டிரம்புக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதா? : வெள்ளை மாளிகை விளக்கம்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த கொடிய நோயால் 26 பேர் உயிரிழந்த நிலையில், 700-க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததால் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த எம்.பி.க்கள் 5 பேர் தாங்களாகவே முன் வந்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.
அதே போல் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு பெண் எம்.பி.யும் கொரோனா பீதியால் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.
இதனிடையே டிரம்ப் பங்கேற்ற மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, டிரம்புக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றதா என கேள்வி எழுந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள வெள்ளை மாளிகை ஜனாதிபதி டிரம்புக்கு வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்றும், அவருக்கு அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறியுள்ளது.
மேலும் டிரம்ப் வழக்கம் போல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply