உழைக்கும் வர்க்கத்தினரே எமது நாட்டின் கொடைகள் :அமைச்சர் கருணா அம்மான்

May 1st, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

எமது நாட்டு பயங்கரவாத பிரச்சனை என்பது எமது நாட்டில் உழைக்கும் வர்க்கத்தினருக்கு தடையாக இருந்தது தற்போது எமது நாட்டின் தலைவரும் அதிமேதகு ஜனாதிபதியுமான மகிந்த ராஜாபக்ச அவர்களினால் அழிக்கப்பட்டுகொண்டே வருகிறது விரைவில் அது நமக்கு நல்ல முடிவை தரும் நாம் அனைவரும் முதலில் எமது நாட்டிக்காக உழைக்க  கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் நமது கடினமாக உழைப்பதால் மாத்திரமே எமது சமூகத்தை நல்ல சமூகமாக மாற்ற முடியும் எமது நாட்டின் அபிவிருத்தியின் மூலகற்களாக இருப்பவர்களும் இந்த  உழைக்கும் வர்க்கத்தினர்தான். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

News Release : Toronto Police Service

April 30th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

 

http://www.torontopolice.on.ca/newsreleases/

AddThis Social Bookmark Button

மீன்பாடும் தேனாடாம் மட்டு நகரில் இருந்து எம் தமிழ் உறவுகளுக்காக தமிழரை நோக்கி புதுமுகமாக வருகிறது வருகிறது – வாவிமகள்

April 29th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் வணக்கங்கள் !!! இருண்டு போய்க்கிடக்கும் எமது தமிழர்களின் வாழ்கையில் ஒளிக்கதிர் வீச கிழங்கிலங்கையின் மீன்பாடும் தேனாடாம் மட்டு நகரில் இருந்து எம் தமிழ் உறவுகளுக்காக , தமிழ் உணர்வுகளுக்காக தமிழ் மண்ணின் தாய் மடியிலிருந்து தனக்கென ஓர் இடம் பிடிக்க உலக வாழ் தமிழரை நோக்கி புதுமுகமாக வருகிறது தமிழர்களின் தாய்மகள் அது எங்கள் வாவிமகள்   www.vaavimagal.com Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ ரெலோ விடுக்கும் ஓர் உருக்கமான வேண்டுகோள்!

April 29th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

அன்பார்ந்த வவுனியா வாழ் மக்களுக்கு!

சிறீ ரெலோ விடுக்கும் ஓர் உருக்கமான வேண்டுகோள்!

வன்னியில் நடைபெறும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வந்து கொண்டிருக்கும் எமது உடன் பிறப்புக்களுக்களுக்கு சிறுவர்களுக்கான பால்மா, உடுப்புக்கள், தண்ணீர் போத்தல், பனடோல், பிஸ்கற்றுகள் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் உடனடியாகத் தேவைப்படுகின்றது. இப்பொருட்களை பொது மக்கள், வர்த்தக ஸ்தாபனங்கள், விளையாட்டுக் கழகங்கள், கிராமோதைய சபைகள் ஏனைய சங்கங்கள் ஆகியவை சேகரித்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். பொருட்களை நேரடியாக வழங்க முடியாதவர்கள் எமது சிறீ ரெலோ காரியாலத்தில் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியா மருத்துவர் முகமட் மீரா மொகைதீன் கொலைக்குக் காரணமானவர்களைச் சட்டத்துக்கு முன்னால் நிறுத்துக: ஈபிடிபி

April 24th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

வவுனியா பொது வைத்தியசாலையின் பெண் நோயியல் மருத்துவ நிபுணர் முகமட் சுல்தான் மீரா மொகைதீன் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்துக்குரியதாகும்.

கொலைக் கலாசாரம் முடிவுக்கு வருவதாக மக்கள் நம்பும் இத்தருணத்தில், தொடருகின்ற படுகொலைகள் எமது மக்களின் அமைதியான வாழ்வுக்கு எதிரான சம்பவங்களாகவே உள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலம் பெயர் தமிழர்களே தாயகத்தில் புதிய காற்று வீச அனுமதியுங்கள் : சிறீ ரெலோ

April 14th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

புதிதாக பிறந்துள்ள ‘விரோதி’ என்றழைக்கப்படும்  இப்புத்தாண்டு, ஒரு மனித ஆயுள் காலத்தை அறுபது வருடங்களாக முன்னோர்கள் வகுத்த கணக்குப்படி, இருபத்திமூன்றாவது ஆண்டாக வரும். நான்கு யுத்த காண்டங்களைக் கண்ட ஈழப் போரின் வயது அரைவாசி மனித ஆயுளை தின்று தீர்த்து விட்டது. தீராத பசிகொண்ட யுத்த பிர(பா)புக்களுக்கு, பிறந்த இந்தப் புத்தாண்டு, அறம் சார்ந்து கடன் தீர்க்கும் ‘விரோதி’யாக மலர வேண்டுமென்பதே, இந்த யுத்தத்தில் தங்கள் வாழ்வை இழந்து தவிக்கும் சாமானியர்களின் விருப்பமும் வேண்டுதலும் பிரார்த்தனையும் ஆகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மலரும் புத்தாண்டில் புதிய பாதையில் பயணிப்போம்

April 13th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

 

 கால் நூற்றாண்டுகால யுத்தம் எமக்கு ஒரு இலட்சம் அநாதைகளையும் 80 ஆயிரம் விதவைகளையும் 60 ஆயிரம் முடவர்களையும் விட்டுச் சென்றதோடு இரண்டு இலட்சம் விலைமதிப்பற்ற மனித வாழ்வை பறித்துச் சென்றுள்ளது. விதை நெல்லை அவித்துத் தின்றவன் விவசாயி ஆகமாட்டான். சொந்த மக்களின் மரணத்தில் தங்கள் அதிகார இருப்பை காப்பாற்றிக் கொள்பவர்கள் எப்படி அந்த மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களாக இருக்க முடியும்?

மலரும் இப் புத்தாண்டில்  எமது தாயகத்தை பீடித்த ’போர் நோய்’ முற்றாக ஒழியட்டும். இனங்களுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கையும் புரிந்துணர்வும் இப் புத்தாண்டில் இன்னும் வீச்சம் பெற புதிய பாதையில் பயணிப்போம்.

ரெலோநியூஸ் வாசகர் அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

AddThis Social Bookmark Button

அமைச்சர் வி.முரளிதரன் அவர்களின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி

April 13th, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

என் அன்பார்ந்த தமிழ் உறவுகளே கடந்த மூன்று தசாப்பதங்களாக நாம் அனுபவித்து வந்த துன்ப, துயரங்கள் நீங்குவதற்க்கான காலம் மலர்ந்து விட்டது, போராட்ட வரலாற்றுப் பாதை முடிவுற்று ஜனநாயக பாதையில் மக்கள் அமைதிக்கான, சுதந்திரத்திற்கான, அவர்களின் வாழ்க்கை அபிவிருத்திக்கான பணியில் இன்று நாம் கால் பதித்துள்ளோம். தமிழ் பேசும் வட,கிழக்கு மக்களாகிய நாம் சூறாவளி, சுனாமி, இனக்கலவரம், ஆயுதப்போராட்டம், இவை போன்றவைகளால் பாதிக்கப்பட்டோம். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இனமத பேதங்களற்ற ஐக்கிய இலங்கைத் திருநாட்டை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் இச் சித்திரைப் புத்தாண்டில் திடசங்கர்ப்பம் பூணுவோம்: கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்

April 13th, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

தமிழ் சிங்கள வேறுபாடுகளைக் கடந்து எல்லா மக்களும் இலங்கையில் ஒருமித்துக் கொண்டாடுகின்ற  இச்சித்திரை புத்தாண்டு தினத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். மலர்ந்திருக்கின்ற இச்சித்திரை புத்தாண்டு தினத்தில் இன,மத பேதங்களைக் கடந்து புத்தாக்க சிந்தனையுடையவர்களாகவும் எதிர் காலத்தின் தேவைகளை உணர்ந்தவர்களாகவும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தேசத்திற்கான செய்தி

April 12th, 2009 Thulasi Posted in ஊடக அறிக்கை No Comments »

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கென இலங்கை ஆயத்தமாகின்ற இக் காலப் பகுதியில் போர் தவிர்ப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள  முல்லைத்தீவின் குறுகிய கரையோரப்பிரதேசத்தில் புலிகளினால் மனிதக்  கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு பணயக்  கைதிகளாக இருக்கின்ற எமது சகோதர பிரஜைகளைப் பற்றி அரசாங்கம் கூடிய அக்கறை செலுத்துகின்றது. 

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற சமாதானத்தை மதிக்கின்ற மக்களின் அளப்பரிய அபிலாஷை,  புலிகளின் பயங்கரவாதத்தின் கீழ் சொல்லொணா கஷ்டங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் தமது சகோதர மக்களை துரிதமாக விடுவித்துக் கொள்வதாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

முத்துலிங்கம் தேவகுமார் (பிரபு) மறைவு : கண்ணீர் அஞ்சலி

April 2nd, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

         திருகோணமலைச் சேர்ந்த முத்துலிங்கம் தேவகுமார் தனது பத்தொன்பதாவது வயதில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (TELO) தன்னை இணைத்துக் கொண்ட சில மாதங்களுக்கு முன்புதான் ’83-ஜூலை நெடுங்குருதி’ திண்ணைவேலியில் இருந்து வெலிக்கடைச்  சிறை வரை பாய்ந்து இலங்கையின் அரசியல் போக்கை தலைகிழாக்கிப் போட்டது.

தமிழ் மக்களின் ‘சுயகெளரவம்’ என்பதை அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே.ஆர் தலைமை, இனவாத அரசியலாக்கி ’பயங்கரவாதம்’ ஆக சித்தரித்த போது, அதை மூர்க்கமாக எதிர்த்து முகம்கொள்ள கிளர்ந்த ஆயிரம் ஆயிரம் தமிழ் இளைஞர்களில் தேவகுமார் ஒருவர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இணைந்தபின் ‘பிரபு’ என்றழைக்கப்பட்ட இவரதும் இவரையொத்த பல இளைஞர்களின் கனவுகள், விடுதலைக்கென ஆயுதம் தூக்கியோரின் ’புதிய பயங்கரவாதம்’ கோரமான சிதைத்து அழித்து விட்டுப்போன தமிழ் அரசியல் சூழலில், நோயுற்று `இயற்கை` மரணமெய்திய இவர் போன்றோரின் ’நடுகல்’லில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் சில வார்த்தைகள் `இனி`யாவது பதியப்பட வேண்டும்.

ஆம்,

”மரணம் மகத்தானது வாழ்வு அதைவிட மகத்தானது’’

AddThis Social Bookmark Button

இன மத வேறுபாடின்றி ஒன்றிணைந்து கறுப்புக் கொடி ஏற்றுமாறு அழைப்பு : திருகோணமலை வாழ் பொது மக்கள்

March 17th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி யூட் றெஜி வர்ஸாவின் நினைவாக நாளை (மார். 18)புதன்கிழமை அனைத்து பாடசாலைகள் அலுவலகங்கள் தனியார், அரச வேலைத் தளங்கள், வியாபார ஸ்தலங்கள், கடைகள், வீடுகள், அனைத்தின் முன்னால் கறுப்புக் கொடிகளை கட்டி துன்பத்தை வெளிப்படுத்துவதுடன் துஷ்டர்களுக்கு எச்சரிக்கையையும், எதிர்ப்பையும் இன மத வேறுபாடின்றி ஒன்றிணைந்து வெளிப்படுத்த முன்வருமாறு ’திருகோணமலை வாழ் பொது மக்கள்’ சார்பில் ஒரு துண்டுபிரசும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துண்டுப் பிரசுரத்தின் உள்ளடகம் வருமாறு; Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

திருமலைச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியளிக்கிறது : ரி. எம். வி. பி.

March 17th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

கடந்த 11ம் திகதி திருமலையில் இடம் பெற்ற வர்ஸா என்கின்ற சிறுமியின் கொலையானது எம்மை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித நாகரிகமற்ற இச்செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிப்பதோடு இது குறித்து நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இக்கொலையில் சம்பந்தப்பட்ட கும்பல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளது என்பதோடு கைது செய்யப்பட்ட 6 பேர் கொண்ட குழுவில் ஒருவர் எமது அமைப்பின் ஆதரவாளர் என்பது எமக்கு பெரும் வேதனையளிக்கும் செய்தியாகும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு கண்ட அறிக்கையும் கண்ணீர் அஞ்சலியும் : சிறீ-ரெலோ

March 15th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

கடந்த புதன்கிழமை (மார். 12) திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட தரம் ஒன்றில் கல்வி பயிலும் 6 வயதான யூட் றெஜி வர்சா என்ற சிறுமியின் கொலை குறித்து சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ஊடகப்பிரிவு) இன்று (மார். 15) திருகோணமலையில் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செல்வி ஜுட் றெஜி வர்ஷாவின் கொலைக்கு தமது வன்மை மிகுந்த கண்டனத்தை உறுதியுடன் வெளிப்படுத்தும் அதேவேளை அச்சிறுமியின் மறைவுக்கு தமது கண்ணீர் அஞ்சலியும் செலுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. சிறீ-ரெலோ வெளியிட்ட துண்டுப்பிரசுரம் முழுமையாக;   Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் ஈனச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் : சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (பிரித்தானியா)

March 12th, 2009 admin Posted in ஊடக அறிக்கை No Comments »

சிறீலங்கா முஸ்லிம் தகவல் மையம் (பிரித்தானியா) கொட்டப்பிற்றிய ஜிம்மா பள்ளிவாசல் அக்குறஸ்ஸ மீலாத்துந் நதி விழாவில் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியின் ஈனச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button