அவசரகாலச் சட்ட நீடிப்பு வாக்களிப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் தவிர்த்து கொண்டார்

அவசரகாலச் சட்டம் 95 மேலதிக வாக்குகளினால் இன்று  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவசரகாலச் சட்ட நீடிப்புக்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக ஏழு வாக்குகளும் அளிக்கப்பட்டன. வாக்களிப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்குச் சமுகம் அளித்திருக்கவில்லை. அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வாக்களித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அவசரகாலச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்த அதே வேளை இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கிஷோர் வாக்களிப்பில் கலந்து கொள்வதைத்  தவிர்ந்துக் கொண்டார்.

இது தொடர்பில் கிஷோர் எம்.பி கருத்துத் தெரிவிக்கையில், வட பகுதி மக்களுக்காக ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தாம் முழு அளவிலான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார். ஆயுதக் கலாசாரமற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அர்ப்பணிப்பையும் தாம் செய்யப் போவதாகவும் அவர் கூறினார். யுத்தம் என்னும் துர்ப்பாக்கிய கால கட்டம் இனி ஒரு போதும் இலங்கையில் உருவாகாதென்றும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply