ஏ-9 வீதியூடான பிரயாணத்தை மேலும் இலகுவாக்க வேண்டும்

December 19th, 2009 admin Posted in TELOnews, ஊடக அறிக்கை No Comments »

யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே வவுனியாவில் இருந்து கண்டி-யாழ் ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு பஸ்களில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நடைமுறை கடந்த மாதம் நடுப்பகுதியில் தளர்த்தப்பட்டு, நாட்டின் எப்பகுதியிலிருந்தும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் தமது அடையாள அட்டையின் போட்டோ பிரதி ஒன்றைக் கொடுத்து, அதில் இராணுவ அதிகாரியின் கையெழுத்து முத்திரையைப் பதித்துக் கொண்டு பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஏற்பாடு யாழ்-கண்டி வீதியூடான பிரயாணங்களில் உள்ள கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தியுள்ளதை நாம் முழுமையாக வரவேற்பதோடு ஏ-9 ஊடாக பொதுமக்களின் பிரயாணத்தை மேலும் இலகுவாக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ-ரெலோ) சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வினயமாக கோருவதுடன் பொதுமக்கள் சார்பில் சில ஆலோசனைகளையும் முன்மொழிகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஒரு புதிய தாயகத்தை நிர்மாணிப்பதில் பங்குதாரர்களாவோமாக…

December 3rd, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

ஐக்கிய இலங்கையின் தேசிய சுதந்திரத்தின் பின்னரான ஆறு தசாப்தங்களுக்கு மேலான காலகட்டத்திலே தற்போது போல அரசியல் ரீதியாக மிகவும் விறுவிறுப்பானது முக்கியமானதுமான காலகட்டம் வேறெப்போதும் இருந்ததில்லை.

உலக அளவில் ஏகாதிபத்திய பிற்போக்குச் சக்திகள், இன்று உலக சமூகப் பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்திக் கொண்டிருக்கும், உணவு, எரிபொருள், நிதி, சுவாத்திய நிலை மாற்றம் போன்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்துத் தடுமாறும் போது, நாம் எம்மை ஆட்டிப்படைத்த பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து முற்றாக மீட்கப்பட்டுள்ளோம். இனி தேசத்தைக் கட்டியெழுப்பும் கைங்கரியமே எம் முன்னுள்ள பிரதான செயல் திட்டமாக உள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ-ரெலோ தனது தேசிய மாநாட்டில் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றியுள்ளது.

August 18th, 2009 admin Posted in ஊடக அறிக்கை Comments Off on சிறீ-ரெலோ தனது தேசிய மாநாட்டில் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றியுள்ளது.

15/08/2009

 

ஊடகச் செய்தி

ஆகஸ்டு 10ம் திகதி கூடிய எமது கட்சியின் மத்திய குழு, நாட்டின் தற்போதய அரசியல் நிலைமைகளை கூர்மையாகவும் கவனமாகவும் ஆராய்ந்து, மாறிவரும் தேசிய, சர்வதேச அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலைமைகளுக்கேற்ப கட்சியின் புதியதோர் மூலோபாயத்தையும் அதை நடைமுறையில் யதார்த்தமாக்கக் கூடிய உபாயங்களையும் தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் மேலதிக தேசிய மாநாட்டை உடனடியாக கூட்டுவதற்கு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.

நாம் தற்போது அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் பாராளுமன்ற தேர்தல் சட்ட மூலத்திற்கான திருத்தங்களை நிபந்தனையற்று ஆதரிப்பதெனவும் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.

கட்சியின் எதிர்வரும் மேலதிக தேசிய மாநாட்டில் கட்சியின் பெயரை “புதிய தாயகம்” என மாற்றி ஒரு உண்மையான ஐக்கியப்பட்ட சமதர்ம ஜனநாயகத்தை எமது நாட்டில் உருவாக்கும் அரசியல் பிரவாகத்திற்கு உதவும் வகையில் கட்சியின் சட்ட திட்டத்தை (யாப்பை) திருத்துவதற்கான ஆலோசனையையும் மாநாட்டிற்கு வழங்குவதெனவும் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம்.

மத்திய குழுவிற்காக

ப.உதயராசா
(செயலாளர் நாயகம்)

http://www.telonews.com/wp-content/uploads/2009/08/sritelo.pdf

AddThis Social Bookmark Button

வவுனியாவில் நாம் எந்தவொரு அமைப்பிற்கு எதிராகவும் பிரச்சாரங்கள் செய்யவில்லை: சிறீரெலோ

August 7th, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

வவுனியாவில் சிறீ ரெலோ தமது அமைப்புக்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு வவுனியா நகரெங்கும் இன்று வீதிவீதியாக வீசிச் சென்றுள்ளதாக புளொட் அமைப்பினர் குற்றம் சாட்டி தமது இணையத்தளங்கள் உடாக செய்தி வெளியிட்டுள்ளனர். இப்படிபட்ட கீழ்தரமான எந்தவொரு செயல்களையும் நாம் செய்யவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இது அவர்கள் எமது வழர்ச்சியை கண்டு பொறுக்கமுடியாமல் எம்மீது சேறு பூசும் வேலையாகவும் எங்கே தங்கள் அமைப்பு தோற்று போய் விடுமோ? என்ற பயத்தின் நிமிர்த்தம் இப்படி புலம்புகிறார்கள் எதற்கும் காலம் பதில் சொல்லும் எம்மை மக்கள்  நன்கு அறிவார்கள்.

 நாம் வன்முறை மீது காதல்கொண்ட மனநோயாளிகளோ அன்றி அதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களோ அல்ல: தேசபிதா:தங்கதுரை

சிறீரெலோ ஊடகப்பிரிவு: வவுனியா

AddThis Social Bookmark Button

வடக்கின் வசந்தத்துக்கு வவுனியாவை வாசலாக்குவோம்.

July 14th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

அன்பான தமிழ் பேசும் மக்களே!

எமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க தொடங்கிய போராட்டம், ஏகதலைமைத்துவ பாசிசக்கனவால், கால்நூற்றாண்டு காலம் நீண்ட கொடிய யுத்தமானதால் தமிழ் சமூகத்தின் அரசியல் சமூக பொருளாதார அடித்தளங்கள் ஆண்டங்கண்டுள்ளது. அவைகளை நாம் மீள் நிர்மாணம் செய்ய ஜனநாயக வழிகளைத் தவிர வேறொரு வழியும் நம் முன் நடைமுறை சாத்தியமாக இல்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சில் மீண்டும் சிறீ ரெலோ தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்

July 10th, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ் ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  11.07.2009   ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – சிறீ ரெலோவின்  தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

‘ALL NATIONS FESTIVAL’ held in Berlin

July 8th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

The Embassy of Sri Lanka in Berlin, for the ninth consecutive year, participated in the ‘ALL NATIONS FESTIVAL’ held in Berlin on 4th July 2009 from 1000 hrs. to  1900 hrs. in the Chancery premises.

The doors of the Embassy were opened to the German Public and the Sri Lankan expatriate community to have a glimpse of the country. The Open  Day in summer is one of the regular calendar events of the Embassy’s  promotional activities. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்களின் முதல்தர எதிரி தமிழ் தேசிய கூட்டமைப்பு: ஆனந்தசங்கரி

June 8th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

புலிகள் அழிந்து விட்டதால் புலிகளின் பிரதிநிதிகள் எனக் கூறியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) எம். பிக்கள் கெளரவமாக பதவி விலகவேண்டும். தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே பதில் சொல்ல வேண்டுமென்றும் தமிழர்களின் முதல்தர எதிரி, தமிழ் தேசிய கூட்டமைப்பே எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் அலை உறவுப்பாலம் நிகழ்ச்சில் சிறீ ரெலோ தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்

June 6th, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ் ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  06.06.2009  இன்று ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – சிறீ ரெலோவின்  தேசிய அமைப்பாளர் அபூயூசூப் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்அலை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஈரோஸ் அமைப்பின் தலைவர் ராஜநாதன் பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்

May 23rd, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

கொழும்பிலிருந்து ஒலிபரப்பாகும் டான் தமிழ்ஒலி வானொலியில் பிரதி சனிக்கிழமை தோறும் இடம்பெறும் உறவுப்பாலம் நிகழ்ச்சியில்  இன்று சனிக்கிழமை 23.05.2009 ஐரோப்பிய நேரம் இரவு 10 மணிக்கு ஈரோஸ் அமைப்பின் தலைவர் ராஜநாதன் பிரபாகரன் அவர்கள் கலந்துகொள்கிறார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

நாட்டின் துப்பாக்கிக் கலாசாரத்தை முற்றாக ஒழிக்க சட்ட விரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

