நிவாரணக் கிராமங்களுக்கு யசூசி அகாசி நேற்று விஜயம்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கை வந்தடைந்த ஜப்பானிய விஷேட தூதுவர் யசூசி அகாசி நேற்று காலை வவுனியா மெனிக் பாமிற்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.அங்கு தங்க வைக்கப் பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை அவர் கேட்டறிந்ததோடு அரச அதிகாரிகளுடனும் பேச்சு நடத்திய தாக வவுனியா மாவட்டச் செயலகம் கூறியது.
அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம். பி. உயர்படை அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ஸ் மற்றும் ஜப்பானிய தூதரக அதிகாரிகள் ஆகியோரும் ஜப்பானிய தூதுவருடன் முகாம்களுக்கு விஜயம் செய்தனர்.
நிவாரணக் கிராமங்களை பார்வையிட்ட ஜப்பானிய விசேட தூதுவர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் தொடர்பில் திருப்தி தெரிவித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக வட்டாரங்கள் கூறின. ஜப்பானிய தூதுவர் இன்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்த இருதரப்பு உறவுகள் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், ஜப்பானினூடாக வழங்கப்படவுள்ள உதவிகள் என்பன குறித்து பேச்சு நடத்த உள்ளார்.
நாளை அவர் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியது.
ஜனாதிபதியுடனான சந்திப்பை தொடர்ந்து யசூசி அகாசி நாடு திரும்பவுள்ளார். ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி 18வது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply