய நிலைமைகள் குறித்து நீங்களும் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் முன்வைக்கலாம்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 0044 207 047 0655
November 7th, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
அகவை 42ல் தடம்பதிக்கும் தமிழினத்தின் தானைத் தலைவன் கிழக்கின் விடிவெள்ளி கருணா அம்மானின் பிறந்த தினத்தில் கிழக்கின் தனித்துவமான குரலாக கிழக்கு.கொம் புதிய இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலை, விடுதலை என்று வீரவசனம் மட்டும் பேசி விளைந்த எம் சந்ததிகளை எல்லாம் ‘வீரவேங்கைகள்’ என்ற பெயரில் விண்ணுலகிற்கு அனுப்பிவைத்த போலித் தலைவர்கள் மத்தியிலே விடுதலையுடன் விவேகமாயும் சிந்தித்திட்ட எம் தலைவா வாழ்க நீ நீடுழி என கிழக்கு.கொம் தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் கருணா அம்மானுக்கு ரெலோநீயூஸ் தனது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
October 24th, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
கிழக்கு மாகாண மக்களின் குறைகளைத் தீர்க்க ஆளும் தரப்பினர் 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் (ரெட்ணம்) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
October 22nd, 2008 admin Posted in ஊடக அறிக்கை No Comments »
யாழ்ப்பாணத்துக்கு உணவுப்பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கப்பல் மூலமாகவே அனுப்பப்படுகின்றது. யாழ் குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், விலையுயர்வு இருப்பதாகவும் வெறும் வாய்ப்பிரசாரம் செய்தவர்கள், மக்களின் அவலங்களை எப்போதும் வேடிக்கை பார்த்ததே வரலாறாக இருக்கின்றது. ஈ.பி.டி.பி. ஆகிய நாம் வேடிக்கை பார்க்காமல் மக்களின் துயரங்களைப் போக்கும் ஆக்கபூர்வமான முயற்சிகளை அயராது எடுத்ததன் பயனாகப் பொருட்கள் தட்டுப்பாட்டையும் அதீத விலையுயர்வையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். உணவுப் பொருட்கள், கட்டுமாணப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றைத் தாராளமாக யாழ். குடாநாட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்தோம். அதுவும் கொழும்பு விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் பாடுபட்டோம். Read the rest of this entry »