May 21st, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதன் மூலம் நாட்டில் சமாதானத்தை கொண்டு வந்தமைக்காக ஜனாதிபதியை வாழ்த்துகிறேன். புலிகளின் தோல்விக்காக உழைத்த ஒவ்வொருவரையும் நன்றியுடன் நினைவு கூறுவதோடு, நாட்டின் துப்பாக்கிக் கலாசாரத்தை முற்றாக ஒழிக்க சட்ட விரோதமாக துப்பாக்கிகள் வைத்திருப்போர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் முழுமையாக வருமாறுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் சிதைவே ஜனநாயக மீட்சிக்கும் இனநல்லுறவுக்குமான திறவுகோல்

May 20th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

பாசிசப் புலிகளின் கட்டமைப்பு முற்றாக சிதைக்கப்பட்டுள்ளது. இதனூடாக புலிகளின் சுமார் 3 தசாப்தகால கொடும்கோன்மை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தாயக சுதந்திரம் என்று கோசமிட்டுக் கொண்டு தாயகத்தையே சின்னாபின்னமாக்கி தனது சொந்தமக்களையே கொன்று குவித்த, தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் முழு இலங்கைத் தீவையும் குலைநடுங்கச்செய்த பாசிஸ்ட்டுக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த முடிவானது இலங்கையின் எதிர்கால சந்தததியினருக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் ஒரு இடைவெளி ஏற்பட்டிருப்பதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மாயையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

May 18th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

என்னைப் பொறுத்தவரையில் பிரபாகரன் இன்று கொல்லப்பட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பிரபாகரன் என்றோ தற்கொலை செய்து கொண்டவர் என்றே நான் கருதுகின்றேன். எமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடப் புறப்பட்ட சகோதர இயக்கத் தலைவர்களையும், பல்லாயிரக்கணக்கான சக இயக்கப் போராளி களையும் தெருத்தெருவாகப் புலித்தலைமை கொன்றொழித்த போதே பிரபாகரன் தற்கொலை செய்துவிட்டதாகவே நான் கருதுகின்றேன். ஆயுதப்போராட்ட வழியில் மட்டுமன்றி அகிம்சை வழியில் உரிமை கேட்டு போராடியிருந்த தமிழ்த் தலைவர்களையும் சேர்த்தே புலித்தலைமை கொன்றொழித்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவே நான் கருதுகின்றேன். பல நூறு புத்தி ஜீவிகளையும் தலை சிறந்த கல்விமான்களையும் புலித்தலைமை கொன்றொழித்திருந்தது. அப்போதே பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவே நான் கருதுகின்றேன். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிவகை

May 13th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

தமிழ் மக்களே!
எமது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அணி திரள்வீர்!!

அன்பான தமிழ் மக்களே,

இலங்கையில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தமிழ்மக்கள் அனுபவித்து வரும் சொல்லொணா துயரங்கள் நாம் அறிந்த ஒன்றே. இதற்கு ஒரே காரணம், எமது தலைவர்கள் சிலரால் முன் யோசனை எதுவுமின்றி ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் தான் என்பதை, தமிழ் மக்களின் இன்றைய அவல வாழ்க்கை எடுத்தியம்பி நிற்கின்றது. ஆயுதப்போராட்டம் தமிழ் மக்களுக்கு அழிவைத்தவிர வேறு எதையும் கொண்டுவராது என, எமது சமூகத்தில் இருந்த பல அறிஞர்களும், அனுபவசாலிகளும் எடுத்துரைத்தும் அதை ஏற்காது, தமது சொந்த அரசியல் லாபத்துக்காக சில அரசியல் தலைவர்கள் விடாப்பிடியாக அதை ஆரம்பித்து வைத்ததின் விளைவை, எமது மக்கள் இன்று அனுபவித்து நிற்கின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

முள்ளிவாய்க்கால் பகுதியில் பீதியுடன் வாழும் மக்களை நோக்கி ஏவப்படும் எறிகணை தாக்குதலை ஜனாதிபதி தலையிட்டு உடன் நிறுத்துக

May 12th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

புலிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் முள்ளிவாய்க்கால் பகுதியில் பீதியுடன் வாழும் மக்களை நோக்கி ஏவப்படும் எறிகணை தாக்குதலை ஜனாதிபதி தலையிட்டு உடன் நிறுத்த வேண்டுமென  தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவசர கடிதம் ஒன்றை இன்று (மே. 12) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர் களுக்கு அனுப்பியுள்ளார். பல் வேறு சம்பவங்கள் காரணமாக படு காயமுற்ற 1000ற்கும் மேற்பட்ட மக்கள் இரு நாட்களுக்கு மேலாக இதுவரை எதுவித சிகிச்சையும் பெறாமல் இருப்பதனால் அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை உடன் எடுக்குமாறு ஜனாதிபதியை மேலும் அவர் கேட்டுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button