வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு

ஐக்கிய நாடுகள் அவையின் எச்சரிக்கையையும் மீறி, வடகொரியா அணு ஆயுதங்கள் தயாரித்ததால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதன் மீது பொருளாதார தடைகள் விதித்தன. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு அடாவடி காட்டியது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இருமுறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அணு ஆயுத தயாரிப்பை கைவிடுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை வடகொரியா ஏற்கவில்லை. இதனால், பொருளாதார தடையை விலக்கிக் கொள்ள டிரம்ப் மறுத்துவிட்டார். இதன்பிறகு வடகொரியா அவ்வப்போது மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹாம்யோங் மாகாணத்தில் உள்ள சோன்டாக் பகுதியிலிருந்து 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக, தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த வாரம் சிறிய தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா சோதனை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply